அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

உஙகளுக்கு பல தடவெ mailஅனுப்பிஉள்ளேன்.ஏன் பதில் போடவில்ளெ.
i feel sad.

ஆமைக்குட்டி அரட்டைக்கு வரலாமா வனி?

புது வரவுகளுக்கு என் வரவேற்பு. நல்வரவு.
'நான்' நலம். (இப்பதான் செபா வந்துட்டாங்களே, அவங்க பெயரை விட்டு விடுகிறேன்.) அனைவரும் நலம்தானே? எங்கே பூஸ், பப்பி எல்லாம் காணோம்? எப்பிடி இருக்கிறீங்க?

ரேணுகா, மன்னிக்க, மன்னிக்க, மன்னிக்க வேண்டும். வர முடியவேஏஏ.. இல்லை. ;(

தலைவர் சந்தனா, தொண்டர் எல்லோரும் நலம்தானே? வாணி,

சோனியா, ப்ரியா (அம்முலு), ப்ரியா (நம்பர் மறந்து போச்சு.), புனிதா, பிரபா, ஆயிஸ்ரீ, லக்ஷ்மிஷங்கர், உஷா அனைவரும் நலமா?

அத்தி பூத்தாற்போல் வந்திருக்கிறீர்கள் சுரேஜினி. :) நலம்தானே?

ஹாய் வின்னி,
எனக்கு சுகர் ஃப்ரீ சாக்கலேட்வேண்டாம். என்னிடம் இருக்கிற சாக்லட்ஸ் எல்லாம் எப்படி முடிக்கிறது என்று யோசிக்கிறேன். இப்போதைக்கு ஸ்கூலில் நன்றாகப் பதில் கொடுக்கிறவங்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். :)
இனிமேல் அறுசுவைக்கு வரும் போது மறக்காமல் தொப்பி போட்டுக் கொண்டு வரேன். :))
வின்னி, வாணிக்கு மூன்று குழந்தைகள்தான். ஆல்பத்தில படம் போட்டிருந்தாங்க. :) அதற்கு மஹி கூட ஒரு ஸ்மைலி போட்டிருந்தாங்க. :)

சுபத்ரா,
என் ஆல்பம் - இங்கு என் ப்ரொஃபைல்ல பாருங்க. மகள் புதுநன்மை போட்டோ அனுப்புங்க, பார்க்கிறேன்.

கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் போது உங்கள் நினைவு வந்தது. :)))))))))))) பப்பி சொல்லும் போது ஜோக் மாதிரி இருந்தது, சிரிப்பு வந்தது. நீங்கள் யோசிக்க வைத்து விட்டீர்கள். கொஞ்சம் வெய்ட் குறைக்கலாம் மாதிரி தெரிகிறேன். :))) இனி அடிக்கடி கண்ணாடி பார்ப்பேன். :)))

மகேஸ்வரி,
நீங்களும் கட்டாயம் என் வளை காப்பு போட்டோஸ் பாருங்க. உங்களுக்கும் வனிதாவுக்கும் என் வாழ்த்துக்கள்.

ஹாய் செபா, நலமா? நானும் விசாரித்திருக்கிறேன். அடுத்த பதிவில் மறக்காமல் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நானும் பிரபா மாதிரி 'டூ' விடுவேன். :))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

பிரபா, நலமா? பிள்ளைகள் நலம். பிள்ளைகளுடன் பிஸி அதுதான் வருவது குறைவு. இன்று சாம்பார் செய்தேன். குரோசரி, வீட்டு வளவில் இலைகள் (இலையுதிர் காலம் தொடங்கி விட்டது)குவிஞ்சு போய் கிடந்ததை கூட்டி, அள்ளி பையில் கட்டி,......சொல்லவே மூச்சு வாங்குது, பிறகு சமையல்,....இப்படியே மிகவும் பிஸியாக போனது.

வின்னி, நலமா? இமா சொன்ன குழந்தை பச்சை கலரில் இருக்கும். படம் போடுகிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.
சோனியா, நலமா? நீங்கள் என்னையும், வனிதாவையும் நல்லாவே குழப்பிக் கொள்கிறீர்கள்.
இமா, தொண்டர் நலம். தலைவர் தலைமறைவு.
வனிதா, வாழ்த்துக்கள். மகள் நலமா?
ஐஸ்வர்யலஷ்மி, மகேஸ்வரி, சுபத்ரா, புனிதா(பொங்கல் கேட்டுவிட்டு எங்கே போனீங்கள்), சின்ன சின்ன ஆசை பாடிய ஜீனோ, செபா ஆன்டி, மற்ற தோழிகள் நலமா?
வாணி

இமா அம்மா எப்படி இருக்கிங்க? உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆச்சு... நான் நலம்... நீங்க செபா அம்மா நலமா?

நீஙக்லே செபா அம்மாவ விசாரிச்சு இருக்கிங்க இதுல நான் உங்கலை கேக்குரேன்...///ஹாய் செபா, நலமா? நானும் விசாரித்திருக்கிறேன். அடுத்த பதிவில் மறக்காமல் எனக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நானும் பிரபா மாதிரி 'டூ' விடுவேன். :))////

என்னை கிண்டல் பன்னுரிங்கலா? நான் டூஊஊஊஊ விடரேன்னு... போங்க நான் மனசு கஷ்டப்படரேன்... எனக்கு அழுகாச்சியா வருது..

செபா அம்மா நீங்க வந்து சொல்லுங்க பிரபா பாவம் கிண்டல் பன்ன வேண்டாம் என்று....

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

வாணி நான் நலம்ப்பா... நீங்க பிள்ளைகள் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்...

ஓ அப்படியா சரி நீங்க பிசியா இல்லம ஃப்ரியா இருக்கும் போது பதில் போடுங்க...

இந்தங்க லமன் ஜீஸ் குடிங்க... எனர்ஜயா இருக்கும்...

மூச்சு வாஙகுனது சரி ஆனதும் வந்து பதில் போடுங்க...

நான் இன்னும் சமைக்கலை.. இன்னிக்கு சனிக்கிழமை மதியம் வந்துடுவார்.. இனிதான் சமைக்கனும்....

நாம அப்ப்ரம் பேசலாம்... நான் போயி சமைக்கனும்.. இங்க மணி காலை 10.45 ஆகுது... ஓக்கே பை...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

ஜீனோவும் டோராவும் நல்லா இருக்கோம்..இத்தனை தினங்கள் கடந்தும் ஜீனோவை மறக்காமல் நலம் விசாரித்த/ விசாரிக்கும்/விசாரிக்கப் போகும் அன்புத் தோழமைகளின் அன்புக்கு ஜீனோவின் வந்தனங்கள்.

//அறுசுவை வர மாட்டங்குது.....// நீங்க கைய வெட்டிட்டீங்களல்லோ பிரபாக்கா? கைவலில உப்பு காரம் சரியாப் போட்டிருக்க மாட்டைங்கோ..அதனால்தான்! கவனமாகச் சமையுங்கோ.[ஹி,ஹி, காமெடி! ]

//பதில் காத்துல கானும், என்று எந்த ஸ்டேசனில் கம்பலைன்னு தரனும்..// எங்கேயும் கம்ப்ளைன்ட் தரவேண்டாம்..கொஞ்சம் அன்டைம்ல வந்து ட்ரை பண்ணுங்கோ.. நிறைய பேர் வரும் சமயங்களிலேதான் அறுசுவை பிசியா இருக்கும்! அர்த்த ஜாமத்திலே:) , அதிகாலையிலே எல்லாம் விரைவில் ஓப்பன் ஆகும்.

வனிதா அக்கா, மகேஷ்வரி இருவரும் நல்லபடியாய் புதுவரவை உங்கள் குடும்பத்துடன் இணைக்க ஜீனோவின் வாழ்த்துக்கள்.

ரயில் பெட்டி போல் லைனா:) எல்லாரையும் நலம் விசாரிக்கும் சோனியா, நலமா?

எப்பொழுதும் பெயர் விடுபட்டவர்களின் பட்டியலில் ஜீனோவை இணைக்கும் ஐஸ் ஆன்ட்டி:) நலமா? [ உங்கட பேரை சுருக்கியதுக்கு கோவிக்காதைங்கோ..போன அரட்டை இழைல ஜீனோவின் ஆன்ட்டி உங்களை ஐஸ் எண்டு சொல்லியிருக்கவர்..அதே போலே ஜீனோவும் உங்களை கூபிடுறவர்..:)))]

செபா கிராண்ட்மா, உங்கள் அன்பான விசாரிப்புக்கு ஜீனோவின் நன்றி! [ஆன்ட்டியின் அம்மா கிராண்ட்மா தானே, இமா ஆன்ட்டி? :)] நீங்க நலம்தானே? உங்களுக்கு டைம் இருக்கப்போ அறுசுவைக்கு வந்துடுங்கோ..ஆன்ட்டிக்கு என்ன பேர் வைத்திங்க எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ..ரெண்டெழுத்துப் பேரை எப்படி விரிவாக்கம் செய்வதெண்டு ஜீனோக்கு விளங்கவேயில்லை! :)

ஜீனோவின் வளர்ப்பு மகள் நலமோ?? ஓ...ஜீனோவின் மூன்றாவது பேரப்பிள்ளை:) பத்திரம் வானதியக்கா..[நீங்கள் ஜீனோவை சித்தப்பாவாக்கினாலும் உங்களை தன் அக்காவாகவே ஜீனோ கூப்பிடுவார்!] இன்னும் சில நாளிலே ஸ்னோவிலே ஹைபர்னேட் ஆகப்போகும் அந்த செல்லக் குழந்தைய இலைகள் தாக்கிடாமல் பத்திரமாக் காப்பாற்றுங்கோ..:)

மற்றும் எல்லோருக்கும் ஜீனோவின் அன்பான வணக்கங்கள்..அனைவருக்கும் இனிய வார இறுதி அமைய வாழ்த்துக்கள்..எல்லாரும் நன்றாக சாப்பிடுங்கோ..நன்றாகத் தூங்குங்கோ..நன்றாக ஓய்வெடுங்கோ !!!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அன்பு பிரபா,
கை காயம் ஆறி விட்டதா? இனிமேல் பார்த்து வேலை செய்யுங்க. இன்று சம்மர் துணிகள் எல்லாம் முழுவதாக வெளியே எடுத்து வைத்தேன். அநேகமானவை சிங்கப்பூரில் வாங்கியவை, உங்கள் நினைவு வந்தது. அடுத்த தடவை வரும்போது பிரபாவை வந்து பார்க்கலாம்ல? :) நான் கிண்டல் பண்ணல. :) இனி நான் என்னை மாதிரியே 'டூ' விட்டுருறேன். சரிதானே? எனக்கு லெமன் ஜூஸ் கிடையாதா?

அன்பு வாணி,
உங்கள் தலைவர்(வி) அடிக்கடி தலைமறைவாகிறார், என்னை மாதிரி. :)

நன்றாக இருக்கும் ஜீனோவுக்கும் டோராவுக்கும் என் வந்தனங்கள். :)
//அறுசுவை வர மாட்டங்குது.....// பிரபா பாவம், விட்டுருங்க. :)
//அர்த்த ஜாமத்திலே:) , அதிகாலையிலே எல்லாம் விரைவில் ஓப்பன் ஆகும்.// :) அப்ப அதிராக்கா விஷயம் தெரிந்துதான் சொல்லி இருக்கிறாங்க. :)

அடுத்த பதிவில் பெயர் சரியா எழுதி இருக்கிறேன் ஜீனோ. (ஐஸ்வர்யலக்ஷ்மி, 'மாற்ற' முடியாமல் 'பதிலளி'த்து விட்டீர்களே! ) :) அது சரி, ஆன்ட்டி 'மகளே' என்று கூப்பிட்டால் ஜீனோவும் 'மகளே' என்று கூப்பிடுமா!! :)

இமா ஆன்ட்டி நலம். நான் 'அன்டைம்லி' எல்லாம் வருவதாக இல்லை. இப்ப டைம் இருக்கு. :)

பல சமயங்களில் ஜீனோவின் 'ஸ்மைலி' பாஷை புரியவில்லை. :) அதனால் ஆன்ட்டியும் ஜீனோவுக்கான பதிவில் அன்டைம்லி-ஆக ஸ்மைலீஸ். :) :)

என் கனவில் நேற்று ஒரு பப்பி வந்தார். :) ஆல்பத்தில் உள்ள 'பூக்குட்டிகள்' எல்லாம் அழகு. :) அதுல இருந்த ஜீனோவின் 'சுயம்வரம்' படம் அழகாக இருந்தது. :) அதில் யார் டோரா என்பது தெரியவில்லையே? :)

ஜீனோ, செபா பெயர் விரிவாக்கம் சொன்னால் எனக்கும் கொஞ்சம் ரகசியமாக சொல்லிருங்கோ. :)

ஜீனோவுக்கும் இனிமையான வார இறுதி. //நன்றாகத் 'தூங்குங்கோ'// ??? :))
ஏன்கனவே அரட்டை தூங்குது. ஜீனோ 'கண்ணே கலைமானே' எல்லாம் 'பஞ்சுவேஷன் மார்க்ஸ்' போட்டுப் பாடி இன்னும் அதிகமாகத் தூங்க வையுங்கோ. :)

அனைவருக்கும் நல்லிரவு.

அன்புடன் இமா
௦-- --
மற்றவர்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் வானதி, எனக்கு மட்டும் ஏன் தனக்கு 'இரண்டு குழந்தைகள் மட்டுமே,' என்று சொன்னார். புரியவே இல்லை. :)

‍- இமா க்றிஸ்

ஹாய் தோழிகளே,
இமா அம்மா நலமா? நான் வளைகாப்பு என்றதும் கர்ப்பமான காலத்தில் நடக்கும் விழா"வளைகாப்பு" போட்டோ என்று நினைத்தேன், போங்கம்மா ஏமாத்திடீங்க. ஆனா வளையல் எல்லாம் அழகாக இருந்தது உண்மையிலே. அப்புறம் மன்னிக்கவும் என் பொண்ணோட புதுநன்மைக்கு இன்னும் 8வருடம் காத்திருக்க வேண்டும், கண்டிப்பாக போட்டா அனுப்புவேன்.இடையில் வேறு முக்கிய விழா இல்லையே. முன்பே பார்த்திருந்தால் பெயர்சூட்டு விழா போது செய்திருப்பேன்.நான் நோட்டில் செய்முறையே எழுதி,வரைந்து உள்ளேன். விளையாட்டாக சொல்லவில்லை,மிகவும் அழகாக இருந்தது கீரிடம், நாம்மலே செய்தால் தனி மகிழ்ச்சி தானே. இப்ப தான் அலுவகத்திற்கு வந்தேன் ,இப்படி நல்லிரவு சொல்லி தூங்க சொல்லாமா:-)))))))))))))))))))))

வாணி நான் நலம், உங்கள் மூன்றாவது குழந்தை ம்ம்ம்ம்ம், பசுமையாவள் தான், ஏன்ப்பா புல் என்றால் ரொம்ப பிடிக்குமா?

பிரபா , சாரில்லா வேண்டாம்ப்பா. நான் தான் உங்க கைவலியே மறந்துட்டேன், என் குழந்தை பெயர் (22 மாதங்கள்). நீங்க நலமா?

வனிதா நான் நலம், உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். தங்கை என்ன பண்றாங்க?

சோனியா நான் நலம் நீங்க நலமா?

சுபா, உமா(),சந்தனா,ல்க்ஷ்மிஷங்கர், யோகராணி ஏன் வரவில்லை? எல்லோரும் நலமா?

ப்ரியா876 நலமா? அது என்ன நம்பர்ப்பா?

ஐஸ்வர்யலட்சுமி அம்மா நலமா?

ஜீனோ நலமா?

தாமரை, தேன்மொழி நீங்க நலமா?

அன்புடன், சுபத்ரா.

with love

நல்லிரவு தற்காலிகமாகப் பின்போடப்பட்டுள்ளது. :)

சுபத்ரா, பிராக்கட்ல 'பொப்ஸ்' போட மறந்துட்டீங்க. :)))))
ஆல்பம் பார்த்தால் இப்படி பார்த்த விஷயத்தைப் போட்டு உடைக்கக் கூடாது. :) மற்றவர்களுக்கு சுவாரசியம் இல்லாது போய் விடும். நீங்கள் மட்டும் சிரித்தால் போதுமா!! :))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அனைவருக்கும் ஒரு ஹாய்.

ஹாய் வாணி,
சுகமா? நானும் உங்கள் மூன்றாவது பிள்ளையைப் பார்த்தேன். மற்ற இரண்டு பிள்ளைகளும் சுகமாக இருக்கிறார்களா? பொங்கல் சாப்பிட கட்டாயம் தை மாதம் வருவேன். கூப்பிட்டதற்கு நன்றி.

புனிதா

மேலும் சில பதிவுகள்