மொபைல் பௌச் செய்வது எப்படி?

தேதி: November 7, 2009

4
Average: 4 (7 votes)

மெகந்தி டிசைன், ப்ரூட் கார்விங், எம்ப்ராய்டரி, பெயிண்டிங் என்று அனைத்திலும், தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியுள்ள திருமதி. வனிதாவில்வாரணி முருகன் அறுசுவை நேயர்களுக்காக இந்த அழகிய மொபைல் பெளச் செய்முறையை வழங்கியுள்ளார்.

 

துணி
ஊசி, நூல்
அலங்கரிக்க முத்து மணி
பட்டன்
பிரேம்
பென்சில்

 

தேவையானப் பொருட்கள் அனைத்தை தயாராக எடுத்து வைக்கவும். துணியை உங்கள் மொபைல் அளவுக்கு ஏற்றாற்போல் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். துணியை நறுக்கும்போது மொபைலின் முன் பகுதியை விட பின் பகுதி சற்று நீளம் அதிகமாக இருக்க வேண்டும்.
முன்பகுதி துணியை பிரேமில் பொருத்தி அதன் நடுவில் உங்களுக்கு விருப்பமான டிசைனை வரைந்து கொள்ளவும்.
அதன் உள்வட்டத்தை சுற்றிலும் மணிகள் கொண்டு தைக்கவும்.
பிறகு அதன் வெளிப்பக்கத்தை சுற்றி உங்கள் விருப்பத்துக்கும், ஆடையின் நிறத்துக்கும் ஏற்றபடி மணிகளை கொண்டு வேலைப்பாடுகள் செய்யவும். அதன் நடுவே ஒரு முத்து வைத்து தைக்கவும்.
இப்போது துணியின் ஒரங்களை தையல் போடுவதற்கு ஏற்றவாறு பென்சிலால் குறித்து கொள்ளவும்.
துணியின் முன்பாகம், பின் பாகம் இரண்டையும் சேர்த்து தைத்து கொள்ளவும்.
பிறகு முன் பாகத்தின் துணியின் முனைப்பகுதியை மட்டும் மடித்து தைக்கவும்.
பின் பாகத்தில் கூடுதலாக விட்டிருக்கும் துணியின் முனைப்பகுதியை படத்தில் காட்டியுள்ளபடி முக்கோணவடிவத்தில் மடித்து தைக்கவும்.
இப்போது அந்த துணியை திருப்பினால் பௌச் ஷேப் கிடைத்திருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான பட்டன் தைத்து அலங்கரிக்கவும். அழகிய மொபைல் பௌச் தயார்.
உங்கள் ஆடையின் நிறத்துக்கு ஏற்றபடி, உங்கள் விருப்பம் போல் அலங்கரிக்கப்பட்ட பௌச்களை மிக சுலபமாக நீங்களே செய்துக் கொள்ளலாம்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாக இருக்கிறது வனிதா. பாராட்டுக்கள். :)
எல்லாம் செய்து பார்க்க நேரம் தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. :)
முடிகிற போது நிச்சயம் முயற்சிப்பேன்.
இமா

‍- இமா க்றிஸ்

வனிதா நல்ல அழகாகச்செய்திருக்கிறீர்கள். உபயோகமானது. இன்னும் பல புதியவற்றைச் செய்யுங்கள்.

கலக்கல் பௌச் ,அருமை.பார்த்து ரசிப்பதோடு சரி,செய்து பார்க்க நேரம் இல்லை.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் நண்பர்களுக்கு என் நன்றிகள். :)

இமா... மிக்க நன்றி. நேரம் கிடைக்கும்போது செய்து சொல்லுங்கோ. பள்ளி தொடங்கியாச்சோ.....

செபா ஆன்ட்டி... மிக்க நன்றி. :)

மிக்க நன்றி ஆசியா.... உங்க பதிவை பார்ப்பதே அதிசயமா ஆயிடுச்சு இப்போ. எப்போ மீண்டும் வெளிநாடு கிளம்பறீங்க??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

akka u r doing great r u taking any class. then please inform me . i am very interested.

வினிஷா... மிக்க நன்றி. தாமதமான பதிவுக்கு மன்னியுங்கள் உங்கள் பதிவை இன்றே காண முடிந்தது. நான் செய்வதே அறுசுவைக்காக மட்டுமே..... அதனால் பயிற்சி வகுப்பு எதுவும் எடுக்கவில்லை. நீங்கள் சென்னை என்றால் விசாரித்து பாருங்கள் நிறைய இது போன்ற வகுப்புகள் நடக்கின்றன.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hi,

very nice mobile pouch. thanx for sharing.

மிக்க நன்றி சித்ரா :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta