பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

நல்லத்தீர்ப்பு நன்றி, சுபத்ரா உங்க mail id தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை அத்னால் தான் அனுப்பவில்லை. செனோரா நலமா
வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

தீர்ப்பு …அருமை….அதை சொல்லியிருக்கும் விதம்….அதுவும் குறைகளையும் ,நிறைகளையும் தராசுத்தட்டு போல் அளந்து சொல்லியிருப்பது…
வழக்கம்போல் …அருமையிலும் அருமை…
எல்லாருக்கும் தெரிந்த விஷயமென்றாலும் அதை எல்லாருக்கும் பிடிக்கும் வண்ணம் சொல்லுவது ஒரு கலை……..சும்மாவா…!!!எழுத்தாளராச்சே……!!!
நல்ல தீர்ப்பு……வாழ்த்துக்கள் வனிதா…!
இதுதான் பிரியாவோடு முதல்முறை பேசுவது..அதுவே…பட்டிமன்ற மோதலாய் ஆகிவிட்டது..உங்களோடு வாதாடிய அனுபவம் சுவாரஸ்யமாய் இருந்தது…நன்றி
சந்தனா வழக்கம்போல் கடைசிநேரத்தில் களமிறங்கி மற்றவருக்கு வாய்ப்புத்தராதபடி எண்ணையில் போட்டு எம்மணியை வறுத்தெடுத்ததற்கு ..:-
நன்றி…
கவிசிவா…உங்களூர் அருமநல்லுரா?அருமனையா? பக்கம்தான்…..எங்களூருக்கு…
வழக்கம்போல் உங்கள் வாதத்திறமை….அருமை…
ஆயிஸ்ரீ சும்மா சொல்லக்கூடாது,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தலைப்புக்கள் மட்டுமல்ல …உங்களின் ரசனையான வரிகள் கிராம வாழ்வின் சின்ன சின்ன
சுவாரஸ்யங்களை சொட்டு சொட்டாய் மனசுக்குள் ஊற்றியதுபோல் மிக அருமை…
நன்றி

எம்மோடு எம்மணியில் சளைக்காமல் வாதாடி கருத்துக்களை குவித்த அருமை தங்கை சுபத்ராவுக்கும் நன்றி…………
இதில் பங்குகொண்ட எல்லா தோழிகளுக்கும் என் வாழ்த்துக்கள்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

மிக்க நன்றி சுபத்ரா.... :) நல்ல கருத்துகளை சொன்னீங்க, வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி ப்ரியா.... கடைசி வரை போராடினீங்க. வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி இளவரசி.... நீங்க சொல்லும் அளவு இம்முறை தீர்ப்பு எழுதவில்லை என்ற எண்ணம். ;) காரணம் இம்முறை கடைசி நிமிஷம் வரை தீர்ப்பு என்ன சொல்வது என்றே புரியவில்லை. அதிக நேரமும் செலவு செய்து தீர்ப்பை எழுத முடியவில்லை. இருந்தாலும் மனம் நிறைய பாராட்டும் உங்கள் வரிகள் மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி. தொடர்ந்து எல்லா பட்டிமன்றத்திலும் அவசியம் வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தீர்ப்பு சொன்ன விதம் நகர வாழ்க்கை விரும்புவோருக்கு சப்பென்று ஒரு அரை கொடுத்தது போல் உள்ளது,தீர்ப்பை படித்து விட்டு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன்.இதைவிட எப்படி அருமையாக தீர்ப்பு எழுத ? இது தான் தன்னடக்கமோ?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஹா ஆசியா... இப்படிலாம் சொல்லி எல்லாரிடமும் அடி வாங்க விட்டுடுவீங்க போலிருக்கே.... ;) மிக்க நன்றி ஆசியா. ஏதோ என் மண்டைக்கு எட்டியது இவ்வளவு தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா எங்களுக்கு சாதகமா தீர்ப்பு சொன்னதால் பிடிங்கோ கேரட் ஜூஸ் :-). வாழ்த்துக்கள் வனிதா சும்மா நச்சுன்னு தீர்ப்பு சொல்லியிருக்கீங்க. என்னதான் நாம் நகரங்களில் இருந்தாலும் நம் வேர் இன்னும் கிராமங்களில்தானே இருக்குது.

இளவரசி நீங்கள் முதலில் சொன்ன ஊர்தான் எங்கள் ஊர். பழையாற்றின் கரையில் வயல்களும் தென்னந்தோப்புகளும் சூழ்ந்த ரம்மியமான ஊர். இப்போது கொஞ்சம் நகரத்தின் சாயல் படிய ஆரம்பித்திருக்கிறது:-(

இரு அணிகளிலும் திறமையாக வாதாடிய அத்தனை தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வனி, நானும் இந்த தலைப்பிற்கு எப்படி தீர்ப்பு சொல்லப் போறீங்கள் என நினைத்தேன். தீர்ப்பு சொல்ல மிகவும் கஷ்டமான தலைப்பு. நீங்கள் தீர்ப்பு சொன்ன விதமும், தீர்ப்பும் அருமை.

நான் வளர்ந்தது பெரும்பாலும் நகரத்தில்தான். ஆனால் விடுமுறைக்கு கிராமத்து பாட்டி வீட்டிற்கு சென்ற மலரும் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளதால் கிராமத்திற்கே என் ஓட்டு.

மேலும் இங்கெல்லாம் கிராமங்களிற்கு அடிப்படை வசதிகளும் இருக்கு. அதே சமயம் கிராமங்களின் இயற்கை அழகும் பாது காக்கப் படுகிறது. இதே போல் நம் நாடும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற ஏக்கமாக இருக்கிறது. கிராமங்கள் தங்கள் அடையாளத்தை இழந்து கொண்டு இருப்பதை பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது...

இரு அணியிலும் விடாமல் போராடிய தோழிகளுக்கு வாழ்த்துக்கள்.

வணக்கம் நடுவர் வனிதா,
அருமையாய் தீர்ப்பு அளித்தீர்கள்.வாழ்த்துக்கள். என்னுடைய சிறிய பதிவுகளையும் இரசித்து படித்தமைக்கு நன்றி இளவரசி. இரு அணித்தோழியரும் மிக அருமையான கருத்துக்களை எடுத்துக் கூறினீர்கள்..
வாழ்த்துக்கள்..
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

முதலில் அழகான ஆரோக்கியமான குழந்தை பெற பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்...அடுத்ததாக மன்னிப்பு தங்கள் நடத்திய பட்டிமன்றத்தில் கலந்து கொள்ளமுடியாமல் வேலை நிறைய வந்துவிட்டது(வீடு மாற போவதால் எக்கசக்க அலைச்சல்)

கடைசியாக அருமையான தீர்ப்பு,தீர்ப்பில் எனக்கு நிறைய முரண்பாடுகள் இருந்தாலும் நீங்கள் கிராமம் நகரம் இரண்டிலும் சொல்லி இருக்கும் பாயிண்ட்ஸ் அருமை...உங்கள் தீர்ப்பில் உள்ள தெளிவு, அதை எடுத்து சொன்னவிதம் மிகவும் அருமை! முடிந்தால் அடுத்தபட்டிமன்றத்தில் கலந்து கொள்கிறேன்(நடுவராக அல்ல)

தாமரை

மிக்க நன்றி கவிசிவா... கேரட் ஜூஸ்'கும் சேர்த்து தான். :)

மிக்க நன்றி வின்னி.... உண்மை தான் நானே தலைப்பை எடுத்துவிட்டேனே தவிற என்னடாசொல்றதுன்னு ரொம்ப யோசிக்க வேண்டியதாயிடுச்சு. :( இனி தலைப்பு முடிவு பண்ணும்போதே தீர்ப்பை முடிவு பண்ணனும் போல.... ;)

மிக்க நன்றி ஆயிஸ்ரீ.... பங்கு பெற்றதுக்கும் சேர்த்து தான். உங்கள் தலைப்புகளும் சரி, உங்கள் வாதங்களும் சரி.... உண்மையில் நான் மிகவும் ரசிப்பதுண்டு. அத்தனை இனிமை, அத்தனை அழகு, நல்ல திறமை. :)

மிக்க நன்றி சந்தோ.... மன்னிப்பு எதற்கு.... அடுத்த பட்டிமன்றத்தில் அவசியம் கலந்துக்க வேண்டும். நீங்கலாம் வந்தா தான் பட்டிமன்றம் நன்றாக இருக்கும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்