சமைத்து அசத்தலாம் பகுதி - 23, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி -22, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -23 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், இன்று திங்கட் கிழமை(09/11) ,பானு கனி 16
appufar 16 .... இப்படியே தொடங்கி முடிவில் இருக்கும் pgatkknagar 1 வரை செய்யவேண்டும்.

(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/
10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை அனைவரின் குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (17/11) முடிவடையும். புதன்கிழமை(18/11), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

நவம்பர் 09, 2009 - 8:20pm - வழங்கியவர் அதிரா

ஹாய் ரேணு,இதோ குறித்துக் கொள்ளுங்கள் நான் செய்தவைகளை...,

ஆலு டொமேட்டோ சப்ஜி (மஹிரிசி)
பொங்கலம் (சுகன்யா பிரகாஷ்)
பிசிபெளாபாத் (சந்தோஷி ஸ்ரீராம்)

ஆயிஸ்ரீ..,நிச்சாயம் நன்றாகவே செய்திருப்பீர்கள்.என் மெயில் ஐ.டி ;
apsarafareej@yahoo.com

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

ஹாய் ரேணு,இதோ குறித்துக் கொள்ளுங்கள் நான் செய்தவைகளை...,

ஆலு டொமேட்டோ சப்ஜி (மஹிரிசி)
பொங்கலம் (சுகன்யா பிரகாஷ்)
பிசிபெளாபாத் (சந்தோஷி ஸ்ரீராம்)

ஆயிஸ்ரீ..,நிச்சாயம் நன்றாகவே செய்திருப்பீர்கள்.என் மெயில் ஐ.டி ;
apsarafareej@yahoo.com

அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

சமைத்து அசத்தலாம் பகுதி தொடங்கி ஒருவருடமாகிவிட்டதா? தொடர்ந்து நடத்தி செல்லும் அதிராவிற்கும் ரேணுகாவிற்கும் வாழ்த்துக்கள்.

இன்று திருமதி லதாஹைஷ்னின் கொள்ளு குருமா செய்தேன்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

ஜலிலா அக்கா வாங்க,நல்லா சமைத்து கொண்டு வரிங்க,மிக்க நன்றி.. தொடர்ந்து வாங்க

ஆசியா அக்கா பாரட்டிற்க்கு மிக்க நன்றி.ஆச்சிரியமா தான் இருக்கு,ஒரு வருடம் என்னமா ஓடிடுச்சு,,

செல்வி அக்கா உங்களை இங்கு பார்த்ததில் ரெம்ப மகிழ்ச்சி,உங்கள் வாழ்த்துக்கு ரெம்ப நன்றி.நீங்க அறுசுவைக்கு வந்துகொண்டு இருந்தால் நிச்சயம் செய்திருப்பீங்க அதனால் என்ன அக்கா பொறுமையா ஒவ்வொருத்தருடையதா சமைத்து சொல்லுங்க
இப்ப உடல் நிலை எப்படி இருக்கு,? நல்லா ஹெல்த்தியா சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க

ஆயிஸ்ரீ தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, ஒரு படம் அனுப்ப இத்தனை பயமா?அதிரா முடிந்தவரை எல்லோர் குறிப்பிலும் படம் எடுத்து அனுப்பினார், பயப்படாமல் அனுப்புங்க,ஒரே சமையல் என்றாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி வராது.வேறுபடும் சரியா

அப்சரா நீங்களும் வந்திட்டீங்களா? உங்க அண்ணன் சொல்றாரு நல்ல பிள்ளையாய் இருக்கும் உங்களை நான் வினாக்கிவிடுவேனாம்:), தொடர்ந்து வாங்க அப்சரா

வத்சலா வாங்க, ஒரு வருடம் என்பது எல்லோருக்கும் ஆச்சிரியம் தான்,ஒரு வருடமாய் நாம் அனைவரும் ஒரே தொடரில் ஒன்றாய் இருப்பது அதிசியம் தான் மீண்டும் வாங்க வத்சலா

வந்தவர்கள் அனைவரும் டீ குடிங்க, மற்றவர்கள் எங்கே,சீக்கரம் வாங்க நாட்கள் போகிறது மீண்டும் இப்படி ஒரு நாள் கிடைக்காது...

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா

மஹிஸ்ரீ = மீன் குருமா

Jaleelakamal

ஹாய் ரேணுகா.நலமா. அதிரா நலமாயிருக்காங்களா. ஒரு வருடம் வெற்றிகரமாக சமைத்துஅசத்தலாம் பகுதியை நட‌த்திவரும் உங்க இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.நேற்றுதான் அறுசுவைக்கு வரமுடிந்தது. நான் சமைத்த‌வை.
அப்சரா:‍‍‍‍;
கருணைக்கிழங்குபொரியல்
தேங்காய்லாடு
சன்னாமசாலா

ஹாய் ரேணுகா! சமைத்து அசத்தலாம் தொடக்கி ஒரு வருடம் முடிந்து விட்டதா? எல்லாம் உங்களதும், அதிராவின் விடா முயற்சியும் பொறுமையும்தான் காரணம். தொடந்து நடத்துங்கள்.என் பாராட்டுக்கள்.
நான் சமைத்தது;=
ஜானுவின் சில்லி சம்பல்
சுகன்யாவின் புடலங்காய் புட்டு
சந்தோசியின் பொரிச்ச குழம்பு
காந்திமதியின் அவலுப்புமா
செல்லியின் வாழைப்பழம் இல்லாத வாய்ப்பன்.
நான் முடிந்தவரை எல்லோர் குறிப்பில் இருந்தும் சமையல் செய்ய முயற்சிக்கிறேன். நன்றி.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஹாய் ரேணு,
எப்படி இருக்கிங்க? அதிரா நலமா? ரொம்ப தேங்ஸ் ரேணு, 'டீ'க்கும், மத்த டிப்ஸ்க்கும்! இப்ப பரவாயில்லை, நீங்க சொன்னமாதிரி முடிந்தவரை வென்னீரே குடிக்க பார்க்கிறேன். நன்றி!

என்ன, ஒரு வருடம் ஆகிவிட்டதா? நாட்கள்தான் என்னமா ஓடுகிறது?! எனக்கு என்னமோ இப்பதான் முதல் அசத்தலாம் வாரம், நம்ம ஜலிலா அக்கா சமையல் செய்தமாதிரி இருக்கு! இத்த‌னை நாட்க‌ளா இவ்வள‌வு சிற‌ப்பா இந்த இழையை விடா முய‌ற்சியுட‌ன் கொண்டு செல்லும், உங்க‌ள் இருவ‌ரையும் பாராட்டுவ‌தில் ரொம்ப ம‌கிழ்ச்சியா இருக்கு ரேணு!

வாழ்த்துக்க‌ள் அதிரா & ரேணு!
வாழ்க‌ உங்க‌ள் பணி!, வ‌ள‌ர்க‌ உங்கள் அறுசுவை சேவை!!

ச‌ரி, வ‌ந்த‌ விஷ‌ய‌த்தை சொல்லாம‌... என்ன‌ இது ரொம்ப‌ பேசிட்டுன்னு, கேட்க‌ போறிங்க :)
ஒன்னே ஒன்னுதான் செய்ய‌ முடிந்த‌து ரேணு...
கத்தரிக்காய் புளிக்குழம்பு (ச‌ந்தோஷி ஸ்ரீராம்)
எனக்கு உட‌ம்புக்கு முடிய‌லைன்னு வெளியில் சாப்பிட்டோம், ஆனா இன்னும் 5 நாட்க‌ள் இருக்கே... ச‌மைத்துக்கொண்டு வந்து உங்களை சந்திக்கிறேன்.bye!

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

இருவருக்கும் வாழ்த்துக்கள். ஒரு வருடமாக தொடர்ந்து ட்ரெயினை ஓட்டுவது சாதாரண காரியம் இல்லை.

ரேணு, இந்த முறையும் நானும் ஸ்ரீயும் ஒன்னா ஒரே ஒரு குறிப்போட வந்து இருக்கோம் :)
நான் செய்தது அப்சாராவின்: வெங்காய சட்னி

ஹாய் ரேணு,
நேற்று புதனன்று நான் செய்தவை...
அஞ்சலி - பாகற்காய் புளிக்குழம்பு
கவிதா கண்ணன் - மஷ்ரூம் மஞ்சூரியன்
ரஞ்ஜனி மதன் - சௌசௌ பச்சடி
எல்லாமே அருமை...
அப்சரா உங்க இமெயில் இப்போது தான் பார்த்தேன். மிகவும் நன்றிங்க...பதில் அனுப்புகிறேன்..

அன்புடன்,
ஆயிஸ்ரீ

அன்புடன்,
ஆயிஸ்ரீ

மேலும் சில பதிவுகள்