தர்பூசணியை கொண்டு ஃப்ரூட் கார்விங் செய்வது எப்படி?

தேதி: October 22, 2009

4
Average: 4 (5 votes)

கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் தனது குறிப்புகளை கொடுத்து கொண்டிருக்கும் திருமதி. வனிதா வில்வாரணிமுருகன் அவர்கள், இந்த சுலபமான ஃப்ரூட் கார்விங் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார்.

 

தர்பூசணி - ஒன்று
கத்தி
பீலர்
பென்சில்

 

தர்பூசணியை கொண்டு ஃப்ரூட் கார்விங் செய்வதற்கு தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு தர்பூசணிப்பழத்தின் பாதி பழத்தின் தோலை மட்டும் நீக்கவும். தோல் நீக்கிய பகுதியின் நடுவில் ஒரு வட்டம் வரையவும். சற்று இடைவெளிவிட்டு மற்றொரு வட்டம் வரைந்துக் கொள்ளவும்.
கத்தியை பயன்படுத்தி இடைவெளிவிட்டிருக்கும் பகுதியை மட்டும் செதுக்கி எடுக்கவும்.
இப்பொழுது நடுவில் இருக்கும் வட்டத்தில் சின்ன சின்ன கட்டங்கள் வரைந்துக் கொள்ளவும். மேலே செதுக்கிய வட்டத்தை போலவே இரண்டு கோடுகளாக வரைந்து வெட்டி எடுக்க வேண்டும்.
செதுக்கிய வட்டத்தை சுற்றிலும் படத்தில் உள்ள வடிவத்தை போல் கத்தியால் கோடுகள் போட்டு வெட்டி எடுக்கவும்.
அதன் ஒவ்வொரு முனையையும் இணைப்பதற்கு " ^ " கேப் வடிவ வெட்டுகளை இதழ்கள் போல் வரைந்துக் கொள்ளவும்.
" ^ " கேப் வடிவ இதழ்களின் நடுப்பகுதியில் டைமண்ட் வடிவத்தில் வரைந்து அந்தபகுதியையும் செதுக்கி எடுக்கவும்.
வெட்டிய பூ இதழ்களின் ஓரத்தில் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் அதேப்போல் " ^ " கேப் வடிவ இதழ்களை வரைந்துக் கொள்ளவும். இப்பொழுது பூ இதழ்களின் ஒரத்தில் இடைவெளிவிட்ட பகுதியை செதுக்கி எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் ஓவ்வொரு பூ இதழ்களின் மேல் முனையை இணைப்பது போல் இதழ்கள் வரைந்துக் கொள்ளவும். அதன் நடுப்பகுதியில் டைமண்ட் வடிவில் வரைந்து அந்தபகுதியை வெட்டி எடுத்து விட்டு, இதழ்களின் ஓரங்களை இரட்டைகோடுகளாக வரைந்து செதுக்கி எடுக்கவும்.
பூ இதழ்களின் வலதுப்பக்கத்தில் இதழ்களை ஒட்டிவருவதுபோல் இலை வடிவத்தை வரையவும்.இதன் ஓரங்களையும் இரண்டு கோடுகளாக வரைந்து வெட்டி எடுக்கவும். அதன் நடுவே நரம்பு போன்று வரைந்து அந்தப்பகுதியையும் வெட்டி எடுக்கவும்.
இதேப்போல் கிடைக்கும் பழத்தின் அளவுக்கேற்ப இலைகளும், பூ இதழ்களுமாக சுற்றிலும் கத்தியால் வரைந்து செதுக்கி எடுக்கவும். மிகவும் சுலபமாகவும், அழகாகவும் செய்யக்கூடிய ஃப்ரூட் கார்விங் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சகோதரி வனிதா! உங்களின் கை வண்ணம் கண்டு வியந்துபோனேன். உங்கள் திறமைகளை இதற்குமுன்பும் கண்டிருந்தபோதும் இப்பதான் உங்களை நான் வாழ்த்துகிறேன்.
ஹைஷ் அண்ணனின் Picasa அல்பத்தில் காய்கறி வேலைப்பாடுகள் படங்களை பார்த்து அதிசயித்திருந்தேன். அதை உங்கள் கைவண்ணத்தில் காட்டி வியக்க வைத்துவிட்டீர்கள். எத்தனை பொறுமையாக தர்பூசணியில் அழகாக செதுக்கியிருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் பாராட்டுக்கள் உங்களுக்கு! (ஹைஷ் அண்ணனின் காய்கறி வேலைப்பாடுகள் படங்கள் உங்களின் கைவண்ணம்தானோ ;) )
மேலும் மேலும் உங்கள் திறமைகள் வளர வாழ்த்துக்கள்!!
வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாழ்க வளமுடன்!

மிக்க நன்றி.

வாவ் வனிதா சூ...ப்பர்ப். எல்லவற்றிலும் கலக்கும் சகலகலாவல்லிக்கு வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ரொம்ப அழகா சூப்பராயிருக்கு.பொறுமையா செய்திருக்கிங்க.பாராட்டுக்கள்!!

வனி! ஒரே ஒரு டவுட்டு... இப்படி வெட்டி போட்டோ பிடிச்சதும் பழத்தை என்ன செய்தீங்க??? அதையும் ஒரு போட்டோ போட்டு இருக்கலாமில்ல... நைஸ் வொர்க்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஃப்ரூட் கார்விங் என்றவுடன் நம்ம பாப்பியோ என்று நினைத்தேன்,அட அப்புறம் நம்ம வனிதா,சூப்பர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு வனிதா,
அருமை. :)
அழகழகாக குறிப்புகள் கொடுத்து அசத்துகிறீர்கள். பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் கைவண்ணம்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கும், அண்ணா'வுக்கும் எனது நன்றிகள்.

மிக்க நன்றி இளமதி. நான் இது போல் கார்விங் செய்தது இதுவே முதல் முறை. இமா அவர்கள் பூசணிக்காய் வேலையை நான் செய்ததை பார்த்து என் தங்கை அவளிடமிருந்த சில விருந்தில் எடுத்த படங்களை காட்டினாள். பார்த்து இப்படி தான் செய்திருக்க வேண்டும் என்ற யூகத்தில் செய்த முதல் முயற்சி இது. உங்கள் பின்னூட்டம் பார்க்க மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. :)

மிக்க நன்றி கவிசிவா. :)

மிக்க நன்றி மேனகா.... :)

மிக்க நன்றி இலா.... சந்தேகமே வேண்டாம், என் அப்பா, தங்கை வந்து பார்க்கும் வரை வைத்திருந்தேன், காட்டி முடித்த அடுத்த நிமிஷமே வெட்டி ஆ போட்டுகிட்டேன்.... ;)

மிக்க நன்றி ஆசியா.... இப்போது தொடர்ந்து உங்களை அறுசுவை பதிவுகளில் காண முடிவது மகிழ்ச்சியாக உள்ளது. :)

மிக்க நன்றி இமா.... எல்லாம் நீங்க போட்ட பிள்ளையார் சுழி தான். அதுக்காக உங்களுக்கு என் நன்றிகள் முதலில். செபா ஆன்ட்டி நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா ரொம்ப‌ நல்லா இருக்கு... அசத்துரிங்க.... வாழ்த்துக்கள்....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மிக்க நன்றாக இருக்கு. எப்படி இருக்கிங்க வனி, குட்டி பென் எப்படி இருக்கா? இந்தியா போனாலும் போனிங்க எல்லா விதத்திலும் உங்க கைவண்னம் காட்டி எங்களை எல்லாம் அசத்திவிட்டிங்க.
சரி இன்னும் என்னவெல்லாம் என்று ஒவ்வொன்றாக போடுங்க.

மிக்க நன்றி பிரபா.... :)

மிக்க நன்றி விஜி.. நானும் மகளும் நலம். நீங்க நலமா? :) இங்கு சாபிடுவது தூங்குவதை தவிற வேறு வேலை இல்லை.... அதான் இதெல்லாம் செய்ய முடியுது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி,
நிஜமாவே நீங்க சகலகலாவல்லிதான், சந்தேகமே இல்லை போங்க. எழுத்து மட்டுமின்றி (சிரியா தொடர்), இன்னும் நிறைய விஷயங்களில் உங்க கைவண்ணம் வெளிப்படுகிறது. இந்த ப்ரூட் கார்விங், ரொம்ப அழகா செய்திருக்கிங்க. உங்க மெஹந்தி டிசைன்ஸ் கொடுத்த இன்ஸ்பைரேஷன்ஸ் இங்கே அறுசுவையிலே பார்த்தோமே! : ). அப்புறம் அந்த மெரூன் கலர் ஸாரி பெயின்டிங் அருமையிலும் அருமை! மொத்தத்தில் எல்லாமே சூப்பர், சூப்பர்!! வாழ்த்துக்கள் வனிதா!

பி.கு. பை தி வே, என் பொண்ணுக்கு ரொம்ப நாளா போடனும், போடனும்னு நினைத்திருந்த‌ மெஹந்தி ஒரு வழியா போன வாரம் தீபாவளி அன்று போட்டுவிட்டேன். கூடிய சீக்கிரம் நம்ம அட்மினுக்கு போட்டோ அனுப்பி வைக்கிறேன். பாருங்கள்!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

வனிதா ரொம்ப கலக்கலான கார்விங் சூப்பர் எல்லாத்துலேயும் கலக்கலா நீங்கள்.

மருதானி டிசைன் ரொம்ப அருமை எனக்கு தெளிவ புரிந்த வண்ணம் இருந்தது, அதில் ஒரு சின்ன டிசை எடுத்து பொட்டேன்.

Jaleelakamal

ரொம்ப அழகா இருக்கு உங்களுடைய இந்த ப்ரூட் கார்விங் வேலைப்பாடு. வாழ்த்துக்கள் வனிதா அக்கா.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

கலக்கறீங்க வனிதா.. ரொம்ப அழகா வந்திருக்கு உங்க மெஹந்தியைப் போலவே.. நல்ல கைத் திறமைப்பா உங்களுக்கு..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மிக்க நன்றி சுஸ்ரீ.... சீக்கிரமே உங்க மகள் கையை மருதாணியோடு பார்க்க ஆசை. :)

மிக்க நன்றி ஜலீலா... உங்கள் பதிவை இந்த பக்கத்தில் பார்த்ததே மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. :) நலமாக இருக்கீங்களா??

மிக்க நன்றி சுபா... :)

மிக்க நன்றி சந்தனா... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Simply Superb Vanitha.
Regards,
Selvi

செல்வி... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta