உளுந்து தேங்காய் புட்டு

வழங்கியவர் : kavisiva
தேதி : திங்கள், 16/11/2009 - 10:30
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- உளுந்து - ஒரு கப்
- பச்சரிசி - 1/4 கப்
- வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் - 1/2 கப்
- உப்பு - தேவையான அளவு
- உளுந்துடன் வெந்தயம் சேர்த்தும், அரிசியையும் தனித்தனியே 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
- உளுந்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.(மாவு பொங்க பொங்க அரைக்க வேண்டியதில்லை)
- அரிசியை தனியே மிக்ஸியில் கெட்டியாக அரைத்து எடுக்கவும். இரண்டு மாவையும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.
- இந்த கலவையிலிருந்து எலுமிச்சையளவு எடுத்து தட்டில் பரப்பிய தேங்காயில் பிரட்டி எடுக்கவும்.
- இப்படியே எல்லா மாவிலும் செய்து இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும்.
- கத்தியால் வெட்டி பார்த்து வெந்தது உறுதியானதும் எடுத்து சர்க்கரை அல்லது இட்லிமிளகாய் பொடியுடன் பரிமாறவும். கோழிக்குழம்பு அல்லது மட்டன் குழம்பு கூட சுவையாக இருக்கும்.
Note:
உளுந்து கர்ப்பப்பையை பலப்படுத்தும். வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. மாவின் பதம் விரல்களால் அள்ளி எடுக்க வரவேண்டும். அதே நேரத்தில் உருண்டையாக பிடிக்க முடியாத அளவு இருக்க வேண்டும். கொழுக்கட்டை மாவு பதத்தை விட கொஞ்சம் லூசாக இருக்க வேண்டும். தேங்காய் துருவலில் சிறிது சர்க்கரை கலந்து அதில் இந்த மாவை பிரட்டி வேகவைத்தால் சுவை கூடும். குழந்தைகளும் விரும்புவார்கள்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
3 நிமிடங்கள் 1 sec முன்பு
4 நிமிடங்கள் 1 sec முன்பு
16 நிமிடங்கள் 38 sec முன்பு
26 நிமிடங்கள் 25 sec முன்பு
31 நிமிடங்கள் 17 sec முன்பு
31 நிமிடங்கள் 39 sec முன்பு
33 நிமிடங்கள் 9 sec முன்பு
34 நிமிடங்கள் 14 sec முன்பு
38 நிமிடங்கள் 14 sec முன்பு
38 நிமிடங்கள் 44 sec முன்பு