அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

ஹாய் தோழிகள் யாவரும் நலமா?

செல்வி அக்கா நலமா? நான் உங்களிடம் இப்போதுதான் முதன் முதலில் பேசுகிறேன் .

உங்களுடைய சமையல் ரொம்ப பிடிக்கும் .எப்படி (இப்படி )எல்லா வித சமையலையும் கலந்து ,அதாவது பள்ளிபாளையம் ,செட்டிநாடு ,கொங்கு ,கர்நாடகா .எல்லாவற்றிலும்

அசத்துகிறிர்கள். அதிரா செய்த குறிஞ்சா கீரை (வரை )செய்திர்களா .எப்படி இருந்தது

டேஸ்ட்.நம் ஊரில்கிடைகிறதா .என் குடும்பத்துக்கு கொங்கு சமையல் ரொம்ப பிடிக்கும் .

வாழ்க வளமுடன் .அன்புடன் ஐஸ்வரியலக்ஷ்மி .

அன்பு ஐஸ்வர்யா,
நான் நலமே. அதனால் என்ன, இனி அடிக்கடி பேசுவோம்.

என் சமையலை நீ இன்னும் சாப்பிட்டதே இல்லையே:-)
பிறந்தது சேலம் மாவட்டம் (இப்ப நாமக்கல்). கொஞ்சகாலம் தஞ்சை, பிறகு திருச்சி, தர்மபுரி, ஈரோடு, இப்ப பாண்டி என நிறைய ஊர் சுத்தியாச்சு. பக்கத்து வீட்டில் ஒரு ஆச்சி, மலையால நர்ஸ், கன்னட மாமி. இப்படியாக பல சமையலையும் கற்றுக் கொண்டேன். கல்யாணம் ஆன போது எனக்கு சமைக்கவே தெரியாது. இப்ப ஏதோ பரவாயில்லை:-)

இல்லை. அது குறிஞ்சா தானான்னு முதலில் அதிராவிடம் உறுதி செய்யணும். இனி போட்டோ எடுக்க பிரச்னை இல்லை. எடுத்து போடறேன்.

கொங்கு சமையல் பிடிக்குனா அந்தப் பக்கமா?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் செல்வி அக்கா ,உங்க பதிலுக்கு நன்றி .பள்ளிபாளையம் சிக்கன் ,உளுத்தங் கஞ்சி,பருப்பு கடைசல் .ஓட்டல் பிரியாணி
லெமன் சாதம்,இன்னும் நிறைய .நான்செய்து இருக்கிறேன்

நான் பிறந்தது நாமக்கல் நீங்கள் அங்கு எங்கு இருந்திர்கள் . .

வாழ்க வளமுடன் .அன்புடன் ஐஸ்

ஹாய் ஐஸ்,
நாமக்கல்லில் நான் சிறிது காலம் வேலை பார்த்தேன். பொத்தனூர் சொந்த ஊர். நாமக்கல்லில் எல்லா இடமும் தெரியும். அங்கு இப்பவும் எங்களுக்கு சைட் இருக்கு.
நாமக்கல்லில் எந்த இடம்?
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி அக்கா பொத்தனூர் கேள்வி பட்டுஇருக்கிறேன் .நாமக்கல் to மோகனூர் சாலையில் உள்ளது .அணியாபுரம் ..அங்கு இருக்கும் ஹைஸ்ஸ்கூலில் நான் படித்தேன் .g h பக்கத்தில் இருக்கிறார்கள் .பரமத்தி ரோடில் இருக்கும் வல்லிபுரம் ஸ்டாப் தான் என் ஹஸ் ஊர்.எனது சொந்தமெல்லாம் சிட்டி லேயே இருக்கிறார்கள் .

வாழ்க வளமுடன் அன்புடன் ஐஸ் .

நான் இன்னும் சில தினங்களுக்கு வர இயலாது... அதனால் என்னை இந்த இழையில் விசாரித்த அனைவருக்கும் நான் நலம், என் மகளும் நலம்.... விசாரிக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள் பல. என்னை விசாரிக்க மறந்தவங்களுக்கு இப்போதைக்கு போன போதுன்னு விடுறேன்.... வந்து பென்ச் மேல ஏத்துறேன். ;) அது வரை சந்தோஷமா அரட்டை அடிங்க மற்ற தோழிகளோட.

செந்தமிழ் செல்வி....ரொம்ப நாளைக்கு பின் அரட்டை பக்கம் வந்திருக்கீங்க. பட்டிமன்றம் பக்கமும் வாங்கோ ப்ளீஸ்.

எல்லாரும் நலம் தானே..... தனி தனியா பதிவு போட முடியல. மன்னிச்சுடுங்க. உங்க எல்லாரையும் வனி ரொம்ப மிஸ் பண்றா..... :)

99'கு வந்துடுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு ஐஸ்,
அணியாபுரம் நல்லாவே தெரியும். வள்ளிபுரமும் தெரியும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹாய் தோழிஸ் அனைவரும் நலமா? சாரி எல்லருக்கும் லேட்டா பதில் போடுரதுக்கு....

ஜீனோ நலமா? நீங்க இப்படி சொல்லிட்டு ஆசை அப்படி சொல்லிட்டிங்கலே...///பிரபாக்கா, இன்று பிரேக் பாஸ்ட் : பூரி -கிழங்கு- தேங்காய் சட்னி. லன்ச் : சாதம்-பருப்பு-ரசம்-சேனைகிழங்கு பொரியல். டின்னர்: இட்லி - லெஃப்ட் ஓவர் தேங்காய் சட்னி - கொத்துமல்லி சட்னி - சாம்பார். :)))))))))))))))))))))))))))))
))))))) இதெல்லாம் சாப்பிடனும்னு ஜீனோக்கு ஆசை..நிஜத்தில் என்ன நடந்ததுன்னு ஜீனோ சொல்லாது..நீங்கள் இதே மெனுவை ஜீனோ வீட்டு மெனுவாய்க் கணக்கெடுக்கவும். ////
டோராவையும், குட்டி ஜீனோ, குட்டி டோராவையும் கூட்டிக்கிட்டு எங்க வீட்டுக்கு வாங்க.... நான் கட்டாயம் சொய்து தெரேன்... தம்பிக்கு இது கூடவா செய்ய முடியாது..

வாணி நலமாப்பா? குழ்ந்தைகள் நலமா? சிரியல் சாப்பாடா ஓ அப்படி வேர இருக்கா? /////.நிஜத்தில் என்ன நடந்ததுன்னு ஜீனோ சொல்லாது//
பிரபா, வேறு என்ன நடந்திருக்கும் ......சீரியல் தான். காலை ப்ரெக்பாஃஸ்ட் சீரியல், லன்ச் சீரியல், டின்னர்.......(cereal) . ////

செபா அம்மா ந‌ல‌மா இருக்கிங்க‌லா? அங்க‌ கால‌ நிலை எப்ப‌டி இருக்கு? இமா அம்மா ந‌ல‌மா? ////இமா அம்மா,
ஆனாலும் இவ்வளவு சேட்டை செய்ய கூடாது.ம்ம்ம்ம்ம்முடியலப்ப இந்த இமாஅம்மாவை சமாளிக்க ......
பாவம் செபாஅம்மா, இந்த சேட்டையே பார்த்தே அமைதியா ஆகிட்டாங்க.உங்க கூட இருந்தா ரொம்ப ஜலியா இருக்குமே, வரலாமா................///// இமா அம்மா இப்ப‌டி சாட்டை ப‌ன்னிரிங்க‌... செபா அம்மா உங்க‌ பாடு ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்....

சுபத்ரா///பிரபா நலமா? காலை வாரி விட்டு இல்லைன்னு சொன்ன எப்புடிப்பா? ஒழுங்கா எனக்கு ஜீஸ், பலக்காரம் எல்லாம் தாங்க கால்ல அடிப்பட்டது சரியாக.(ஜீனோ ,இமாஅம்மா comments எல்லாம் கூடாது)////
ஜீஸ் இந்த‌ப்பா உங்க‌லுக்கு ல‌ம‌ன் ஜீஸ் புடிக்குமா? இந்தாங்க‌.... ஜீனோ இமா அம்மா எங்க‌ போனிங்க‌? வாங்க‌ வந்து பாருங்க‌...

செல்வி அம்மா நான் வ‌ந்துட்டேன்.... நீங்க‌ வ‌ந்துட்டிங்க‌ நான் லேட்டா தான் வ‌ந்தேன்..... ///பிரபா,
அரட்டைக்கு நானும் வந்துட்டேன்.///// இப்ப‌ உங்க‌ உட‌ம்பு ப‌ர‌வாயில்லையா அம்மா?

பிரீத்தி ந‌ல‌மா? குழ்ந்தை நலாம‌?

ஐஸ்வரியலக்ஷ்மி அம்மா ந‌ல‌மா? உங்க‌ வாழ்த்துக்க‌லுக்கு ந‌ன்றிம்மா..... இப்ப‌ பெங்க‌ள்ளூர் கால‌ நிலை எப்ப்டி இருக்கு?

வ‌னிதா ந‌ல‌மா? குழ்ந்தை ந‌ல‌மா? டாகுரை பார்த்திங்க‌லா? ( செக்க‌ப்புக்கு )

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

மேலும் சில பதிவுகள்