எள்ளு அடை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - 200 கிராம்
எள் - 10 கிராம்
வெள்ளை உளுத்தம்பருப்பு - 10 கிராம்
பொட்டுக்கடலை - 10 கிராம்
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலெண்ணெய் - கால் லிட்டர்


 

பச்சரிசியை 15 நிமிடம் ஊறவைத்து, சுத்தம் செய்து துணியில் உலர்த்தி, உலர்ந்த அரிசியை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவை வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வறுத்த பிறகு தட்டில் போட்டு ஆற வைக்கவும்.
வெள்ளை உளுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
ஆற வைத்த மாவுடன் அரைத்த பொடியை சேர்த்து, மிளகுத்தூள், உப்பு, எள்ளு, நெய் சேர்த்து கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்துக் கொள்ளவும்.
ஒரு பாலிதீன் தாளில் ஒவ்வொரு உருண்டைகளையும் தட்டி ஒரு குச்சியால் சிறு சிறு துளைகள் போடவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு ஒவ்வொன்றையும் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்