தேதி: April 4, 2006
பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
ராகி மாவு - கால் கிலோ
தேங்காய் - ஒரு மூடி
ஏலக்காய் - 5
நாட்டு சர்க்கரை - 150 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
பயத்தம் பருப்பு - 50 கிராம்
ராகி மாவில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதனுடன் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து அதை இட்லி பானையில் வைத்து அரை மணி நேரம் வேக வைக்க வேண்டும்.
பயத்தம் பருப்பையும் தனியே வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் வேக வைத்த பயத்தம்பருப்பையும், துருவி வைத்த தேங்காய், தூள் செய்த ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை வேக வைத்த ராகி மாவுடன் நன்கு கலக்கவும்.