ஹேங்கிங் ஃபேர்ட்ஸ் நெஸ்ட்

தேதி: November 14, 2009

4
Average: 3.7 (3 votes)

 

முட்டை ஓடு - 2
பஞ்சு
ப்ரஷ்
பேப்பரிக் பெயிண்ட்
கத்திரிக்கோல்
தேங்காய் நார்
கலர் பேப்பர் - பச்சை மற்றும் பிங்க் நிறங்கள்
கனமான அட்டை
ஊசி (பெரியது)
நூல் கண்டு
ஸ்ட்ரா
உருண்டை வடிவ பெரிய மணிகள்
பெவிக்கால்

 

கொடுக்கப்பட்டுள்ள தேவையானப் பொருள்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
படத்தில் உள்ள வடிவத்தை கனமான அட்டையில் வரைந்து தனியாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அதேப் போல் இன்னொரு அட்டையில் செய்து கொள்ளவும். இந்த வடிவங்களை பச்சை மற்றும் பிங்க் நிற கலர் பேப்பரில் வரைந்து ஒவ்வொரு பேப்பரில் இரண்டு துண்டுகள் எடுத்துக் கொள்ளவும்.
வெட்டிய அட்டையின் ஒரு பக்கத்தில் பச்சைநிற பேப்பரையும் மற்றொரு பக்கத்தில் பிங்க் நிற பேப்பரையும் கம் தடவி ஒட்டிக் கொள்ளவும். இதேப்போன்று மற்றொரு அட்டையிலும் செய்துக் கொள்ளவும். கனமான அட்டையை தேவையான அளவிற்கு வட்ட வடிவமாக வெட்டி அதன் இருப்பக்கமும் பச்சைநிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்துக் காயவிடவும்.
பச்சை மற்றும் பிங்க்நிற பேப்பர் ஒட்டிய அட்டையில் ஒன்றை மட்டும் எடுத்து சமமான அளவில் இரண்டாக துண்டாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். நறுக்கின அட்டையில் ஒரு துண்டை மட்டும் எடுத்து, வெட்டாமல் வைத்திருக்கும் மற்றொரு அட்டையின் நடுவில் பெவிக்கால் வைத்து ஒட்டிக் கொள்ளவும்.
இதேப் போல் மற்றொரு பக்கத்திலும் நறுக்கின அட்டையை வைத்து ஒட்டி காயவிடவும்.
முட்டையில் ஓட்டை போட்டிருக்கும் மேல் பகுதியில் சிறிது பஞ்சை உருண்டையாக உருட்டி அதில் சொருகி வைக்கவும்.
இரண்டு முட்டையிலும் இதுப்போல் செய்து அதில் மஞ்சள்நிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும்.
முட்டையில் அடித்திருக்கும் பெயிண்ட் காய்ந்தவுடன் அதன் இரண்டு பக்கவாட்டிலும் ஆரஞ்சுநிற பெயிண்டை கொண்டு இறகு போன்று வரைந்துக் அந்த இடம் முழுவதும் பெயிண்ட் செய்துக் கொள்ளவும்.
குருவியின் தலைப்பகுதியில் கறுப்புநிற பெயிண்டால் இரண்டு கண்கள் வரைந்துக் கொள்ளவும். மிகச்சிறிய அளவில் பஞ்சை எடுத்து குருவியின் மூக்குப் போல் செய்து அதில் சிவப்புநிற பெயிண்டை அடித்துக் கொள்ளவும். வரைந்த இரண்டு கண்களுக்கும் சற்று கீழே இறக்கி மூக்குப்பகுதியை நடுவில் வைத்து கம் தடவி ஒட்டவும்.
பெயிண்ட் செய்திருக்கும் வட்டவடிவமான அட்டையின் நடுவில் பெரிய ஊசி நுழையும் அளவிற்கு ஓட்டையிட்டு, அதன் மேற்பகுதியில் தேங்காய் நார்களை கொண்டு குருவியின் கூடு போல் செய்துக் கொள்ளவும். பிறகு ஊசியில் நூலை இரட்டையாக கோர்த்துக் கொண்டு அட்டையின் அடிவழியாக விட்டு மேலே வைத்திருக்கும் தேங்காய் நாரோடு சேர்த்து சற்று தள்ளி மீண்டும் அதே ஓட்டையின் வழியாக விட்டு அடியில் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். மீண்டும் நூலை அடிவழியாக விட்டு மேல் நோக்கி கோர்த்து வைத்துக் கொள்ளவும்.
அதில் முழு ஸ்ட்ரா மற்றும் ஒரு பெரிய மணியை கோர்த்து முடிச்சுப் போட்டு வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது குருவியின் உடல் பகுதியின் நடுவில் நூலை கட்டிக் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். கட்டும் நூல் நழுவி வந்துவிடாதவாறு நன்கு இறுக்கமாக முடிச்சுப் போட்டுக் கொண்டு அதே நூலில் ஒரு பெரிய மணியை கோர்க்கவும். பிறகு அந்த நூலின் நுனிப்பகுதியில் இரண்டு செ.மீ அளவிற்கு விட்டுவிட்டு மீதி இடைவெளி உள்ள நூலின் அளவிற்கு ஏற்றாற்போல் ஒரு ஸ்ட்ராவை வெட்டி அதில் கோர்த்துக் கொண்டு மீண்டும் ஒரு பெரிய மணியைக் கோர்த்துக் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். இதேப் போல் மற்றொரு குருவியிலும் செய்துக் கொள்ளவும்.
பிறகு முன்பு செய்து வைத்திருக்கும் அட்டையில் இரண்டு துண்டுகள் ஒட்டிய அட்டையை விட்டுவிட்டு மற்றொரு அட்டையின் இரண்டு முனையிலும் ஓட்டையிட்டு அதில் இந்த குருவிகளை கோர்த்துக் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். குருவியின் கூடுப்போல் செய்திருக்கும் அட்டையை இரு குருவிகளும் நடுவில் வைத்து மேலுள்ள அட்டையோடு சேர்த்து முடிச்சு போடவும். மீதியுள்ள நூலை சிறிய வளையம் போல செய்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். மிக சுலபமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய அழகிய ஹேங்கிங் ஃபேர்ட்ஸ் நெஸ்ட் ரெடி.
இந்த ஹேங்கிங் ஃபேர்ட்ஸ் நெஸ்ட் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

ஃபேர்ட்ஸ் வித் நெஸ்ட் ரொம்ப சூப்பர் பாப்பி

Jaleelakamal

மிக அழகாயிருக்கிறது. வாழ்த்துக்கள்.
அன்புள்ள,
செபா.

அன்பு பாப்பி,
வித்தியாசமாக ஆனால் அழகாக இருக்கிறது உங்கள் கைவேலை. பாராட்டுக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அழகாக இருக்கு மேடம் பாராட்டுக்கள்

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta