மசாலா தீயல்

image

வழங்கியவர் : kavisiva

தேதி : Sat, 14/11/2009 - 08:44

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

5
2 votes
Your rating: None
 

 

  • தேங்காய் துருவல் - அரை கப்
  • சின்ன வெங்காயம் - 5
  • பெரியவெங்காயம் - ஒன்று
  • கறிவேப்பிலை - 2 கொத்து
  • மிளகாய் தூள்- ஒரு மேசைக்கரண்டி(காரத்திற்கேற்ப)
  • மல்லித் தூள் - ஒரு மேசைக்கரண்டி
  • பெருஞ்சீரகம்(சோம்பு)- 1 1/2தேக்கரண்டி
  • கடுகு - அரை தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி

 

  • வாணலியில் 1/2 மேசைக்கரண்டி எண்ணெய் சூடாக்கி ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து 30 நொடிகள் வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய் துருவல் இளஞ்சிவப்பாகி வாசனை வரும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
  • இப்போது தீயைக் குறைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து 5 நொடிகள் வதக்கி அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுப்பட்டு விடும்.
  • சூடு ஆறியதும் தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் விட்டு கடுகு, அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கின வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் 1 1/2கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.
  • 5 நிமிடம் கொதித்ததும் இறக்கி இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும்.

Note:

இட்லி தோசைக்கு எப்போதும் சட்னி சாம்பார் என்று போரடித்தால் மாறுதலாக இந்த மசாலா தீயல் செய்து சாப்பிடலாம். இந்த தீயல் அதிக கெட்டியாக இருக்கக் கூடாது. சற்று நீர்க்க வைத்து சூடான இட்லியின் மேல் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும். இட்லியின் மீது ஊற்றி ஊறவைத்து எடுத்து செல்லலாம். 4 மணிநேரம் வரை கெடாமல் இருக்கும்.







மசாலா தீயல் இன்னக்கி செய்தேன் மேடம், நல்லா இருந்துச்சு தோசையுடன் சாப்பிட வித்தியாசமான ஒரு சுவையுடன் இருந்துச்சு. ஆனா நான் தான் ஒரு சின்ன தவறு செய்துட்டேன் சோம்பு சிறிது அதிகமாய்ட்டு அடுத்த முறை பண்ணும் போது அதை சரியா செய்துடுறேன். நன்றி மேடம்.

ஹாய் தேவிகா பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி! நன்றி!!

சோம்பு குறைத்து சேர்த்து செய்து பாருங்க. ரொம்ப நல்லா வரும். தேங்காய் வறுக்கும் போதே நல்ல வாசனை வர வறுக்க வேண்டும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சட்னி சாம்பார் போர் அடித்ததால் புதிதாக ஏதவது கிடைக்குமா என தேடிக் கொண்டு இருந்தேன். உங்கள் மசாலா தீயல் கண்ணில் பட்டது..நேற்றிரவு மசாலா தீயல்தான்.. நன்றாக இருந்தது.. தோசையை விட சாதத்திற்கு காம்பினேஷன் சூப்பர்.. :)

மசாலா தீயல் இட்லியுடன் செமை டேஸ்டா இருந்தது.

கவி, மசாலா தீயல் உன் குறிப்பை பார்த்தப் பிறகு தான் ஞாபகம் வந்தது. இன்று செய்தேன்.சரியான அளவுகள் கொடுத்துள்ளாய். இட்லிக்கு நன்றாக இருந்தது.

Save the Energy for the future generation