ஹைபிஸ்கஸ் துவரன்

தேதி: November 3, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

செம்பருத்திப்பூக்களின் சாறு முடி வளர்வதற்கும், சரும பளபளப்பிற்கும் நல்லது. இந்த பூக்கள் சாப்பிடும் போது பெண்களின் மாதவிடாய் சுழற்சி சீராகும். ஜீரணத்திற்கு நல்லது. இதன் பயன்களுக்காக சீன மக்கள் இதை ஊறுகாயாக செய்து சாப்பிடுகிறார்கள்.

செம்பருத்திப்பூக்கள் - 8
சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கு
அரைப்பதற்கு:
தேங்காய்த்துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தாளிக்க:
எண்ணெய் - சிறிது
கடுகு - தேவைக்கு

மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்து வைக்கவும். கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.
செம்பருத்திப்பூக்களின் இதழ்களை மட்டும் எடுத்து சிறியதாக நறுக்கவும்.
வாணலியியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கின செம்பருத்தி இதழ்களை போட்டு வதக்கவும்.
பின்னர் உப்பு மற்றும் அரைத்தவற்றை சேர்த்து கிளறி விடவும்.
பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு பின்னர் இறக்கவும்.
சுவையான செம்பருத்தி துவரன் ரெடி. <b> திருமதி. இளவரசி </b> அவர்கள் தன் மாமியாரிடம் கற்ற இந்த துவரன் குறிப்பினை செய்முறை விளக்கத்துடன் நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ஹைபிஸ்கஸ் துவரன் வித்தியாசமாக இருக்கே,நான் சும்மாவே பூவை பறித்து சாப்பிடுவேன்,இப்படி கூட செய்து சாப்பிடலாம் போல் தெரிகிறதே,என்ன கன்னியாகுமரி ஸ்பெஷலா?மாமா அத்தை கத்தாரில் தானா? ஊர் போயாச்சா? botanical term எல்லாம் போட்டு அசத்தலான சமையல் குறிப்பு.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் இளவரசி எப்படி இருக்கீங்க?செம்பருத்தியில் இப்படி ஒரு வித்தியாசமான குறிப்பா?சூப்பர்ங்க..மருத்துவ குணம் நிறைந்ததில் ஒரு அசத்தலான குறிப்பு தந்ததற்க்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

குறிப்பினை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றி.

ஆசியா,உங்கள் பின்னூட்டத்திற்கு என் மகிழ்ச்சியும்,நன்றியும்..:)நலமா இருக்கீங்களா?மாமா,அத்தை கத்தாரில்தான் இருக்கிறார்கள்.இந்த மாத இறுதிவரை இங்கு இருப்பார்கள்.
அடுத்த மாதத்தில் இருந்து அறுசுவைக்குள் வழக்கம்போல் வரமுடியுமென நினைக்கிறேன்.
அப்சரா,சுகமா? நிறையமுறை உங்கள் வாழ்த்து பதிந்து விட்டது...பலமுறை பதிந்ததால் பல மடங்கு சந்தோசமும்,நன்றியும்..:-
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.