பட்டிமன்றம் - 10 : சிறந்தது எது? நகரமா? கிராமமா?

இம்முறை நான் கூவி கூவி அழைத்தும் யாரும் நடுவர் பதவிக்கு வந்தபாடில்லை.... சரி பலருக்கும் நடுவர் பொறுப்பு எடுக்க நேரம் இல்லாமல் இருக்கலாம், அல்லது தயக்கம் இருக்கலாம்.... தப்பில்லை, நானும் அப்படி தானே இருந்தேன். அதான் எக்காரணத்தை கொண்டும் பட்டிமன்றம் தடைபடாமலிருக்க நானே இம்முறை துவங்குகிறேன். இப்போதும் நடுவர் பொறுப்பு எற்க விருப்பம் உள்ளவர்கள் இங்கே வந்து சொல்லிவிட்டு தொடரலாம்.

நம் காணாமல் போன தோழி ஜெயலக்ஷ்மி கொடுத்த தலைப்பு....

"நகரவாழ்க்கையா ? கிராமவாழ்க்கையா? சிறந்தது எது?".

நம்மில் அனைவரும் நகரத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை, கிராமத்திலேயே பிறந்து வாழ்பவரும் இல்லை... பல விதமான வாழ்க்கை முறைகளை நாம் இப்போது பார்த்திருப்போம். இப்போது இதை பற்றிய வாதம் தேவையா என்றால் தேவை என்றே எனக்கு தோன்றியது.... கிராமத்தை விட்டு மக்கள் நகரத்துக்கு போவதும், இந்திய கிராமங்கள் அழிவதையும் காண முடிகிறது. ஏன் இப்படி??!!!

கிராமத்தை விட நகரம் சிறந்ததா? அல்லது கிராமத்தின் அருமை தெரியாமல் போகிறார்களா? அப்படி நகரம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? கிராமம் சிறந்தது என்றால் எந்த வகையில் சிறந்தது? இதை பற்றி வாதிக்கவே இந்த பட்டிமன்றம்.

ஆஹா...இம்முறையும் வியாழன் முடிந்தது இன்னும் அடுத்த பட்டிமன்ற தலைவர் யாரும் வரலயே.... தயவு செய்து தோழிகள் முன் வாருங்கள்.

ஆயிஸ்ரீ
ப்ரியா
சுபத்ரா
இளவரசி
மிசஸ் ஹுசைன்
செந்தமிழ் செல்வி
ஸாதிகா

- இன்னும் பெயர் சொல்லாமல் விட்ட மற்ற தோழிகளும் வாங்கோ..... மீண்டும் நடுவர் இல்லாமல் நான் வந்தால் நன்றாக இருக்காது. என்னால் வரவும் இயலாது. இம்முறையே என்னால் சரியாக செய்ய முடியாமல் போனது. தயவு செய்து அழைப்பை ஏற்று வாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா மற்றும் தோழியர் அனைவருக்கும் வணக்கம்...
நமக்கு பட்டிமன்றத்தலைப்பு சாக்குல கேள்வி மட்டும்தானே கேட்கத் தெரியும்? ..ம்

ப்ரியா, சுபத்ரா, இளவரசி, மிசஸ் ஹுசைன், சாதிகாக்கா, செல்விம்ம இன்னும் யாரேனும் பதில் தந்தால்,நாம் எஸ்கேப் என்று நினைத்தேன்.. வனிதா.. இம்முறை.. நமக்கும் தில் இருக்குல்ல.. (நீங்கள் எல்லாரும் இருக்குற தைரியத்தில்!..) இம்முறை நான் நடுவராக இருக்கிறேன் வனிதா..

பட்டி மன்ற தலைப்பை தேர்ந்தெடுத்து விட்டு வருகிறேன்..
அழைப்பிற்கு மிக்க நன்றி...

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

ரொம்ப நன்றி ஆயிஸ்ரீ. பட்டிமன்றம் திரும்பவும் லாங் லீவ் எடுத்துக்குமோன்னு கொஞ்சம் கவலையாய் இருந்தது. இப்போ ஹேப்பி ஆயிட்டேன் :-).

தலைப்பை கொடுங்க. கண்டிப்பாய் கலந்து கொள்வேன். மற்ற தோழிகளும் தோள் கொடுப்பார்கள்.

சின்ன வேண்டுகோள். இம்முறை கொஞ்சம் ஜாலியான தலைப்பாக இருந்தால் நல்லது என நினைக்கிறேன். இது என் கருத்து மட்டும்தான். மற்றபடி தலைப்பை தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை :-)

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவிசிவா,
கண்டிப்பாய் நானும் அது தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
தங்கள் பதிவையும், ஆர்வத்தையும் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...
நன்றி,
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்பு வனிதா - தீர்ப்புக்கு நன்றி. நல்லா அருமையா தெளிவா சொல்லியிருக்கீங்க. நடுவருக்கும் இங்க பேசின எல்லாருக்கும் நன்றி.

இளவரசி - மிக்க நன்றி. நீங்க மட்டும் என்ன - இத்தனை நாள் காணாம போயிட்டு இப்படி திடீர்னு வந்து எதிரணியில இறங்கி எங்களை வருத்துட்டீங்களே?

வனிதா - பட்டிமன்றம் சீரீஸ் ஆரம்பிச்சு வச்சது மட்டும் இல்லாம தொடர்ந்து வந்து ஆதரவு கொடுத்துட்டு, ஒவ்வொரு வாட்டியும் முடிஞ்சவுடனே நடுவரை பிடிச்சு - தொய்வில்லாம நடத்திட்டு வர்ற உங்களுக்கு எங்க சார்பா பாராட்டுக்கள்.

ஆயிஸ்ரீ - அடுத்து நீங்களா? வாங்க வாங்க. இப்படி ஒவ்வொருத்தரா தாங்களே முன்வந்து பொறுப்பை எடுத்துகிட்டா நல்லாயிருக்கும்ப்பா. வாழ்த்துக்கள் - பல தலைப்புகளை கொடுத்த நீங்க என்ன தலைப்பை எடுக்க போறீங்கன்னு எதிர்பார்ப்பு கூடியிருக்கு.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஆயிஸ்ரீ..... நடுவர் பொறுப்பை ஏற்றமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். :) நிம்மதியாக இருக்கிறது. நிச்சயம் நேரம் கிடைக்கும் போது வந்து கலந்து கொள்கிறேன். தாமதமாக பதிவு போட்டமைக்கு மன்னியுங்கள்...... நான் இப்போது தான் உங்கள் பதிவை பார்த்தேன். அறுசுவை கிடைப்பது சற்று பிரெச்சனையாக இருந்தது நேற்றில் இருந்து. உங்கள் தலைப்பு என்ன என்று அறிய தோழிகள் போல் நானும் ஆவலோடு இருக்கேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிராமத்து வாழ்க்கையின் சுகாதாரம்

மேலும் சில பதிவுகள்