வாட்டர்பாட்டிலை கொண்டு அன்னாசிப்பழத்தின் வடிவம் செய்வது எப்படி?

தேதி: November 4, 2009

4
Average: 3.8 (10 votes)

 

சிறிய வாட்டர் பாட்டில் - 1
பிஷ்நெட் ஓயர் - ஆரஞ்ச் மற்றும் பச்சைநிறம்
கோல்டுநிற சம்கி
குண்டூசிகள்

 

வாட்டர் பாட்டிலில் ஒட்டியிருக்கும் பேப்பரை உரித்த எடுத்து விடவும். மற்ற தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
சம்கிகளில் குண்டூசி குத்தி தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.
வாட்டர் பாட்டிலின் அடிப்பாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் ஆரஞ்ச்நிற பிஷ்நெட் ஒயரை வைத்து அதன் மேல் குண்டூசி குத்திய சம்கியை சொருகி விடவும்.
பிஷ்நெட் ஒயரில் சிறிது இடைவெளிவிட்டு மற்றொரு சம்கியை சொருகி விடவும். இதுப்போல் பாட்டிலை சுற்றிலும் சம்கியை வைத்து, மீதி பிஷ்நெட் ஒயரை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
பிஷ்நெட் ஒயர்களை 4 1/2 செ.மீ அளவுக்கு துண்டுகளாக நறுக்கவும். இந்த அளவின்படி பாட்டில் முழுவதும் வைப்பதற்கு தேவையான அளவு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
அதில் ஒரு பிஷ்நெட் ஒயர் துண்டை எடுத்து அதன் வழவழப்பான பக்கத்தின் ஒரு முனையை கையில் பிடித்துக் கொண்டு மற்றொரு முனையை அதன் மேல் வைத்து நடுவில் சம்கியை சொருகி விடவும்.
பாட்டிலின் அடிப்பாகத்தின் முன்பு சுற்றிய பிஷ்நெட் ஒயரின் மேல் இந்த சம்கி குத்திய பிஷ்நெட் ஒயரை சொருகவும். இதுப்போல் வரிசையாக பாட்டிலின் அடிப்பாகத்தை சுற்றிலும் இந்த பிஷ்நெட் ஒயரை சொருகி விடவும்.
முதல் வரிசை முடிந்ததும், அடுத்து இரண்டாவது வரிசையையும் இதுப்போல் செய்துக் கொள்ளவும்.
இதுப்போன்று பாட்டிலின் அடிப்பாகத்திலிருந்து மேல் பாகம் வரை சம்கி குத்திய பிஷ்நெட் ஒயரை சொருகி விடவும். பிஷ்நெட் ஒயரை சொருகும்போது ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்குமாறு சொருகி விடவும். அப்போதுதான் பார்ப்பதற்கு அன்னாசிப்பழத்தின் வடிவம் கிடைக்கும்.
அடுத்து அன்னாசிப்பழத்தின் இலைகள் செய்வதற்கு பச்சைநிற பிஷ்நெட் ஒயரை 5 1/2 செ.மீ அளவிற்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டு அதன் ஏதாவது ஒரு முனையை "v" வடிவத்தில் கூர்மையாக இருக்கும்படி நறுக்கி விடவும். இதுப்போல் பாட்டிலின் மூடியை சுற்றிலும் வைப்பதற்கு தேவையான அளவு வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ளது போல் பாட்டிலின் மேல் இந்த பச்சைநிற பிஷ்நெட் ஒயரை வைத்து அதன் நடுவில் குண்டூசியை சொருகி விடவும்.
பாட்டிலின் மேல்பாகத்தை சுற்றிலும் ஒயரை வைத்து முடித்தப்பிறகு பாட்டில் மூடியின் கழுத்துப்பகுதியில் நரம்பை வைத்து இரண்டு முறை சுற்றி விட்டு முடிச்சுப்போட்டுக் கொள்ளவும். நரம்பு கட்டியப்பிறகு ஒயர்களை இலைகள் போன்று இருக்குமாறு சரிசெய்து விடவும்.
வாட்டர்பாட்டிலில் பிஷ்நெட் ஒயரை பயன்படுத்தி செய்யக்கூடிய அழகிய அன்னாசிப்பழம் ரெடி.
உபயோகமற்ற வாட்டர்பாட்டிலை கொண்டு அன்னாசிப்பழ வடிவத்தின் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

வாவ், சூப்பர் ரெம்ப அழகாக செய்திருக்கிறீங்க.வாழ்த்துக்கள்.நலமாக இருக்கீங்களா?குட்டி தேவதையும் நலமாக இருக்கிறாளா?
மூவரும் நலமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.

பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தீட்டீங்க பாப்பி

ஏழாவது, எட்டாவது படிக்கும் போது தையல் கிளாஸ் ஒரு இருக்கும் அப்போது, எம்ராய்டரியும், இது போல் பின்னும் வேலைகள், ரெட் கலர் ஸ்பாஞ் பொம்மையும், இதே அன்னாச்சி பழம் வொயர் வைத்து செய்தேன்.

அந்த தையல் டீச்சர் ஒல்லியா கமலா காமேஷ் மாதிரியே இருப்பாங்க.

வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய அனுப்பு ங்கள், உங்கள் கைவேலை, ரொம்ப எளிமையாக உடனே பார்த்ததும் செய்யும் வண்ணம் இருக்கு.

Jaleelakamal

மிகவும் அழகாக இருக்கிறது இந்த வாட்டர் பாட்டிலில் செய்த பூச்செண்டு. மிக்க நன்றி.

வாழ்த்துக்கள்.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ஆஹா.................அழகான அன்னாசி,சுலபமான முரையில் சொல்லி குடுத்திட்டீங்க
வாழ்த்த்க்கள்.செண்பகா

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

வாழ்த்துகள் பாப்பி ....இதை என் அம்மா கொஞ்சம் குண்டா இருக்குற டப்பலே பன்னுவாங்க..இதுவும் நல்லா இருக்கு பாப்பி...ம்ம்ம் இன்னும் இதை மாதிரி எல்லாம் பன்ன கொஞ்ச நாளைக்கு டைம் கிடைக்காது :-)

மிக அழகாக இருக்கிறது பாப்பி. :)

ஆனால் இன்னுமே எனக்கு இந்த 'பிஷ் நெட் வயர்' என்ன என்பது தான் புரியவே இல்லை. இதற்கு வேறு பெயர் இருக்கிறதா? தெரிந்த யாராவது சொல்லுங்களேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

வெற்றுப் போத்தலைக்கொண்டு நீங்கள் மிக அழகான அன்னாசி செய்திருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta