முட்டை தேங்காய் வறுவல்

தேதி: October 24, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முட்டை - 2
தேங்காய் துருவல் - 1 1/2 மேசைகரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 மேசைகரண்டி


 

வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு, பொடியாக வெட்டிய மிளகாய்வற்றல், கறிவேப்பிலை தாளித்து தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும்.
அதனுடன் உப்பு மற்றும் முட்டை உடைத்து சேர்த்து கிளறவும்.
முட்டை வெந்து உதிரியானதும் இறக்கி சூடாக பரிமாறவும்.


ரசம் சாதத்தோடு நல்ல காம்பினேஷன். தேங்காய் எண்ணெயில் தாளித்தால் சுவையும் மணமும் கூடும்.

மேலும் சில குறிப்புகள்