சுண்டைக்காய் குழம்பு

image

வழங்கியவர் : gandhiseetha

தேதி : திங்கள், 02/11/2009 - 18:10

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

3
2 votes
Your rating: None
 

 

  • சுண்டைக்காய் - ஒரு கப்(தட்டியது)
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • கடுகு - 1/2 தேக்கரண்டி
  • வெங்காயம் - 2
  • பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
  • தக்காளி - 2
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • புளி விழுது - 3 தேக்கரண்டி
  • உப்பு - சிறிது
  • மிளகாய் தூள் - தேவைக்கேற்ப
  • தாளிக்க தேவையானவை:
  • சின்ன வெங்காயம் - 10
  • கறிவேப்பிலை - சிறிது
  • எண்ணெய் - சிறிது

 

  • சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்ததும் வெங்காயம், பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு தக்காளி, மஞ்சள் தூள், சுண்டைக்காய் சேர்த்து தண்ணீர் 1/2 கப் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
  • அதனுடன் புளி விழுது, உப்பு, மிளகாய் தூள், தண்ணீர் சிறிது சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தாளிக்கும் பாத்திரத்தில் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி குழம்புடன் சேர்த்து நன்கு வதக்கிய பின் பரிமாறவும்.

Note:

இதே வகையில் கத்திரிக்காய் சேர்த்தும் செய்யலாம்.