சமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -22, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -23 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், இன்று திங்கட் கிழமை(09/11) ,பானு கனி 16
appufar 16 .... இப்படியே தொடங்கி முடிவில் இருக்கும் pgatkknagar 1 வரை செய்யவேண்டும்.

(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/
10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை அனைவரின் குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (17/11) முடிவடையும். புதன்கிழமை(18/11), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

நவம்பர் 09, 2009 - 8:20pm - வழங்கியவர் அதிரா

ரேணுகாக்கா இன்று என் கணக்கில் பானுகனியின் ஆனியன் முட்டை மசாலா
மாதுளை பழ பச்சடி
சுலப கேரட் அல்வா
நேற்றைய மெனு appufar vin
கருணைக்கிழங்கு பொரியல்
வெங்கயசட்னி
சன்னா தால் ஃப்ரை, ஈஸி உருளை மசாலா(suganyaprakash) எரர் வந்ததால் யாருக்கும் பின்னூட்டம் குடுக்கமுடியவில்லை உங்களுக்கும் பதிவு போடமுடியவில்லை

வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்

பிரியா நலமா? சமத்தா சமைத்து சொல்லுறீங்க,முடியும் போது இப்படியே வந்து போங்க,

தலைப்பு என்னமா தூங்குது,எப்பவும் வருபவர்களை கூட காணாமே:(

சீக்கரம் வாங்க,எல்லோரும் என் கணக்கு தேங்காய் லாடு (அப்சரா) தக்காளி ரசம் (RSMV ) இரண்டுமே சூப்பர்

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

நலமா?கோகுல் சமர்த்தாக ஸ்கூல் போறானா? சரி சமைத்து அசத்தலாமிற்கு வருவோம்.
நான் செய்தது ஷெய்ரா - நாஞ்சில் மீன் குழம்பு,மஹிஸ்ரீயின் புளிச்சட்னி குறித்து கொள்ளவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்புள்ள ரேணுகா மற்றும் தோழியர் அனைவரும் நலமா.. நானும் வந்து விட்டேன். அதிரா, நீங்கள் நலம் தானே. ரேணுகா, எனக்கும் ஒரு கணக்கு ஓபன் பண்ணுங்க...
திங்கள் - நவ 9:
அப்சரா - வட்டிலாப்பம் கஞ்சி
விஜயா அமர்னாத் - பீன்ஸ் பருப்பு உசிலி, மிளகு குழம்பு
வட்டிலாப்பம் கஞ்சிக்கு ஸ்டெப் பை ஸ்டெப் படம் எடுத்துள்ளேன்.. இன்னும் அட்மினுக்கு அனுப்பவில்லை.. படங்கள் நன்றாக வந்து இருக்கும் என எண்ணுகிறேன்.. வேறு யாரும் படம் எடுக்கவிருந்தாலும் எடுங்கள். முதல் முறை என்பதால் பயம்.. உங்களது நன்றாக இருந்தால் நானும் கம்பேர் செய்து கொள்வேன்.. நன்றி...
அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

Please add to my account - ஆனியன் முட்டை மசாலா - Banu Kani

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ரேணுகா நான் நலம். அதிரா எப்போது வருவா? அதிரா இல்லாதது கலகலப்பு இல்லாமல் இருக்கிறது.

இன்று அஞ்சலியின் பாகற்காய் புளிக்குழம்பு, சுகன்யாபிரகாஷின் புடலங்காய் புட்டு செய்தேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஹாய் ரேணுகா,சமைத்து அசத்தலாம் பகுதியை அழகாக நடத்தி கொண்டு போகின்றீர்கள்.முதலில் வாழ்த்துக்கள்.இந்த தடவை என்னுடைய குறிப்புகளையும் எல்லோரும் சேர்ந்து சேர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என் குறிப்பையும் செய்து பார்க்கும் ரேணுவுக்கும்,இதர தோழிகளுக்கும் என் நன்றிகள் பல,பல.
ஆயிஸ்ரீ ஸ்டெப் பை ஸ்டெப்_ஆக படமெடுத்துள்ளீர்களா...அதை பார்க்க மிக ஆவலாக உள்ளேன்.
ஏன் ரேணு,நானும் என்னுடயதை தவிர்த்து மற்றவர்களுடையதை ட்ரை பண்ணி ஃபோட்டோ எடுத்து அனுப்பலாமா?நேரம் கிடைக்கும் போது திரும்ப வருகின்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ரேணுகா,சமைத்து அசத்தலாம் பகுதியை அழகாக நடத்தி கொண்டு போகின்றீர்கள்.முதலில் வாழ்த்துக்கள்.இந்த தடவை என்னுடைய குறிப்புகளையும் எல்லோரும் சேர்ந்து சேர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.என் குறிப்பையும் செய்து பார்க்கும் ரேணுவுக்கும்,இதர தோழிகளுக்கும் என் நன்றிகள் பல,பல.
ஆயிஸ்ரீ ஸ்டெப் பை ஸ்டெப்_ஆக படமெடுத்துள்ளீர்களா...அதை பார்க்க மிக ஆவலாக உள்ளேன்.
ஏன் ரேணு,நானும் என்னுடயதை தவிர்த்து மற்றவர்களுடையதை ட்ரை பண்ணி ஃபோட்டோ எடுத்து அனுப்பலாமா?நேரம் கிடைக்கும் போது திரும்ப வருகின்றேன்.
அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஆசியா அக்கா நான் நலமே,கோகுல் சமத்தா ஸ்கூல் போறான்..உங்களை கானாம் என்று தேடினேன் வந்துட்டீங்க,நீங்க அபுதாபியில் இருந்த வரைக்கும் முதல் ஆளா வந்தீங்க,தேடமால் இருந்தேன் மிக்க நன்றி அக்கா,தொடர்ந்து சமைங்க

வாங்க ஆயிஸ்ரீ, நான் நினைப்பது எல்லாமே நடக்குது முதல் பகுதியில் உங்கள் பெயரை தான் முதலில் போட்டேன், என் மனதில் பதிந்துவிட்டீங்க,கானாமே என்று மனம் சொன்னது வந்துட்டீங்க, படம் எடுத்தால் உடனே அனுப்புங்கப்பா, பயப்படாதீங்க எல்லாம் நல்லாவே எடுத்திருப்பீங்க தவறுகள் இருந்தாலும் அப்ப தான் சரி பண்ணிக்க இயலும்,சமத்தா இப்ப
படத்தை அட்மினுக்கு அனுப்புங்க பார்ப்போம் ( எதிர் பார்த்து கொண்டு இருப்பேன்)

இலா மிக்க நன்றி.முடிந்தால் இன்னும் சமைங்க

வத்சலா மிக்க நன்றி தொடர்ந்து வாங்க

அப்சரா நலமா? அண்ணன் நலமா? உங்க வாழ்த்துக்கு நன்றி. நிச்சயம் அனுப்பலாம் அப்சரா. யாருடையதை
செய்தீங்களோ அவங்க பெயரும் போட்டு அட்மினுக்கு அனுப்புங்க, முடியும் போது நீங்களும் சமைத்து கொண்டு வாங்க,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஹாய் ரேணு,
எப்படி இருக்கிங்க? நேற்று நீங்க மணி என்ன என்று கேட்டிருக்கிங்க. ஸாரி, இப்பதான் பார்த்தேன் ரேணு. இப்ப இங்க மணி 3:03 p.m.
இன்று நான் உங்களை நினைத்துக்கொண்டே இரண்டு மூன்று 'டீ' குடித்துவிட்டேன். ஏன்னா, காலைல இருந்து லேசா கொஞ்சம் சளி பிடிக்கிற மாதிரி இருக்கு, தொண்டை எல்லாம் ஒரே 'கரகர'. பார்க்க‌லாம்.
அதான் ரொம்ப சமைக்கவில்லை. நான் செய்தது ஒரே ஒரு ஐய்ட்டம் - கேரட் & பீன்ஸ் பொரியல் (mareeswaran)
மீண்டும் நாளை பார்க்க‌லாம். Bye for now.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

மேலும் சில பதிவுகள்