பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

எல்லாரும் மன்னியுங்கள்..... இன்று முழுக்க பவர் கட். அதான் வர முடியவில்லை. :)

ப்ரியா.... தொடர்ந்து உங்க கட்சிக்காக போராடறீங்க.

//நகர வாழ்க்கையில் எத்தனை பேர் அடிப்படை வச்திகூட இல்லாமல் இருக்காங்க// - நியாயமான கேள்வி....

ஆயிஸ்ரீ... வாங்க வாங்க. உங்களை காணவில்லையே என்று நினைத்திருந்தேன். நேரம் கிடைக்கும்போது அவசியம் வாங்க. :) மிக்க நன்றி.

வாங்க சந்தனா.... கட்சிய முடிவு பண்ணிட்டீங்க போல.... ;) வழக்கம் போலவே பலம் சேர்க்கும் விதம் அமைந்திருக்கு உங்க வாதம். வாழ்த்துக்கள். கலக்குங்க.

இளவரசி.... நீங்க கிராம மக்களை விடுவதாக இல்லை போலும்.... ;)

//என் பதிவுகள் எல்லாமே ஒரு கருத்துபரிமாற்றம்தான்…அது உங்கள் கருத்துகுழந்தைகளை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்…// - நிச்சயம் நம் தோழிகள் யாரும் அப்படி எடுக்க மாட்டர்கள். கவலை படாமல் உங்கள் வாதத்தை முன் வையுங்கள்.

சுபத்ரா.... //கிராம வாழ்க்கை சிறப்பாக இருந்திருந்தால் நகரங்கள் உருவாகி இருக்க காரணமிருந்திக்காது. // - நியாயமா தான் தெரியுது. மொத்தத்தில் தீர்ப்பு சொல்ல நான் திணர போறேன். :((

ஆஹா... கவிசிவா.... வரலயே என்ன ஆனீங்கன்னு யோசிச்சுட்டு இருந்தேன்.... காணாம போயும் ஒரு நல்ல தகவலோட வந்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

தீர்ப்பு சொல்ல வேண்டிய நாள் வந்துடுச்சே...... பயமா இருக்கு... இனி தான் யோசிக்கனும்....

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இதையும் படிச்சுப் போட்டு யோசியுங்க நடுவரே.

அப்போ உங்க பாணியிலேயே கேள்வி நாங்களும் கேட்கிறோம். நகர வாழ்க்கை தான் சிறந்தது என்றால் இந்நேரம் எல்லா கிராமங்களுமே காலியாகி இருக்கனுமே.. அதுவும் நடக்கவில்லையே? இன்னமும் பெரும்பாலான மக்கட் தொகை கிராமங்களிலே தானே உள்ளது?

சென்னைப் பட்டினம் ஏன் உருவானது என்பது ஆங்கிலேயரைத் தான் கேட்கணும். அவர்கள் தான் வணிக விருத்திக்காக உருவாக்கினார்கள். அதனை தொடர்ந்து அங்கு வேலைக்காக சிலர் செல்ல, அவர்களுக்கு பின்னே இன்னும் சிலர் செல்ல - இப்படியாக நகரம் உருவானது. மனிதர்கள் அவரவர் விருப்பத்திர்க்கேர்ப்ப இடந் தேடி தங்க முற்ப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அரசாங்கத்தின் மற்றும் தனியாரின் தொழிற் திட்டங்கள் நகரங்களை நோக்கியே இருந்தன. அதனால் தொழிற் கல்வி படித்தவர்கள் அங்கு நோக்கி நகர வேண்டிய நிலைமை ஏற்ப்பட்டது. கிராமங்களிலே பஞ்சம் ஏற்ப்பட்ட போது மேலும் சிலர் சென்றனர். இப்போது, நிலைமை மாறி வருகிறது. நகரத்திலே நீர் தட்டுப்பாடு ஏற்ப்படுகிறது. பெரிய தொழிர்ச்சாலை நிறுவ வேண்டுமென்றால் கிராமத்தை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். காரணம் இதற்க்கு மேலே எதையும் செய்ய நகரத்தில் இடமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் சமச் சீர் நிலை ஏற்ப்படும். அதனையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் சொல்லுகிறோம். கண்முன்னே கிராமங்களின் வளர்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இன்னமும் நிறைய கிராம மக்கள் தங்கள் விளை நிலங்களை தொழிர்ச்சாலைகலுக்கு தாரை வார்க்க மறுத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் நடப்பது கண்களிலே படவில்லையா?

எங்கிருந்தாலும் எதையும் செய்ய முடியும் என்ற நிலைமை வந்த பிறகு கால்குலேட்டர் கம்ப்யூட்டர் யூஸ் பண்ணுவதற்கும் கிராம வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? வின்னீ சொல்லியிருந்தது போல பல கல்வி நிறுவனங்களும் கிராமத்தை நோக்கி தான் நகருகின்றன. காரணம் - இடம், வளம். இவ்வளவு ஏன், நான் ற்றைனிலே கண்ட பல சென்னை மாணவர்கள் கிராமத்திலே இருந்த ஒரு கல்வி நிறுவனத்தில் ப்ளஸ் டூ க்காக ஹாஸ்டலில் தங்கி படித்துவிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

கணினி வசதி வேகமாக வருகிறது என்பதற்காக யாராவது நகரத்திலே செட்டில் ஆவார்களா? ஹா ஹா. கணினி இல்லாமல் உயிர் வாழ முடியும். நீர் இல்லாமல் இருந்து பார்த்திருக்கிறீர்களா?

நான் ஊரில் இருந்து வரும் போது நினைத்து அழுது கொண்டு வந்தது - ந்யூயார்க் நகரத்தின் பதினாலாவது மாடியிலே ஒற்றை ரூமில் அடைபட்டு கிடப்பேன் என்று. உண்மையில் இங்கு வந்து பார்த்தால் நல்லதொரு தாழ்வான மலைபிரதேசம். சுற்றிலும் மரங்கள். ஸ்ப்ரிங் காலத்தை என்ஜாய் செய்தேன். இரண்டு அல்லது மூன்று அடுக்கு வீடுகள் மட்டுமே. என்ன கடைகள் மட்டும் தூரமானவை - தேவைப்படும் போது காரிலே சென்று மொத்தமாக வாங்கி வந்து விடுகிறோம். அதைத் தான் சொல்கிறேன் - இங்குள்ளதைப் போன்று கிராமங்கள் சரியான முறையில் நகரங்களுடன் இணைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப் பட்டால் கல்வி வேலைக்காக கூட நகரத்திலே தங்கியிருக்காமல் கிராமத்திலே இருந்து தினமும் வந்து செல்ல முடியும்.

கிராமங்கள் வாழச் சிறந்தவை என்று நாங்கள் சொல்லுவது மற்றவர்களுக்கு அல்ல. எங்களுக்காகத் தான் :) உண்மையில் நீங்கள் நேற்றைய நிலைமையை மட்டுமே கணக்கில் கொண்டு வாதாடுகிறீர்கள். நாங்கள் இன்றைய மற்றும் பிற்காலத்தை நோக்கி எங்கள் பார்வையை விரிவுபடுத்தி சொல்கிறோம்.

எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சையாக தான் தெரியும். கிராமத்தில் உள்ளவர்களுக்கு நகரத்தின் வசதிகளும், நகரத்தில் உள்ளவர்களுக்கு கிராமத்தின் எளிய வாழ்க்கை முறையும். ஆனால் உண்மையிலேயே பச்சை பசேல் என்றிருப்பது கிராமமே !!!!!!!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வணக்கம் நடுவர் மற்றும் இரு அணித் தோழியர்... கண்டிப்பாக கிராமம் அணியில் பேச விரும்புகிறேன்...
என்ன தான் நகரத்தில் வளர்ந்து, நகரத்தில் வாழ்ந்ததாலும், உள் மனம் கிராமத்து வாழ்க்கையை எண்ணி ஏங்காமல் இருப்பதில்லை...
3ம் வகுப்பு படிக்கும் வரை நாங்கள் இருந்தது காவேரி ஆற்றங்கரையில் ஒரு கிராமம்...
ஆடி பெருக்கு ஆடி 18 அன்று முளைப்பாறி என்று ஆற்றில் விடுவார்கள்.. இன்னும் நினைவில் உள்ளது.. கரையோரம் கொட்டிக் கிடக்கும் நாவல் பழங்கள்...
முளைப்பாறி = நவதானியங்களை சிறிய குவளையில் மண் எடுத்து ஆடி 18க்கு முன் ஒற்றைப்படையில் நாள் கணக்கிட்டு விதைப்பர்.. தினமும் தண்ணீர் ஊற்றி வருவர்...
காவேரியில் இப்போ தண்ணி வரதில்லேன்னு சொல்றீங்களா...எல்லாம் சுயநல அரசியல் பிழைப்பா...
எவ்வளவு தண்ணீர் இருந்தாலும், பளீரென்று செல்லும் காவேரி....அங்கு குளித்தாலே ஒரு தனி வாசம் தான்..கிராமத்தில் உள்ளவர்களுக்கு நீச்சல் தெரிந்து இருக்கும்.. காய்ந்த சுரைக்காய்க் கட்டிகொண்டு கற்றுக் கொடுப்பர்...
வீட்டுக் கொல்லையில் எல்லா வித காய்கறித் தோட்டம்...தென்னை என்று....
பூ பூத்தது முதல், பிஞ்சு விட்டு காயாவது வரை.. புடலங்காயின் நுனியில் கல்லைக் கட்டி தினமும், அதன் நீளம் பார்த்தல்.. இன்னும் எத்தனை உள்ளது.. ஏசியும், டிவியும் தராத சுகம்... இதை எண்ணிப் பார்க்கும் போது...

ஒரு வகையில் இந்த நகர வாழ்க்கையினாலே தான் கிராம வாழ்க்கையின் அருமையை நான் உணர்கிறோம் என்றே எண்ணுகிறேன்....
இந்த விசயத்தை சொல்லனுமே பட்டிமன்றத்தில் என்று தோன்றிவிட்டால் ஒரு வேளையும் ஓட மாட்டேங்குது....இனிதான் மதிய சமையல் துவக்க வேண்டும்...
மீண்டும் சந்திப்போம்...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

திரைப் படங்களை பாருங்கள்.. கிராமத்தை மையமாக கொண்டப் படங்கள் எடுப்பது இப்போது ஃபேஷனாகி விட்டது.. எல்லா மக்களும் இரசிக்கின்றனர்.. கிராமத்து வாழ்க்கை ஏக்கம் தான்...
விவசாயம் இப்போது வேண்டுமானால், தொய்வாக காணப்படலாம்.. அப்துல் கலாம் ஒரு பேட்டியில் சொன்னது போல்... "விவசாயத்தில் நிறைய புதுமைகளை புகுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.. எதிர் காலத்தில் உணவுத் தட்டுப்பாடு வருவதை தவிர்க்க கவனம் செலுத்த வேண்டும்".. இந்த நிலை உருவாகும் போது, ஐ. டி.க்கு இப்போ உள்ள போட்டி எல்லாம் திசை திரும்பும்... விவசாயம் செய்வோர் தான் நிறைய சம்பாதிக்கும் நிலை கண்டிப்பாய் வரும்... கணினியை ரூ100க்கு வாங்கினாலும், ரு1000க்கு அரிசி வாங்கும் சூழலில் என்ன செய்வோம்.. எல்லோரும் நெல் விதைக்கத் தான் (கிராமத்தை நோக்கி) ஓடுவோமே...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அப்புறம் பொங்கல் பண்டிகை.. புது மண் பானையில், சுண்ணாம்பு குழைத்து வரைவது...மஞ்சள் கொத்து, முழுக்கரும்புகளை வாசலில் கட்டுதல்(நகரத்தில் வெட்டி தான் கரும்பை வாங்கி வர வேண்டும்)... விடியும் முன்னே வாசலில் சாணம் தெளித்து வண்ணக் கோலம் போடுவது.. அதுவும் பெரிது பெரிதாக...இன்றும் செய்கிறார்கள்...
பெண்களும் தையல், எம்ப்ராய்டரி என்று, வங்கி கணக்கு முதல் அஞ்சல் அலுவலக கணக்கு வைப்பது எல்லாம் தெரியும் அவர்களுக்கு... அரசின் செயல் திட்டங்கள், வேலை வாய்ப்புகள் நிறைய கிராமங்களில் சென்று சேர்கிறது..அதை உஷராகி பயன் படுத்திக் கொள்ளும் அளவு கிராமத்துப் பெண்கள் இன்றைய காலத்தில் உள்ளனர்...செயல் திட்டங்களும் வாய்ப்புகளும் ஏன் சில கிராமங்களை சென்றடைவதில்லை?...சுய நல அரசியல் விளையாட்டுத் தான்.(உள்ளூர் அல்லது வெளியூர் அரசியலாக கூட இருக்கலாம்). அதுவும் எத்தனை தலைமுறைக்கு தொடரும்?.. தடைகளை தகர்த்து அக்கிராம மக்களும் முன்னேறும் காலம் வரும்...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

விவசாயிகள் தற்கொலை என்று மட்டும் தான் உங்களுக்கு தெருயுதா? வேலையில்லாத்திண்டாட்டத்தில் நகரத்தில் எத்தனை பேர் தற்கொலை பண்ணுகிறார்கள். ஆனால் கிராமத்தில் நாங்களே சுய தொழில் அல்லவா யாரையும் நம்பி பிழைக்காமல் இருக்கிறோம் உங்க நகரத்து வசதி வாய்ப்புகளால் குற்றங்களும் கொலைகளும் தான் அதிகம். சின்ன வயதிலே வசதியாக வாழ ஆசைப்பட்டும், வேலையில்லாத்திண்டாட்டத்திலும் எவ்வள்வு குற்றம் நடைபெறுகிறதும், படிக்கும் வயதில் உள்ள பசங்களைப்பாருங்கள் அப்பா,அம்மா இல்லாத நேரத்தில் என்ன பண்ணுகிறார்கள், என்று அவர்களை கண்டிப்பதற்கு கூட ஆள் இருக்கமாட்டார்கள் ஆனால் கிராமத்தில் பாட்டி,தாத்தா என்று யாராவது கூட இருப்பார்கள் நகரமே சிறந்தது என்ரு சொல்லும் நீங்கள் ஏன் எப்படா விடுமுறை கிடைக்கும் ஊருக்குச்செல்லலாம் என்று நினைக்கிறீர்கள் அங்கு வசதியில்லை என்று யாரும் போகாமல் இருக்கிறீர்களா?
சுபத்ரா நான் சும்மா தான் எதிரி என்றுப்போட்டென் தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

சிதம்பரம் ராதாகிருஷ்ணன் அவர்கள் கிராமத்ததில்
பிறந்து வளர்ந்திருந்தாலும்,இலண்டன் மாநகரில் போய் ஆராய்ச்சி செய்ததால்தான் உலகம் அவரை கண்டு கொண்டது…..!!!
அவரது திறமையை வெளிக்கொணர அவருக்கு தேவையான வசதி அங்குதான் கிடைத்தது என்கிறீர்களே ஆனால் மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்த சின்னப்பிள்ளை எவ்வளவு புகழ்ப்பெற்றார் ஒரு நாட்டின் பிரதமரே காலில் விழுந்தார் இப்போது அவரின் யோசனைப்படி தான் உங்கள் நகரமக்களும் சுய உதவிக்குழுமூலம் பலன் அடைகிறார்கள்

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

தீர்ப்பு சொல்லும் நாள் வந்த பிறகே பல விஷயத்தையும் யோசிக்க வேண்டி இருக்கு. உண்மையில் ஏன் இத்தலைப்பை எடுத்தோம், முடிவு செய்யவே முடியல, என்ன தீர்ப்பு சொல்றதுன்னு கொஞ்சம் குழம்பிதான் போனேன். ஆனாலும் உண்மையை சொல்ல தயக்கம் தேவை இல்லை..... அதனால் துனிந்து தீர்ப்பு சொல்ல வந்துட்டேன்.

நம் தலைப்பு "நகர வாழ்க்கையா? கிராம வாழ்க்கையா? சிறந்தது எது?" என்பது தான். கவனிக்கவும் சிறந்தது எது என்றே கேட்டு இருக்கிறோம். இரண்டுமே ஒவ்வொரு வகையில் நிறை குறை நிறைந்த வாழ்க்கை முறை தான்.

கிராமத்து வாழ்வில் குறை பற்றி சொல்ல வேண்டும் என்றால்....

1. இன்னும் பல கிராமங்களில் ஆரம்ப சுகாதார வசதி இல்லை.
2. பல கிராமங்களில் பள்ளி வசதிகள் இல்லை.
3. அத்தியாவிசய தேவை என்று சொல்லப்படும் பல பொருள்கள் பல கிராமங்களில் கிடைப்பதில்லை.
4. மனிதனின் இன்றைய முக்கிய தேவையாக இருக்கும் தொலைப்பேசி, கைப்பேசி வசதிகள் கூட சில கிராமங்களில் இல்லை, பல கிராமங்களில் முழுமை அடையவில்லை.
5. போக்குவரத்து இன்றும் பல கிராமங்களில் சரியாக இல்லை.
6. சாலை வசதி இல்லை.
7. இன்னுமே பாம்பு தேல் கடி போன்று பல விஷ ஜந்துக்கலால் ஏற்படும் மரணம் கிராமத்தில் அதிகமே.
8. அரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வு கிராம மக்களிடம் குறைவே.
9. வேலை வாய்ப்பு குறைவு.

நகரத்து வாழ்வில் குறை பற்றி சொல்ல வேண்டும் என்றால்....

1. அடுக்குமாடி குடி இருப்பில் சிறை வாழ்க்கை வாழும் மக்கள் தான் அதிகம்.
2. சுத்தமான காற்று இல்லை.
3. சுகாதாரமான நீர் இல்லை.
4. மழை காலத்தில் படும் அவஸ்தைகள் கண் முன் பார்க்கிறோம்.
5. அவசர வாழ்க்கை..... இயந்திரம் போல் வாழும் மனிதர்கள்.
6. எல்லா வசதியும் இருந்தும் அரோக்கியமான உணவு இல்லை.
7. போக்குவரத்து வசதிகள் இருந்தும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போக நிறைய நேரம் எடுக்க தான் செய்கிறது.
8. விபத்துகள் தினமும் பல....
9. ஒரு மரம், மாடு, ஆடு... ஏன் நாய் குட்டி வளர்க்க கூட மற்றவர் அனுமதி வேண்டிய நிலை.
10. சுத்தமான சுகாதாரமான சூழல் இல்லை.
11. விலைவாசி பல நடுத்தர மக்களால் நினைக்க முடியாமல் உள்ள இன்றைய சூழல்.
12. கொலை, திருட்டு போன்ற குற்றங்கள் அதிகம்.

இப்படி குறையையே பார்த்தால் எப்படி மனிதன் வாழ்வது.... நல்ல விஷயமும் நிறைய இருக்கே.... அதையும் பார்க்க தான் வேண்டும்.

நகரத்தில் நல்ல படிப்பு வசதி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி உண்டு. குழந்தைகளுக்கு பாட்டு, நடனம், நீச்சல், பல விளையாட்டுகள், பல மொழிகள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு நகரத்தில் அதிகம். சம்பாதிக்க வேண்டும், பணம் பற்றாது என்ற எண்ணம் உள்ளவர்க்கு எல்லாம் நகரம் தான் கை கொடுக்கிறது. சுற்றி இருப்பவர் என்ன சொல்வார் ஏது சொல்வார் என்றேல்லாம் இல்லாமல் நாம் நாமாக வாழ அனுமதிப்பதும் நகரமே. பல விஷயங்கள் கிராமத்தை விட நகரத்தை தான் வேகமாக சென்றடைகிறது. எல்லா பொருள்களும் கிடைக்கும்.... தேவைகள் எல்லாம் பூர்த்தி ஆகும்.

- இப்படி நகர வாழ்வில் பணம் இருந்தால் எல்லாம் சாத்தியம். ஆனால் இங்கு பணம் குடுத்தாலும் கிடைக்காத சில நல்ல விஷயங்கள், மனிதன் நீண்ட ஆரோகியத்தோடு உயிர் வாழ அத்தியாவிஷயமான சில கிராமத்தில் தான் கிடைக்கும்.

ஆரோகியமான காற்று, நீர், உணவு, அலைச்சல் கோவம் படபடப்பு இல்லாத அமைதியான சூழல், நிம்மதியான வாழ்க்கைமுறை. இது எந்த நகரத்திலும் தேடினாலும் கிடைக்காது.

அது மட்டுமல்ல.... ஒருவர் நாய் வளர்த்தால் கூட "டிஸ்டர்பன்ஸ்" என்று நாகரீகமாக சொல்லும் நகரத்து மக்கள், அதே வீட்டில் திருடு போனால், கொலை நடந்தால் கூட 1 வாரம் கழித்து போலீஸ் வந்து போறாங்கலே என்ன விஷய்ம்'னு கேட்டு தான் தெரிந்து கொள்ள வேண்டிய சூழ் நிலை. அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் டீவீ, இன்டெர்னெட், வெளி வேலை, வீட்டு வேலை என்று மூழ்கி போகிறார்கள் நகர மக்கள். ரோட்டில் ஒருவர் கண் முன் அடி பட்டு கிடந்தால் கூட உதவும் மனம் படைத்தவர்கள் சிலரே... அதுக்கு நேரம் இருக்கிறவங்களும் சிலரே. இப்படி பட்ட இயந்திர வாழ்வு தான் நகர மக்களின் வாழ்வு. பொருளாதார வளர்ச்சி மட்டுமே பலர் இன்று நகரத்தில் வாழ காரணமாக இருக்கிறது.

கிராமத்து வாழ்வு அப்படி இல்லை.... தேவைக்கு பணம் இருந்தால் போதும்.... அக்கம் பக்கம் இருப்பவர் யார், ஊருக்குள் புதிதாக ஒருவர் வந்தால் கூட தெரிந்து போகும் அனைவருக்கும். புதிதாக ஒரு வாத்தியார் வந்திருக்காரா, மற்ற வாத்தியார்கள் எல்லாம் அழைத்து உணவு கொடுப்பர், அவர் குடும்பம் அங்கு வரும் வரை அவர் தேவைகளை கவனிப்பார்கள். இதை எல்லா கிராமத்திலும் காண முடியும். அன்பான மக்கள்.... இன்று அவசர வேலை என்று வயதானவர்களை வீட்டில் தனியாக விட்டு போகிறோமா... அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அவர்களுக்கு உணவு கொடுப்பர், கவனமாக பார்த்து கொள்வார்கள். கதவை திறந்து போட்டு, வாசலில் கயிற்று கட்டிலும், பாயும் போட்டு நிம்மதியாக சுதந்திரமாக தூங்கும் மக்கள், நிலா காட்டி சோர் ஊட்டும் பாட்டி, கதைகள் பல சொல்லி தூங்க வைக்கும் தாத்தா, கண்ணுக்கு எட்டியவரை பசுமை, பழமை மாறாத கோவில்கள், புழுதி பறக்க ஓடும் சல் சல் மாட்டு வண்டிகள், சுத்தமான... முக்கியமா சாக்கடை நீர் தேங்காத சுற்றுப்புரம், விடியலில் எழுந்து விடும் சுறு சுறுப்பான மக்கள்.... இதைவிட ஒரு மனிதன் எதை நேசிக்க முடியும்??? குடி தண்ணீரை கூட காசு கொடுத்து வாங்கும் நகர வாழ்க்கையை விட குளிர்பானம் கிடைக்காத கிராம வாழ்க்கையே மேல்!!!

இன்று நகரத்தில் வாழ்பவர் கூட இதை நேசிப்பதால் தான் ஊருக்கு ஒதுக்குபுரமாக வீடு வாங்குகிறான், தோட்டம் துரவு என்று வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கிறான். அடுக்குமாடியில் ஏசி போட்டு சிறை வாழ்க்கை நடத்துவதை விட இயற்கை காற்றை வாங்கி கொண்டு திண்ணையில் அமர்ந்து இயற்கையை ரசிக்கவே வயதான காலத்தில் மனிதன் ஏங்குகிறான். அது தான் உண்மையான சந்தோஷம்... அங்கு தான் உண்மையான அரோக்கியம் நிலைக்கிறது.

வாழ்வில் வெற்றி பெற துடிக்கும் மக்களுக்கு கிராமம் ஒரு தடை இல்லை, அவன் எங்கு இருந்தாலும் முன்னுக்கு வருவான் என்பதை வரலாறு பார்த்தாலே நமக்கு புரியும்.

பணம், வசதி, வாய்ப்பு என்று பல காரணத்துக்காக பிறந்த நாட்டை விட்டு வெளி நாடு போகிறோம்.... வாழ்கிறோம்.... என்ன கிடைத்தாலும் சொந்த நாடு போல் வராது என்று தானே சொல்கிறோம்.... எல்லாம் கிடைக்கிறது என்று வெளி நாட்டை சிறந்தது என்று சொல்கிறோமா??? இல்லையே!!! அப்படி தான்.... கிராமத்தில் இல்லாத வசதி வாய்ப்பை தேடி நகரம் சென்றாலும் சிறந்தது கிராமத்து வாழ்க்கை தான் !!!

ஆக விடுமுறையை கழிக்க நினைத்து போனாலும் சரி, வயதான காலத்தில் ஓய்வெடுக்க போனாலும் சரி.... எங்கு உள்ள மக்களும் நிம்மதியும், அன்பையும், ஆரோக்கியமும், இயற்கையையும் தேடி செல்லும் கிராமத்து வாழ்க்கையே சிறந்தது என்று இந்த நகர வாழ் கிராமத்து நாட்டாமை தீர்ப்பு சொல்லி முடிக்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு சிறப்பாக வாதாடிய தோழிகள் கவிசிவா, ஸாதிகா, சுபத்ரா, ப்ரியா, இளவரசி, வின்னி, சந்தனா, ஆயிஸ்ரீ, ஆசியா, மனோகரி அனைவருக்கும் என் அன்பான நன்றிகள் பல. ரசிகனாக வந்து அமர்ந்திருக்கும் திரு அருண்பிரசங்கி'கும் எனது நன்றிகள். தலைப்பு தந்த ஜெயலக்ஷ்மி'கும் நன்றிகள் பல. பங்கு பெர முடியாத தோழிகளுக்கும், படித்து கொண்டிருந்த தோழிகளுக்கும் நன்றிகள், அடுத்த பட்டிமன்றத்தில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

யாரும் பெரிய தீர்ப்பா சொல்லிட்டேன்னு கோவிச்சுக்க கூடாது.... ஒரு விஷயத்தை முடிவா சொல்ல அதை நியாயப்படுத்த வேண்டி இருக்கே... இல்லை என்றால் உங்களில் எத்தனை பேர் அடிக்க வருவீங்கன்னு பயம்மா இருக்கு. ;)

அப்ப்டியே அடுத்த பட்டிமன்ற நடுவர் பொறுப்புக்கு யாராவது முன் வந்தீங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும், நிம்மதியாவும் இருக்கும். சீக்கிரம் வாங்கோ.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வணக்கம் நடுவரே,
தீர்ப்பு அருமையாக இருந்தது. நீங்கள் சொன்ன கருந்துக்கள் நன்றாக இருந்தது. எதிரணி தோழிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
சுபத்ரா.

with love

மேலும் சில பதிவுகள்