சுக்கினி பொரியல்

வழங்கியவர் : DHUSHYANTHY
தேதி : புதன், 04/11/2009 - 16:01
ஆயத்த நேரம் : (05 - 10) நிமிடங்கள்
சமைக்கும் நேரம் : (10 - 20) நிமிடங்கள்
பரிமாறும் அளவு : 1 நபர்
- சுக்கினி - ஒன்று
- மிளகாய்த்தூள் - தேவையான அளவு
- மஞ்சள்தூள் - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
- சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.
- வெட்டிய சுக்கினி துண்டுகளை ஒரு தட்டில் அடுக்கி வைக்கவும், ஒரு தட்டில் மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு நன்றாக கலக்கவும்.
- கலந்த பின்பு அக்கலவையில் வெட்டிய சுக்கினி துண்டு ஒன்றை வைக்கவும்.
- வெட்டிய சுக்கினிதுண்டு ஒன்றின் எல்லா பக்கமும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு கலவையை படும்படி நன்றாக பிரட்டி சிறிது நேரம் சுக்கினி துண்டை அதில் ஊறவிடவும்.
- அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு கலவையில் ஊறிய சுக்கினி துண்டுகளை போட்டு நன்றாக பொரிக்கவும்.
- நன்றாக பொரிந்ததும் அதனை மற்ற பக்கம் திருப்பி போட்டு பொரிக்கவும்.
- பின்பு மேலதிகமாக உள்ள எண்ணெயை நன்றாக வடித்து விட்டு ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- இதனை போல மற்றவற்றையும் பொரித்து எடுத்து தட்டில் வைக்கவும்.
- சுவையான சத்தான செய்வதற்கு இலகுவான சுக்கினி பொரியல் தயாராகி விட்டது.
- ஒருதட்டில் பாண்(ப்ரெட்)துண்டுகள், இடியாப்பம், புட்டு, சோறு(சாதம்)இவற்றில் ஒன்றுடன் சுவையான சத்தான சுக்கினி பொரியலை வைத்து பரிமாறவும்.
Note:
சுக்கினி நீர்சத்துகள், வைட்டமின் சத்துகள் நிறைந்தது. இதனை மேல் நாட்டு மக்கள் விரும்பி உண்பார்கள். அப்படிப்பட்ட சுக்கினியில் செய்யப்பட்ட பொரியல் சத்துகள் நிறைந்தது, செய்வதற்கு இலகுவானது சுவையானது. கவனிக்க வேண்டிய விசயங்கள் - சுக்கினியை கழுவி தோலுடன் மேலிருந்து கீழாக ஓரளவு மெல்லிய துண்டுகளாக வெட்டவும். மாற்று முறை - இதே முறையில் கத்தரிக்காயிலும் செய்யலாம். மிளகாய்த்தூளுக்கு பதிலாக மிளகுத்தூளை பாவிக்கலாம். எச்சரிக்கை - இருதய நோயாளர் வைத்தியரின் ஆலோசனைப்படி உண்ணவும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
சுக்கினி என்றால் என்ன
அன்புடன்,
கவிதா