அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

அரட்டை - 98 அப்பப்பா.... பல நாட்களுக்கு பின் மீண்டும் அரட்டை !!!

பாருங்க,பாருங்க..பாருங்க..ஜீனோ யாரைக் கேக்கண்டாம் எண்டு சொன்னதோ..அதே,அதே,அதே தொண்டரடிப் பொடி:) வானதியக்கா வந்து புனிதாவைக் குழப்பராங்கள்..
//அப்படியானால் நீங்கள் தொண்டர் இல்லை. சரியா? // புனிதா...இப்படி சரியாத் தவறாக் கணிப்பது சரியோ?
தலைவரின் தலையும்:) தென்படுகிறது! போலி வதந்திகளை நம்பவேண்டாம் புனிதா!

பெயர் : ஜீனோ
வயது : என்றும் பதினாறு:)
உயரம்: அரையடி
எடை: 1/2 Lb.
மாடல் எண்: Foo2k9

இதுவே ஜீனோவின் பய:)டேட்டா..இதெல்லாம் வேணாம்..ஊர்,பெயர் எல்லாம் சொல்லுங்கோ எண்டு கேட்டால்..

ஊர்: பூர்வீகம் இந்தியத் திருநாடு [இப்போ இருப்பது தாய் மண்ணில் இல்லை].
பெயர்: (மீண்டும்) ஜீனோ
//மனிதனா, ரோபாட்டா, நாயா // - ஆல் தி எபவ் வானதியக்கா!! :)

கிராண்ட்மா..யாரைப் பாத்து என்ன சொல்லிப் போட்டீங்கள்? இந்த அதி புத்திசாலி:) ஜீனோ குண்டக்க-மண்டக்க எண்டு என்ற அழகான பேரை விரிவாக்கம் செய்து விடப் போகுதே எண்டு ஆன்ட்டி இந்நேரம் "திக்கு-திக்கெண்டு" உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உக்காந்திருப்பார்..:)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

அடடா போன அரட்டை இழுவோ இழுவோ என்று இழுத்து ஒரு வழியாக முடிவு பெற்று புது அரட்டையும் இவ்வளவு ஓடி விட்டதே!!!

செபா கிரான்மா - வணக்கங்கள். உங்க லிஸ்ட் ல என்னோட பெயரை பாத்ததும் ஒரே சந்தோஷம் தான் போங்க. அதெப்படி என்னை மறக்க முடியும் - நான் தான் ரொம்ப பொறுப்பா இமாவோட கால்களை வாரிக் கொண்டே இருக்கிறேனே :) முடியும் போது வாங்க. நாங்க இமாவை மறந்தாலும் உங்களையெல்லாம் மறக்க மாட்டோம்.

இமா - உங்க ஆல்பத்தை மறுபடியும் பார்த்தேன். அருமையான கற்பனைகள். ஒரு டீ டேபிளிலே கூட இவ்வளவு கை வண்ணங்கள்!! வெறி (சாரி தப்பான ர வந்துவிட்டது - மாத்த மனசில்லை :) ) இம்ப்ரசிவ்.. அதுவும் அந்த கார்டுகள் அருமையோ அருமை. தோட்ட வடிவமைப்பும் அருமை. கண்டிப்பாக உங்க வீட்டுக்கு வந்து ஒரு நாள் பொறுமையா உங்க க்ரியேடிவ் உலகை கண்டு ரசிக்கனும்னு ஆசை. மைக்ரோஸ்கோப் வைத்து தேடிக் கூடிய அளவுக்கா தப்பு பண்ணியிருக்கீங்க? :) இது மலையளவு :) எப்படியோ உங்க தயவால ஒரு தலைவர் பதவியும், கூட ஒரு அடிப் பொடியும் கிடைச்சிருக்காங்க. :)

பொறுப்பா அரட்டையை ஆரம்பிச்சு வச்சி இருக்கும் வனிதா - யாழினி சீனியராக பயிற்சி பெற்று வருகிறார் போல :) உங்க கை வண்ணங்களும் அழகாக ஒளிருதே!! உங்க பாப்பாக்கு ஏதும் ட்ரஸ் டிசைன் பண்ணலியா?

லக்ஷ்மீ - நாங்கள் நலமே. உங்களுக்கும் உங்க செல்லப் பாப்பாவுக்கும் எங்க அன்பு.

வாணி - எப்படியிருக்கீங்க? உங்க கிராப்ட் வேலைகள் மிகவும் அழகாக இருக்கின்றன. ஏற்க்கனவே சிலவற்றை பாத்திருக்கிறேன். உங்களையெல்லாம் பார்த்தால் பொறாமையாக உள்ளது :) ம்ம்.. அதுக்கெல்லாம் பொறுமையல்லோ வேணும் :)

என் பெயரை தப்பு தப்பாக சொல்வதில் இந்த ஜூனோ சாரி ஜினோ சாரி ஜீனோ வுக்கு அப்படி என்ன தான் குஷியோ!! ஏற்க்கனவே மங்கி வேஷம் தான் போட்டு டோரா கூட ஊர் சுத்திட்டு இருக்கீங்க. இந்த ஹாலோவீனுக்கு அதுக்கு மேல ஏதாவது வேஷம் போட்டீங்களா? அறுசுவையில யாரோ சூ சூ மாரி க்கு ஜீனோ டோராவோட டான்ஸ் லிங்க் கொடுத்திருந்தாங்க. ரொம்ப அருமையா இருந்தது. நீங்க பாத்தீங்களா? நீங்க உங்க இயற்பெயரை சொல்லுங்க - நான் ஆன்டியோட முழுப் பேரும் சொல்லறேன். சரியா? :)) ஆமா எங்கிருந்து பிடிக்கறீங்க இத்தனை புகைப்படங்களை?

புனிதா - எப்படி இருக்கீங்க? நலமா?

ஐஸ்வர்ய லக்ஷ்மீ - நலமா? ஏற்க்கனவே ஒருத்தங்க குறிஞ்சாவால ரொம்ப பட்டுப் போயிட்டாங்க. அடுத்து நீங்க கிளம்பியிருக்கீங்களா? :) உங்க வேலியோரமா தேடித் பாருங்க :)

ப்ரீத்தி - எப்படி இருக்கீங்க? தேவதை எப்படி இருக்காங்க?

பிரபா - சந்தனாவை விசாரிக்காம சந்தனாவோட அம்மாவை விசாரிச்சிருக்கீங்களே?
எங்கம்மா நல்லாத் தான் இருக்காங்க. நான் தான் குழம்பி போயி இருக்கேன் - எப்ப எங்க அம்மா கூட நீங்க பேசினீங்க? அவங்க அறுசுவைக்கு கூட வரதில்லையே?

சுபா - இதை வன்மையாக கண்டிக்கிறேன் :) இமாவும் அக்கா சந்தனாவும் அக்காவா? அப்படிஎன்றால் என் அக்கா பதவியை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் :) மானு எப்படி இருக்காங்க?

வின்னி அக்கா - ரொம்ப தகிரியமா அட்ரஸ் எல்லாம் சொல்லியிருந்தீங்க. நான் இன்னமும் பழைய பகையெல்லாம் மறக்கலை. அக்காங். ஞாபகம் வச்சிக்கோங்க. :)

ராணி - அவரை காணவில்லை என்று எல்லாரும் தேடிக் கொண்டிருக்கிறோம். வரும் போது வரட்டும் - அப்போ நல்லா சாத்திடுவோம்.

சுபத்ரா - எப்படி இருக்கீங்க? செநோரா எப்படி இருக்காங்க? என்ன வயசு? பெயருக்கு என்ன அர்த்தம்? நான் வாரயிறுதியில வருவேன்ப்பா. தினமும் வர முடியறதில்லை. வீட்டுக்கு வந்து லேப் டாப்பை பார்க்கவே கண் சோர்வா இருக்கு. டைப் பண்ணுறது கஷ்டம். சமைக்கணும். படிக்கணும். சீக்கிரமா தூங்கிடறேன் வேற.

மகேஷ் - உங்க குட் ந்யூஸ் படித்தேன். முன்பே வாழ்த்தியிருந்ததாக ஞாபகம். மறுபடியும் வாழ்த்துக்கள்!!

ப்ரியா - நல்லவேளை இம்முறை நான் உங்க எதிரியில்லை :) எப்படி இருக்கீங்க?

சோனியா - நீங்க அடிக்கடி இப்படி எங்களையெல்லாம் மறக்காம வந்து விசாரிப்பதை பார்க்க மனசுக்கு சுகமாயிருக்கு :)

ஆயிஸ்ரீ - எப்படி இருக்கீங்க? உங்க மூலமா பாட்டு வரிகளை கூகிள் தேடிக் கொடுத்திருக்கிறது :) நல்ல வரிகள். நன்றி அதற்காக.

அம்முலு - நலமா?

சுரேஜினி எப்படி இருக்கீங்க? உங்களை கண்டும் ரொம்ப நாளாகிவிட்டதே!!

காவேரி - என்ன முடிவு செய்திருக்கீங்க? மேலும் ஏதாவது தகவல் கிடைத்ததா?

தோழிகள் அனைவருக்கும் இனிய ஹாய். ஆஅவ். கொட்டாவி வருது எனக்கு இப்போ. பை பை. பிறகு சந்திப்போம்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

//பெயருக்கு என்ன அர்த்தம்?//

"ஓ,சென்யோரீட்டா...பேசும் அழகு பொம்மையே.."
"செனோரீட்டா..ஐ லவ் யூ!ஓ,ஸ்வீட்ஹார்ட்...யூ லவ் மீ!!" பாட்டெல்லாம் கேட்டதில்லையோ ச..ந்..த..னா? :):):)

Senora - a Spanish title or form of address for a married woman; similar to the English `Mrs' or `madam'
இது சரியோ என்று சுபத்ரா அக்கா வந்து சொல்லுவாங்கள்..

//நீங்க பாத்தீங்களா?// இல்லை..அது சமயம் ஜீனோ அறுசுவைக்கு ஆப்சென்ட்.

//ஆமா எங்கிருந்து பிடிக்கறீங்க இத்தனை புகைப்படங்களை? // ஜீனோவின் அழகான ஒலிம்பஸ் கேமராலே தான் எப்பவும் ஜீனோ
படம் பிடிக்கறது...நல்லா இருக்கா போட்டோஸ்?

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

தோழிகள் அனைவருக்கும் காலை வணக்கம்,
சந்தனா நான் நலம். குழந்தைக்கு ரொம்ப சளி, மருந்து கொடுத்து கொண்டிருக்கிறேன்.செனோரா - QUEEN. ஜீனோ சொன்னது சரியே ஆனால் நாங்கள் பெயர் வைக்கும் போது புக்கில் பார்த்தோம், போர்ச்சுகீசியர் நாட்டு மகாராணி என்று. பெயர் பிடித்திருந்தது எனக்கு அதான் வைத்தோம்.
பாத்து விடுங்கப்பா, எங்களுக்கும் ஒரே கொட்டாவி தான் :-)))))))))) காலையில் வந்ததும் இப்படியா?????

இமாஅம்மா நலமா? போட்டாவை பற்றி ப்ரியா கேட்டாச்சு பாத்திங்களா.
செபா அம்மா நலமா? என்னையும் கேளுங்க,நானும் உங்க friend தானே.

ப்ரியா நலமா? ID use பண்ணிக்கோங்க ஆனா சின்ன பயம் எதிரின்னு சொல்லிட்டேங்களே:-))))))))

ஜீனோ நலமா?நான் எல்லோரிடமும் சொல்ல தயார் ஜீனோ 100% நல்ல சாது.நல்லவர், வல்லவர்,நன்றி உள்ளவர்.

புனிதா இப்ப புரியுதா ஜீனோ நல்லவர் என்று. நான் சொல்வதை விட நீங்களே போய் ஜீனோ போட்டோஸ் பார்த்தால் அவரை பற்றி முழுவிவரம் புரியும்.

ஃப்ரீத்தி நலமா?

பிரபா நலமா? வந்து ஜீனோ பத்தி எடுத்துவிடுங்கோ!!!

வனிதா , மகேஸ்வரி, ல்க்ஷ்மிஷங்கர், தேன்மொழி, தாமரை, உமா(பாப்ஸ்) , சுபா, அம்முலு, ஆசியா உமர், ஜெயந்திமாமி, யோகராணி, சோனியா மற்றும் அனைத்து தோழிகளும் நலமா?
அன்புடன்,
சுபத்ரா.

with love

ப்ரியா 846 நன்றி. மிக்க நன்றி செபா அம்மா.

ஜீனோ, என்னவோ யாரிடமாவது மாட்டிக் கொண்டு முழிக்கப் போகிறேன் என்று எனக்கு இன்னும் பயமாகத் தான் இருக்கிறது. //புனிதாவைக் குழப்பராங்கள்..// என்று சொல்லிக் கொண்டு //இப்படி சரியாத் தவறாக் கணிப்பது சரியோ?// என்றும் சொல்லி.. தலை சுற்றுகிறது. புனிதா எல்லாரையும் குழப்புகிறேன் என்று சொல்லாத வரைக்கும் சரி. இந்த காலத்திலும் பதினாறு வயதில் கால் கட்டு போடுபவர்கள் இருக்கிறார்களா ஜீனோ?
நான் நலம் சந்தனா. உங்கள் படிப்பு வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
சுபத்ரா, நீங்கள் சொன்ன போட்டோ எந்த இடத்தில் இருக்கிறது?

புனிதா

புனிதா,
ஜீனோவுடைய ஆல்பத்தில் அவரிடமே கேளுங்கள்.
நானே உங்களிக்காக தேடி கண்டுபிடித்து கீழே கொடுத்துள்ள லிங்கை பாருங்கள். ஜீனோ ரொம்ப அழகு, பார்த்து கருத்துக்களை பரிமாறவும்.
ஹ்ட்ட்ப்://பிcஅசநெப்.கோக்லெ.cஒம்/கெனொ.Fஓ2க்9/Gஎனொ?fஎஅட்=டிரெcட்லின்க்
ஒகே வா.
அன்புடன்,
சுபத்ரா.

with love

பிரபா எப்படிங்க இப்படி? சோனியா நீங்களும் தான்.. நேரம் கிடைக்கனுமே டைப் பண்ண... வெட்டியா தூங்கற நேரத்துல கொஞ்சத்த வெட்டிட்டு பதிவுகள் போடலாம்னு எனக்கும் ஆசையா இருக்கு.. நன்றி பிரபா..

வனிதா நலமா? யாழினி நலமா?
மகேஸ் வாழ்த்துக்கள்.. உடம்பை பார்த்துக்கோங்க...
சுபத்ரா, உங்கள் மகள் செனோரா நலமா?
அம்முலு, மகன் அபி நலமா..வந்தனா ரொம்ப நன்றிங்க.. நலம் தானே

வானி, உங்க பேஜ் நெட்லாகில் பார்க்கவே நான் அதில் சேர்ந்தேன். இனி தான் பார்க்க வேண்டும்.. நன்றிங்க...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ஹாய் ஹாய் ஹாய்.... எல்லாரும் நலமா? என்னை யார் விசாரிச்சிருந்தாலும் என் நன்றிகள். நானும் மகளும் நலம். நிறைய பதிவுகள் இருப்பதாலும், ஏற்கனவே பட்டிமன்றத்தில் நிறைய நேரம் படிக்க செலவிட்டதாலும் எல்லா பதிவும் பார்த்து பதில் போட முடியல. கோவிக்காதிங்க. நேரம் கிடைக்கும்போது மீண்டும் வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுபத்ரா அக்கா,உங்கள் குட்டிப் பெண்ணின் பெயருக்கு நிறைய அர்த்தங்கள் உண்டு..அனைத்தும் அழகானவையே!

மிக்க நன்றிகள்! ஜீனோக்கு நல்லாவே:) பப்ளிசிட்டி தந்துள்ளீர்கள்!
புனிதா, இதோ உங்களுக்காக ஜீனோவின் கேலரி லிங்க்...

http://picasaweb.google.com/geno.Foo2k9

வந்தனா..உங்களுக்குக் கிடைத்த இன்னொரு:) புதிய பெயருக்கு ஜீனோவின் வாழ்த்துக்கள்! இந்தப் பேரும் நல்லா இருக்கே..சந்தனா,ஒய் டோன்ட் யு கன்சிடர் திஸ் நேம் டூ?? :D x 25

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

சுபத்ரா ஆன்ட்டி, நலமா? அது என்ன லிங்க்??? :)) நிச்சயம் ஜீனோ ஆல்பம் வராது. :)
போட்டோ பார்க்க நான் 8 வருடம் காத்திருக்கத் தயார். //தனி மகிழ்ச்சி// செபாவிடம் கேளுங்கள், சொல்லுவார். :)

ஹாய் புனிதா, நலமா? இப்போ பார்க்க நீங்கள் தான் எல்லோரையும் குழப்புகிறீர்கள் போல் தெரிகிறது. :) பாராட்டுக்கள். :))))))))))))))) உங்களால் மீண்டும் ஜீனோவுக்கு சரியான ஸாஃப்ட்வேர் கிடைத்து விட்டது. :) திரும்பவும் ஜீனோ சரிதத்தை உலகறியச் செய்து விட்டீர்கள்! :))))

ஜீனோ, செபா பெயர் சொல்லிட்டாங்களா? :) நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உக்கார்ந்து இருக்கவில்லை. கையில் ஒரு எக்ஸ்ட்ரா 't' தான் இருக்கிறது. :)

ஆயிஸ்ரீ, வனிதா, வந்தனா, சாந்தனா, சந்தானம் அனைவரும் நலமா?

மைக்ரோஸ்கோப் வைத்துத் தான் ஆல்பம் பார்த்திருக்கிறீங்கள் திருமதி சேகர். :) நன்றி. அது காப்பி டேபிள், பார் டேபிள் இல்லை. :) தங்கள் வரவு நல்வரவாகுக. வாருரதுக்கு எப்போ வாரீங்க?
சந்தனா, //ஆன்டியோட முழுப் பேரும்// சொல்லிருவீங்களா? :)

மிக்க நன்றி சுபா. :))))

ப்ரியா என் ப்ரொஃபல்ல ஆல்பம் எங்கே இருக்கிறது என்று போட்டு இருக்கிறேன். பாருங்க.

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே" :))))))))))

அன்புடன்
இமா

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்