இடையாம்புளி

வழங்கியவர் : kavisiva
தேதி : செவ்வாய், 27/10/2009 - 10:42
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- சின்ன வெங்காயம் - 20
- மிளகாய் வற்றல் - 6 அல்லது 7
- புளி - நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
- சின்ன வெங்காயத்தை தோலோடு தணலில் அல்லது கேஸ் பர்னரில் வைத்து சுட்டு எடுக்கவும்.
- மிளகாய் வற்றலையும் இது போல் அதிகம் கரிந்து விடாமல் சுடவும்.
- சுட்ட வெங்காயத்தின் தோலை உரித்து விட்டு மிளகாய் வற்றல், புளி, உப்போடு சேர்த்து இடிகல்லில் இடித்து எடுக்கவும்.
- மிக்ஸியில் செய்வதாக இருந்தால் விப்பரில் இருமுறை சுற்றினால் போதும்.
- அரைத்த கலவையில் எண்ணெய் கலந்து எந்த வகை கஞ்சியோடும் பரிமாறலாம்.
Note:
வயலில் வேலையாட்களுக்கு மதிய உணவாக சத்தான உளுந்தங்கஞ்சியோடு பரிமாறப்படும் துவையல் வகை. மிகவும் சுவையாக இருக்கும். வயலோரத்தில் அமர்ந்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே தனி. இடிகல்லில் தட்டும் போது சிறிது கொதிக்கும் கஞ்சி தண்ணீரை சேர்த்தால் சுவை இன்னும் கூடும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
23 sec முன்பு
4 நிமிடங்கள் 32 sec முன்பு
5 நிமிடங்கள் 22 sec முன்பு
13 நிமிடங்கள் 36 sec முன்பு
17 நிமிடங்கள் 25 sec முன்பு
21 நிமிடங்கள் 33 sec முன்பு
30 நிமிடங்கள் 41 sec முன்பு
37 நிமிடங்கள் 43 sec முன்பு
42 நிமிடங்கள் 51 sec முன்பு
52 நிமிடங்கள் 46 sec முன்பு