urgent help

எல்லோருக்கும் வணக்கம், எனக்கு ஒரு உதவி வேண்டும், எந்த பகுதியில் போட்டால் உடன் பதில் வரும் என்று யோசித்து இதில் போட்டுள்ளேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும். நான் நேற்று முறுக்கு செய்தேன், அப்பொழுது எண்ணெய் வெடித்து 2 கையிலும் பட்டு கொப்பழமாக இருக்கிறது, நான் உடனடியாக விக்கோ டர்மரிக் போட்டேன், இருந்தும் அது அப்படியே இருக்கிறது, அது போவதற்கு என்ன செஇய வேண்டும், யாரவது உடனடியாக பதில் சொல்லுங்கள். அந்த தழும்பு இனிமேல் போகுமா? போகாதா? please....... yaravathu solungalen

apply coconut oil and see.sometimes that'll help.for me, it helprd.

prithi

ஏன் எண்ணையில் பொரிக்கும் அயிட்டம் செய்யும் போது பார்த்து செய்ய கூடாதா?

நிவ்யா கிரீம் இருந்தால் உடனே போடுஙக்ள் , பிரியா சொன்ன மாதிரி எண்னை நல்ல கொழ கொழன்னு தட்வுங்கள்.

பர்னால் இருந்தால் வாங்கி போடுங்கள்

மற்ற தோழிகளும் பதில் தருவர்கள்.

Jaleelakamal

Silverex ointment கூட போடலாம்
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்

தேங்காய் எண்ணையில் களிபாக்கு போட்டு வெயிலில் காய வைத்து அதை எடுத்து போட்டால் புண் விரைவில் ஆறிவிடும் தழும்பும் இருக்காது

I LOVE ARUSUVAI.COM

ப்ரியா அக்கா, ஜலீலா அக்கா, அனாமிகா அக்கா, ஜெசி அக்கா எல்லோருக்கும் மிக்க நன்றி, உடனே பதில் போட்டதற்கு.நான் தேங்காய் எண்ணெய்,silver ex ointment போடுகிறேன், களி பாக்கு கிடைக்கவில்லை.
ஜலீலா அக்கா நான் பார்த்து தான் செய்தேன் அக்கா, முறுக்கு வெடிக்கும் என்பது எனக்கு இப்பொழுது தான் தெரியும், முறுக்கு வெடிட்க்குமா? ஏன் வெடிக்கறது? அதுவும் தெரிந்தால் சொல்லுங்கள் அக்கா.

I had the same experience while making 'Thattai' and I did the following..

First u have to apply 'Bactine- pain releiver and cleansing spray'.Continue this for few days..

The skin gets peeled itself after few days.Now, stop the spray and start applying 'Neosporin - antibiotic ointment' for the wound.

This really works very good as it was prescribed to me by a walgreens pharmacist..

MaliniKannan

உங்கள் கையில் உள்ள ஈரம் எண்ணையில் பட்டிருக்கும். இல்லை எண்ணையில் தண்ணீர் தெரித்து இருக்கும்.
எதுவா இருந்தாலும் இது போல் எண்ணை சட்டி முன் நிறீகும் போதுஅப்ப அப்ப கையை துடைத்து கொள்ள, ஒரு காய்ந்த டவலையும் பக்கத்தில் வைத்து கொள்ளனும்

Jaleelakamal

வணக்கம் வந்தனம்...கொப்பளங்கள் இல்லாமல் குணமடைய - வாழை குருத்தை பிரித்து தீப்புண்ணில் கட்ட கொப்பளங்கள் இல்லாமல் குணமடையும்.

என்றும் உங்கள்,
அருண் பிரசங்கி

ஹலோ, சகோதரி எல்லோருக்கும் என் நன்றி, நீங்கள் கொடுத்த குறிப்புகளினால் என் புண் முழுமையாக சரி ஆகிவிட்டது, தழும்பும் அந்த அளவிற்கு இல்லை, உடனடியாக பதில் போட்ட உங்கள் எல்லோருக்கும் என் நன்றி

மேலும் சில பதிவுகள்