கீரை வடை

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு: 7 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப் பருப்பு - 200 கிராம்
முளைக்கீரை - இரண்டு கையளவு
பச்சை மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி
பெருங்காய நீர் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 150 மில்லி
உப்பு - ஒரு தேக்கரண்டி


 

கடலைப் பருப்பை களைந்து ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் நைசாக அரிந்த கீரை, பச்சை மிளகாய் விழுது, பெருங்காய நீர், உப்பு சேர்த்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.
இதில் எந்த கீரையும் பயன்படுத்தலாம். முருங்கை, பொன்னாங்கண்ணி போன்றவற்றின் இலைகளை மட்டும் பயன் படுத்தவும்.


மேலும் சில குறிப்புகள்