பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

வாங்க ப்ரியா... உங்க வாதம் சின்ன பதிவா இருந்தாலும் கிராமத்தில் இருக்கும் நல்ல விஷயம் அனைத்தையும் சொல்லி இருக்கீங்க. உடனே வர முடியாவிட்டாலும் பரவாயில்லை.... இனி எல்லா பட்டிமன்றத்திலும் தொடர்ந்து பங்கெடுக்கனும். சரியா??

//கிராமங்கள் இல்லாமல் இவர்கள் நகரங்கள் எப்படி வந்தது? // - எதிர் அணி பதில் சொல்லட்டும்!!!

சுபத்ரா.... மீண்டும் வந்தமைக்கு என் நன்றிகள்..... :) நீங்க சொன்ன விஷயத்தை எதிர் கட்சி எப்படி சமாலிக்க போறாங்கன்னு தெரியல... காரணம் சில குறைகள் இருப்பதால் தானே எல்லாரும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு ஓடறாங்க. பார்ப்போம்.

//நாம் எல்லோரும் விவசாயம் மாத்திரம் செய்துகொண்டிருந்திருந்தோமானால் நம் நாடு இவ்வளவு சிறப்படைந்திருக்காது// - நியாயம் தான்!!!

ஆசியா.... வாங்க... உங்க பதிவை பார்த்த பின் தான் மகிழ்ச்சியா இருக்கு. :) வழக்கமான சின்ன பதிவு தான் ஆனாலும் அது வழக்கம் போல் நல்ல கறுத்தை சேர்க்கிறது, பலம் சேக்கிறது உங்க அணி'கு. மிக்க நன்றி.

இளவரசி... வருக வருக.... பலனாட்களாக அறுசுவை பக்கம் உங்களை காண முடியாத போதும் பட்டிமன்றத்தில் வந்து பதிவு போட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நன்றிகள் பல. :)

//ஊர்வம்பும்,வெட்டிகத
ையும்(திண்ணைகதை) கூட கிராமத்தில் அதிகம்.// - ஹஹஹா.... உண்மை உண்மை.

வின்னி.... வாங்க வாங்க. //ரிலாக்ஸ்டா இருக்க கிராமம் வேணுமாம்// - நோட் பண்ணிட்டேன் நோட் பண்ணிட்டேன். ;) தொடர்ந்து வாங்க வின்னி.... நீங்களாம் இல்லை என்றால் பட்டிமன்றம் எப்படி கலைகட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நடுவரே…வணக்கம்…எம்மணி,எதிரணிதோழிகளுக்கும் என் வணக்கம்.
// நல்ல தரமான பள்ளிக்கூடம் எல்லாம் உள்ளது. நகர்ப்புரமாணவர்களை விட கிராமப்புறத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்
மருத்துவவசதியும் அதிகம் எல்லா ஆரம்பசுகாதர மையத்தில் வசதி உள்ளது //
பல கிராமங்களில் இன்னும் ஆரம்ப கல்விக்கான பள்ளிகள்தான் உள்ளது.உயர்கல்விக்கு நகரத்துக்குதான் வரவேண்டியுள்ளது.
மருத்துவ வசதியும் அப்படிதான்.என் பிறந்தகம்,புக்ககம் எல்லாமே கிராம வாழ்க்கைதான்.
என் பிறந்த ஊரில் ஒரு மருத்துவமனைகூட இதுவரை இல்லை.
ஒரு பிரசவ வலி,நெஞ்சுவலி என்றாலும் நகரம் தான் செல்லவேண்டும்.சரியான நேரத்திற்கு
நகரம் கொண்டுசெல்லமுடியாமல் தகுந்த சிகிச்சை பெற வாய்ப்பின்றி உயிரிழந்தவர்கள் நிறைய பேர்..!!
ஆரம்ப பள்ளி மட்டுமேஇங்கு ஊண்டு…
8ஆம் வகுப்புக்குமேல் வேறு நகரம் சென்றுதான் படிக்கவேண்டும்
இதுபோன்று அடிப்படை வசதியில்லாமல் சிரமப்படும் கிராம மக்கள் தென்னிந்தியாவில் மட்டுமல்ல…இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் இருக்கிறார்கள். நிலைமை இப்படியிருக்க
கிராம வாழ்க்கை சிறந்தது என்று எப்படி சொல்லமுடியும்…!!
// நமது உணவின் பிறப்பிடமே கிராமங்கள்தான் என்பதை நாம் மறக்கலாமா? //
நாங்கள் நிச்சயம் மறக்கவில்லை…ஆனால் அவர்கள் வாழ்க்கை வானம் பார்த்த பூமியாய் …ஒவ்வொருநாளும் கவலையில் ஓடுகிறது…என்பதையும் நாங்கள் மறக்கவில்லை…
//உறவுகளின் அருமையும் கிராமத்தில் உள்ளவர்களுக்கு தான் தெரியும் ஆனால் உங்கள் குழந்தைகள் ஒரே வரியில் ஆன்டி என்கிறார்கள்//
எனக்கு தெரிந்து அயல்நாட்டில் இருக்கும் நம் குழந்தைகளுக்குகூட அம்மா,அப்பா,அத்தை என உறவுகளையும்,தமிழையும் மறக்காமலிருக்க சொல்லிகொடுக்கிறோம்.ஆனால் கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் எல்.கே.ஜி…போகும்போதே…மம்மி சொல்லு,டாடிசொல்லு,ஆண்டி சொல்லு…என
குழந்தகளை சொல்ல சொல்லி என் புள்ள எல்.கே.ஜி போனப்புறம் என்னமா இங்கிலிஷ் பேசறா…ஊர்கண்ணு படப்போகுது …முதலில் திருஷ்டி சுத்தி போடணும் என சொல்லும் நிறைய பெற்றோரை…நானும் பார்த்திருக்கிறேன்…கிராமங்களில்…….:)
அம்மா என அழைத்த என் மகளீடம்…என்ன நீ பாரின்ல படிக்கிற அங்க உள்ள ஸ்கூலில் மம்மிகூட சொல்லிதரலையா…என வெகுளியாய் வினவிய பிள்ளைகளும் உண்டு….

// அப்துல்கலாம்,அண்ணாதுரை(சந்திரா
யன்) இவர்கல் எல்லாம் நீங்கள் சொல்லும் வளர்ச்சிஅடையா பள்ளிகளில் படித்தவர்கள் தான் ஏன் சாதிக்கவில்லையா? இவர்கள் எல்லாம் இயற்கையோடு ஒன்றிப்படித்ததால் சாதிக்கமுடிந்தது //
உண்மைதான் ..அவர்கள் குடும்ப சூழ்நிலையால் அவர்கள் கிராமங்களில் படித்திருக்கலாம்.
ஆனால் அவர்கள் யாரும் .நகரத்தில் பிறந்து…இயற்கையோடு ஒத்த படிப்பிற்காய் கிராமம் தேடி ஓடவில்லை….:)
மேலும் அப்துல்கலாம் தன் பட்டபடிப்பிற்காய் திருச்சி மாநகரிலிருக்கும் செயிண்ட் ஜோசப் கல்லுரிக்குதான் வரவேண்டியிருந்தது….அவருடைய திறமையை வளர்க்க, அறிவினை உலகிற்கு வெளிச்சம்போட்டு காட்ட நகரத்திலிருக்கும் ஒரு ISRO தேவைப்பட்டது…
அவர் கிராம வாழ்க்கையே போதுமென்றிருந்தால் இவ்வளவு சாதித்திருக்க முடியாது…:-
//கிராமங்கள் தான் இந்தியாவின் அடிப்படை ஆதாரம்னு//
நாங்கள் மறுக்கவில்லை….ஆனால் அஸ்திவாரம் முக்கியம்தான்.அதற்காக அஸ்திவாரமே போதுமென்றிருந்தால் எந்த கட்டிடமும் எழுப்பப்படாது……
கிராம வாழ்க்கை குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்றுதான் சொல்கிறோம்.
.அதைவிட்டு வெளியில் வந்து நாம் (கணிணி)வளர்ச்சி பெற்றதால்தான் ..உலக பணக்காரர் பில்கேட்ஸைக்கூட நம் நாட்டுக்கு தேடி வரவழைக்க முடிந்தது
ஏன்…நீங்களும் நானும் இவ்வளவு கருத்துபரிமாற்றத்தை பரிமாறிகொள்ள முடிகிறது….அதுவும் வேறு வேறு நாடுகளிலிருந்து…….
இதுவே நம் கிராமத்திற்கு போனால் நம்மில் எத்தனை பேருக்கு இந்த வசதி (இண்டர்னெட்) கிடைக்கும்…ஒரு சிலருக்கு கிடைக்கலாம்…..எல்லாருக்கும்…???
பேச நிறைய இருக்கு.....சூழ்நிலை அனுமதிக்கவில்லை...அனுமதித்தால் மீண்டும் வருவேன்..
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//அஸ்திவாரமே போதுமென்றிருந்தால் எந்த கட்டிடமும் எழுப்பப்படாது……//

இளவரசி... சூப்பர். கிராமே'னு வாதாடிய அணி இதுக்கு பதில் தருவாங்களோ இல்லையோ..... ;) கொஞ்சம் கஷ்டம் தான்.

நல்ல பாய்ன்ட்ஸ் உங்க அணி'கு பலம் சேர்க்கும் வீதம் இருக்கு. ஏன்னா நீங்க சொன்ன எல்லா குறைகளும் உள்ள ஒரு கிராமத்தில் தான் நானும் பிறந்தேன்.... அதனால் நான் ஒத்துக்க தான் வேண்டி இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்புத்தோழி இளவரசி அவர்களே உங்க கிராமத்தை வைத்து மட்டும் சொல்லாதிர்கள் நீங்க இப்ப பாருங்க நிறைய கிராமங்கள் எவ்வள்வு வளர்ச்சி அடைந்துள்ளது. அஸ்திவாரம் என்ற கிராமம் இல்லாவிட்டால் எப்படி உங்க நகரம் உருவாகியது நகரம் எல்லாம் என்ன தன்னாலே உருவாகியதா என்ன? பல கிராமங்கள் சேர்ந்து தான் நகரம். கணவர் மற்றும் உங்க பெற்றோர்களால் தான் நீங்க இப்படி இருக்கீங்க உங்க கிராமதில் நெட் வசதி இல்லை என்ரு எல்லா கிராமங்களையும் சொல்லாதீர்கள் இப்ப கிராமதில் தான் மொபல் போன் மூலம் மோட்டார் on/off பண்ணுகிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி,இலவசமின்சாரம்,புயல்,மழைக்கு நிவாரணம் என்ரு இருக்கிறார்கள்
ஏன் அணுமிட்நிலையம்(கூடன்குளம்) ஒரு கிராமத்தில் தான் உள்ளது தற்போது சென்னை ஏர்போர்ட் கூட ஸ்ரீபெரும்புதூர் போகுது இதிஎல்லாம் ஒருகிராமங்களின் வளர்ச்சி தெரியவில்லையா? உங்களுக்கு தெரியுமா? ISRO என்பது நகரமும் கிடையாது கிராமமும் கிடையாது அது ஒரு தனிப்பட்ட பகுதி ஏதோ ஒண்றிரண்டு குழந்தையை கொண்டு முடிவு பண்ணாதிர்கள்? நீங்க வேண்டுமானால் உங்க குழந்தைக்கு தழிழ் சொல்லிக்கொடுத்து ஆனால் பெரும்பாலானவர்கள் தழிழ் தெருந்தால் கூட எங்க பேசுகிரார்கள் நாங்களாம் ஆறு,ஏரி,குளம்,கிணறு என்ரு பார்த்தவரகள் ஆனால் நீங்க அதை உங்க குழந்தைக்கு போட்டாவில் அல்லவா காமிக்கிறிங்க மறைக்காமல் சொல்லுங்க உங்க குழந்தைகளிடம் ஒரு முறை கூட பெருமையாக பேசவில்லை என்று நீங்க தண்ணீர்,காற்று எல்லாம் காசு கொடுத்து அல்லவா வாங்குகிறீர்கள் எது ஆரோக்கயம் கிராமா? நகரமா
கிராமத்தில்அடிப்படை வசதி இல்லை என்று சொல்கிறீர்கள் ஆனால் கடைசி காலதில் அங்கு தான் போகனும் என்ரும் சொல்லுகிறார்கள். முதல் உதவி என்ரு கிராமத்து வைத்தியம்பார்க்கிறார்கள் இழப்பு எல்லா இடத்திலும் இருக்கிறது உங்க நகரத்தில் பணம் கட்டவில்லை என்ரு எத்தனைஉயிர் போகிறது அது தெரியவில்லையா ஆனால் வசதி இல்லை என்ரு எத்தனை பேர் உங்க கிராமத்தை விட்டு வெளியில் வந்தார்கள். நீங்கள் இப்படி கொஞ்சவருடங்கள் மட்டும் வெளியில் இருந்துவிட்டு வசதி இல்லை என்கிறீர்கள் அவர்களிடம் கேளுங்கள் கிராமதில் நாங்க நிம்மதியாய் இருக்கோம் என்று சொல்லுவார்கள் வெளிநாட்டினல் கூட நம் நாட்டில் வந்து மருத்துவம் பார்க்கிரார்கள் அதுக்காக அவர்கள் ஊர் வளர்ச்சி அடைய வில்லை என்று கூட சொல்லுவார்கள். சுடிதார்க்கு மாறினோமோ அது மாதிரி தான் மனிதன் தன் வசதிக்காக கிராமங்களை நகரமாக மாற்றிஉள்ளனர் எல்லா நகரங்களின் வரலாற்றைப் பார்த்தால் அதுவும் முன்னேறிய கிராமம் தான் எதையும் நிறை குறையோட ஏற்பதுதான் இயல்பு
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

சபையோருக்கு வணக்கம், மிக நல்ல தலைப்பை தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவருக்கு என் பாராட்டுக்கள், திறம் பட வாதாடிக்கொண்டிருக்கும் இரு அணியினருக்கும் என் வாழ்த்துக்கள், இத்தலைப்பில் எனது கருத்தை கூறுவதோடு எனது ஆதரவை நகர வாழ்க்கையே சிறந்தது என்ற அணிக்கு தெரிவித்துக் கொள்கின்றேன், ஏனெனில் நகரம் என்றாலே அது அந்த நாட்டின் வளர்ச்சியைத் தானே காட்டுகின்றது, நகரங்கள் பெருக பெருகத்தானே அந்த நாட்டு பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் தொழிட்த் துரையிலும் பல மாற்றங்களை காண முடியும். இல்லாவிடில் உலக வரைப்படத்தில்கூட பூதக்கண்ணாடியை வைத்து தேடினாலும் அந்நாடு இருந்த இடம் தெரியாமலேயே போய்விடும்.எந்த ஒரு நாட்டின் வளர்ச்சியும் அதன் முன்றேற்றமும் நகரங்களை வைத்தே கணிக்கப்படுகின்றது என்பதால் வெறும் கிராமங்களை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது ஆக நாட்டிற்கும் சரி வீட்டிற்கும் சரி நகர வாழ்க்கைத்தான் சிறந்தது என்று கூறி விடைப் பெறுகின்றேன் இந்த சிறியதொரு கருத்தைக் கூற வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

நடுவரே மேலும் சில பாயிண்ட்ஸ்:)

நிறைய இஞ்சினியரிங் காலேஜல்லாம் கிராமத்துல தான் பெரிய இடமெல்லாம் வாங்கி கட்டி போட்டு இருக்காங்க.

நகரத்தில் மெஷின் தனமான வாழ்க்கை வாழும்போது, கிராமத்தில் ரிலாக்ஸா இருப்பவர்களை பார்க்க ஒரு வேலையும் செய்யாதது போல் தான் தோன்றும்.

கிராமத்துப் பிள்ளைகள்தான் சுதந்திரமா விளையாடுகிறார்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள். பாவம் சிட்டி பிள்ளைகள் வண்ணத்துப் பூச்சியைக் கூட மியூசியத்தில்தான் போய் பார்க்க வேண்டும்.

நடுவரே அறுசுவையில் அடிக்கடி சொல்வாங்களே 'வரப்புயர' இது உங்களுக்கே தெரிந்திருக்கும். அதில் அந்த வரப்பு எங்கே இருக்கு? சிட்டியிலா இருக்கு? கிராமத்தில்தான் என்று எதிரணியினருக்கே நன்றாக தெரியும். இப்படி அனைவரும் உயர காரணம் கிராமமே என்று அந்த காலத்திலே எடுத்து சொல்லிட்டாங்க.

மனதிற்கு நிம்மதியளிக்கும் கிராம வாழ்க்கையே சிறந்தது என்று மீண்டும் கூறிக் கொள்கிறேன்.

கவி, என்னையும், ப்ரியாவையும் இப்படி சிட்டிக்கு நடுவில் விட்டுட்டு எங்கே போயிட்டீங்க:) ப்ரியாதான் விடாம போராடிட்டு இருக்காங்க. சீக்கிரம் வாங்க.

சந்தனா எனக்குத் தெரியும், நீங்க நம்மாளுதான்னு:) இன்னும் மூனு நாள் இருக்கு. வாங்கப்பா கிராமத்தாளுங்கல்லாம்:)

மனோகரி அம்மா நலமா? அப்பாடா எனக்குத்தோழ் குடுக்க வானதியும் வந்த்திட்டாங்க. நடுவர் அவர்களே நேபாளம்,துருக்கி, மொரிசியஸ் தாய்லாந்து இன்னும் பல நாடுகள் உள்ளன இவையெல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் கிராமங்களால் புகழ்ப்பெற்றது ஏன் இந்தியாவிலே ஊட்டி,ஏற்காடு,குற்றாலம்,காரையார்,மணிமுத்தாறு, கன்னியாக்குமரி எல்லாம் இயற்கையால் தான் புகழ்ப்பெற்றது இவர்கள் சொல்லும் நகரங்கள் மழை பெய்தால் பஸ்,ரெயில், ஏன் விமானம் கூட் தாமதமாகுது இதுதான் நகரங்களின் வளர்ச்சி 8ம் வகுப்பு வரை தான் உள்ளது என்கிறார்கள் மக்கள் தொகை குறைவாக் உள்ள கிராமத்தில் அதற்கு தகுந்தாற்ப்போலத்தான் இருக்கும் ஏன் நீங்க உள்ள நகரத்தில் எல்லா பகுதியிலுமா பள்ளி, கல்லூரி உள்ளது கிராமம் என்றாலே எல்லார் நினைவிலும் பசுமையான ஞாபகமே வரும் ஆனால் நகரம் என்றாலே நான் சொல்லி தெரியவேண்டியதில்லை கிராமத்தவர்கள் நகரத்தில் உள்ளவர்களைப் பார்ப்பது இவங்க என்ன இப்படி அக்கம்பக்கம் கூட தெரியாமல் இருக்கிரார்களே என்று பாவப்ட்டுத்தானே தவிர வேறொன்றுமில்லை நகரத்தில் உள்ளவர்களாவது 10நாட்கள் திருவிழாவிற்கு
வருவோம் என்று ஆனால் கிராமத்திலுள்ளவர்கள் 2 நாட்கள்கூட நகரத்தில் இருக்கமுடியாது

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

வணக்கம்

//நகரங்கள் மழை பெய்தால் பஸ்,ரெயில், ஏன் விமானம் கூட் தாமதமாகுது இதுதான் நகரங்களின் வளர்ச்சி//
இருக்கலாம்.ஆனால்…கிராமங்களில் மழை பெய்தால் மொத்த கிராமமும் தண்ணீரில் மூழ்கிவிடும்.
//8ம் வகுப்பு வரை தான் உள்ளது என்கிறார்கள் மக்கள் தொகை குறைவாக் உள்ள கிராமத்தில் அதற்கு தகுந்தாற்ப்போலத்தான் இருக்கும்//
என் கிராமத்தை நேரில் பார்த்ததுபோல் நீங்களாகவே ஒரு கருத்து சொன்னதற்கு நன்றி…
ஆனால் அந்த அளவுக்கு குறைவான மக்கள் தொகை அங்கு இல்லை என்பதுதான் உண்மை.
என் கிராமத்தை மட்டுமல்ல இந்தியா முழுதும் உள்ள(குஜராத்,பீகார்,மகாராஷ்டிரா…….) எத்தனை எத்தனை அடிப்படை வசதியில்லா கிராமங்களை மனதில் வைத்துதான் கருத்தை சொல்கிறேன்.
உங்கள்கூற்றுப்படி பார்த்தாலும் மக்கள்தொகை குறைவாக உள்ள கிராமங்கள் எல்லாம் வசதிகுறைவாய் இருந்தால் பரவாயில்லை என் சொல்வதுபோல் அல்லவா இருக்கிறது…
//பல கிராமங்கள் சேர்ந்து தான் நகரம்//
நான் சொல்ல வருவதும் அப்படி மக்கள்தொகை குறைவாக உள்ள இரண்டு ,மூன்று கிராமங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு,வசதிகள் பெருக்கப்பட்டு நகரமானால் அந்த கிராம மக்கள் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்குமென்றுதான்..:-
//கிராமங்கள் இல்லாமல் இவர்கள் நகரங்கள் எப்படி வந்தது? //
கிராமங்கள் இல்லாமல் நகரங்கள் தானாகவே வானத்திலிருந்து குதித்ததாக நாங்கள் யாரும் தர்க்கம் பண்ணவே இல்லை…தோழிகளே..!!
எதிரணீயினர்..திரும்ப திரும்ப “கிராமங்களின்றி நகரங்கள் எப்படி வந்தன” என பாடிய பல்லவியையே திரும்ப திரும்ப பாடிகொண்டிருக்கிறார்கள்…
ஏ,பீ,சி,டி ,அ,ஆ,இ என ஆரம்ப கல்வி(கிராமம்) இல்லாமல் கல்லூரி படிப்பு (நகரம்) படிக்கமுடியாது என்பது உண்மை…….ஆனால் அப்படி படித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்குமென்றுதானே…கிராமமக்களும் நினைக்கிறார்கள்…!!!
//நேபாளம்,துருக்கி, மொரிசியஸ் தாய்லாந்து இன்னும் பல நாடுகள் உள்ளன இவையெல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் கிராமங்களால் புகழ்ப்பெற்றது//
நகரங்களில் எல்லாம் ஏதோ குளுமையான மரங்களே முற்றிலும் இல்லாததுபோல் சொல்கிறீர்களே…
இந்தியாவின் கீரீன் சிட்டி என அழைக்கப்படும் பெங்களுர்கூட நகரம்தான்…
கிராமமக்கள் பார்க்க ஏங்கும் ,டிவியில் பார்த்தாலே பரவசப்படும் சிங்கப்பூர்,கோலாலம்பூர் எல்லாம் இயற்கைஎழில்கொஞ்சும் நகரங்கள்தான் :0
சுவிட்சர்லாந்துகூட இயற்கை எழில் கொஞ்சும் இடம்தானே…….
நம் கிராமமக்களின் பிள்ளைகள் அமெரிக்காவிலோ,ஆஸ்திரேலியாவிலோ,சிங்கப்பூர்,மலேசியாவிலோ……இருந்தால் ஃப்ளைட் ஏறி பயணித்து அந்த இடங்களை பார்க்க ஆசைப்படும் ,பார்க்கின்ற கிராமமக்கள் உண்டு……..சிங்கப்பூருக்கு சுற்றுலா செல்லும் கிராம மக்கள்,அவர்கள் ஊரில் இயற்கை காட்சிகள் இல்லாமலா அங்கு தேடிபோய் பார்க்கிறார்கள்….
மேலும் அரசாங்கமும் வசதியுள்ள நகரங்களை சோலைமயமாக்கி வருகிறது…..!

//உங்களுக்கு தெரியுமா? ISRO என்பது நகரமும் கிடையாது கிராமமும் கிடையாது அது ஒரு தனிப்பட்ட பகுதி//
ISRO மையம் அமைந்திருப்பது பெங்களூர் ,ஹைதாராபாத் போன்ற வசதிகளையும்,அது இயங்க தேவையான வருமானம் என்ன பிற வசதிகளை அள்ளிதரும் மாநில தலைநகரங்களில்தான்…அதில் வேலைபார்க்கும் நெருக்கமான நண்பர்கள்/மாணவர்கள் எனக்கு உண்டு ஓரளவுக்கு அதைபற்றி தெரியும்….

//சுடிதார்க்கு மாறினோமோ அது மாதிரி தான் மனிதன் தன் வசதிக்காக கிராமங்களை நகரமாக மாற்றிஉள்ளனர் எல்லா நகரங்களின் வரலாற்றைப் பார்த்தால் அதுவும் முன்னேறிய கிராமம் தான்//
நகரம்----முன்னேறிய கிராமம் என்றுஒருவழியாக ஒத்துகொண்டுள்ளீரகள்…..நன்றி…..
அதைதான் சொல்கிறோம்…முன்னேறுங்கள் என்று…….
கிராம வாழ்க்கை + வளர்ச்சி+ வசதிகள் = நகரவாழ்க்கை……..
இதில் நகரவாழ்க்கை என்பது ஒரு முன்னேற்றமான வளர்ச்சி.
குறைகளை களைந்து நிறைகளை பெறுக்கி கொள்ளும் நகரவாழ்க்கை சிறந்தது என்று…சொல்கிறோம்..
நாங்கள் குறைகளோடே போராடுவோம் அதுதான் சிறந்தது என்று நீங்கள்தான் அடம் பிடிக்கிறீர்கள்………..:)
வாய்ப்பு கிடைத்தால் மறுபடியும்சந்திப்போம்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

//உங்க நகரத்தில் பணம் கட்டவில்லை என்ரு எத்தனைஉயிர் போகிறது அது தெரியவில்லையா // - பாருங்க ப்ரியா.... தெரியல நகரத்து மக்களுக்கு. விடாம உங்க அணி'காக போராடிகிட்டு இருக்கீங்க.... வாழ்த்துக்கள். தொடருங்க.

ஆஹா.... மனோகரி வாங்க வாங்க. உங்களை மாதிரி அனுபவம் உள்ளவர்கள் வந்தா தான் பட்டிமன்றம் சீரியஸா போகுது.... :) உங்க அணி நகரமா???!!! இப்போ கிராமம் அணி உஷாரா இருக்கதான் வேணும்.

வின்னி... எங்க வராம போயிடுவீங்களோ'னு நினைச்சு பயந்துட்டு இருந்தேன்.... மீண்டும் வந்தமைக்கு மிக்க நன்றி. //மனதிற்கு நிம்மதியளிக்கும் கிராம வாழ்க்கையே சிறந்தது // - நிம்மதி நகரத்திலில்லைன்னு சொல்லிட்டீங்க போலிருக்கே..... ;) போட்டு குடுத்துட்டேன்.... இனி நகர மக்கள் பதில் சொல்வாங்க.

வாங்க இளவரசி வாங்க.... உங்க அணி'கு பலம் சேர்ப்பதோடு இல்லாம ப்ரியா'கு பதிலும் குடுத்து அசத்தறீங்க. வாழ்த்துக்கள். தொடருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்