அடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை கற்றுக்கொள்வது எப்படி? பாகம் - 2

தேதி: October 31, 2009

4
Average: 3.7 (14 votes)

அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும் விதமாக அடிப்படை எம்ப்ராய்டரி தையல்களை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அவர்கள் வடிவமைத்து காட்டியுள்ளார்.

 

துணி
ஃபிரேம்
எம்ப்ராய்டரி நூல்
ஊசி

 

அடுத்து மிகவும் எளிதான இந்த வகை தையலின் பெயர் French Knot. முதலில் நூலை அடிவழியாக குத்தி எடுக்கவும்.
பிறகு ஊசியின் மேல் நூலை இரண்டு முறை சுற்றவும்.
இதனை நன்றாக பிடித்து கொண்டு, முதலில் நூலை மேலே கொண்டு வந்த இடத்தின் அருகிலேயே மீண்டும் குத்தி இழுக்கவும். இப்பொழுது அழகான முத்து போன்ற "French Knot" தையல் தயார்.
அடுத்ததாக "Filling Stitch" (அ) "Satin Stitch" எனப்படும் தையல். இந்த தையல் போடுவதற்கு முன்பு உங்களுக்கு விருப்பமான வடிவத்தை துணிகளில் வரைந்து கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் வரைந்த கோடுகளுக்கு இடையில் இருக்கும் இடத்தை நூலால் நிரப்பவும்.
அடுத்ததாக கற்றுக்கொள்ளும் இந்த தையலை "Line Stitch" (அ) "Stem Stitch" (அ) "Outline Stitch" எனப்படும். வழக்கம் போலவே அடிவழியாக விட்டு ஊசியை இழுக்கவும்.
இப்பொழுது அந்த நூலை விலக்கி பிடித்து கொண்டு படத்தில் உள்ளது போல் ஊசியை கோர்க்கவும்.
இது சாதாரண தையல் போன்று இருக்கும். ஆனால் அதன் நடுப்பகுதியில் நூல் வெளியே வந்திருக்கும்.
மீண்டும் இடைவெளிவிட்டு படத்தில் உள்ளது போல் ஊசியை குத்தி எடுக்கவும்.
இதேப்போல் தொடர்ந்து வரிசையாக போடுவதுதான் "Line Stitch"
"Split Stitch" என்கிற மற்றொரு வகை தையல். முதலில் ஊசியை கீழிருந்து குத்தி மேல் நோக்கி இழுக்கவும். இப்போது அதன் எதிர் திசையில் படத்தில் காட்டியுள்ளபடி குத்தவும்.
அந்த நூலை இரண்டு பாகமாக பிரிப்பது போல் அதன் நடுவே ஊசியை விட்டு இழுக்கவும். (அதாவது நூலில் 6 இழைகள் இருந்தால் வலது பக்கம் 3 இழைகள், இடதுப்பக்கம் 3 இழைகள் வருவது போல் பிரிக்க வேண்டும்.)
இதைப் போல் தொடர்ந்து போடுவதுதான் "Split Stitch" தையல்.
இதுவரை சொல்லப்பட்டுள்ள இந்த தையல் வகைகளை மட்டுமே கொண்டு போடப்பட்டுள்ள ஒரு மாதிரி எம்ப்ராய்டரி டிசைன். இவை அனைத்துமே எம்ப்ராய்டரிக்கு மிகவும் அடிப்படை தையல்கள். இதனை கற்று கொண்டாலே குழந்தைகளின் ஆடைகள், புடவைகள், சல்வார் என அனைத்திலும் அழகான எம்ப்ராய்டரியை நீங்களே போடலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

உங்களுடைய எம்ப்ராய்டரி மிகமிக வடிவாக இருக்கின்றது அதனை நான் செய்துபார்க்கலாம் என நினைக்கின்றேன் அதில் நீங்கள் கூறிய எல்லா தையலும் போடப்பட்டுள்ளதா? நீங்கள் படத்தில் போட்டு காட்டிய எம்ப்ராய்டரிக்கு Filling Stitch(அ)Satin Stitch,Line Stitch,Split Stitch 3வகை தையலும் போடப்பட்டுள்ளதா?ஒவ்வொன்றும் எங்கே? எங்கே? போடப்பட்டுள்ளது என்ற விளக்கத்தை எனக்கு தரவும்,

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன் ,

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

குறிப்பை வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி. :)

உத்ரா.... உங்க பதிவை பார்க்க சந்தோஷமா இருக்கு. எங்க அரட்டை பக்கம் பார்க்க முடியல?? சின்ன ஊசி போதும், நான் படம் எடுக்கும் போது ஊசியே கண்ணுக்கு தெரியலன்னு பெரியதை பயன்படுத்தினேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

துஷ்யந்தி... மிக்க நன்றி. :) எல்லா வகை தையலும் பயன்படுத்தல.

பூவுக்கு - Filling stitch;
இலைக்கு - Detached chain stitch;
மொட்டுக்கள் - French knot;
கொடிக்கு - Stem Stitch;

போட்டு பாருங்கள், உங்கள் பின்னூட்டத்தையும், உங்கள் வேலைப்பாட்டையும் அனுப்புங்கள்.... பார்க்க காத்திருக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் மெஹந்தி டிசைன்கள், ஃப்ருட் கார்விங், பெயின்டிங், எல்லாமே உங்கள் கைதிறனை நன்கு வெளிப்படுத்துகின்றன. அவ்வப்போது பின்னூட்டம் போடமுடிவதில்லை. எல்லாவற்றுக்கும் எனது பாராட்டுக்கள்.
சுகப்பிரசவமாகி நீங்களும் குழந்தையும் நலமாக இருக்க எனது பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்.
அன்புடன்,
செபா.

மிக்க நன்றி செபா ஆன்ட்டி... நலமா இருக்கீங்களா? உங்களை கொஞ்ச நாளா காணோமே'னு இமா'வை கேட்டுகிட்டு இருந்தேன், :( இப்போ அவங்களையும் காணோம். நலமா இருக்காங்களா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dear mam
It is very very useful and beautiful. Thanks a lot

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சுளா... மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta