பேரீட்சை பழ பாயசம்

தேதி: November 18, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பேரீட்சை பழம் - 100 கிராம்
பாதாம் - 4
ஏலக்காய் - 3
கோதுமை மாவு - 100 கிராம்
பால் - ஒரு லிட்டர்
நெய் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - 5
திராட்சை - 8


 

பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.
அரை கப் சூடான பாலில் பேரீட்சை பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே நெய்யில் கோதுமையை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வறுக்கவும். கோதுமை வாசனை போகும் வரை 2 நிமிடம் வறுக்கவும்.
வறுத்த கோதுமை மாவில் அரை கப் ஆற வைத்த பாலை ஊற்றி கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
மீதியிருக்கும் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். கரைத்து வைத்திருக்கும் கோதுமை கலவையை அதில் ஊற்றி கொண்டே பாலை கிளறி விடவும்.
2 நிமிடம் கழித்து ஊற வைத்த பேரீட்சை பழத்தை போட்டு கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலவை சற்று கெட்டியாக ஆனதும் 3 நிமிடம் கழித்து சீனியை போட்டு கிளறி விடவும். அதில் ஏலக்காய் பொடியை தூவி கிளறி இறக்கி விடவும்.
அதன் பிறகு துருவிய பாதாம் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சையை போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
இந்த குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாந்தி முத்துராமலிங்கம் </b> அவர்கள். சிறு வயதிலிருந்தே சமையலில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர், பழங்கால சமையல், இக்கால நவீன சமையல் என்று அனைத்திலும் திறன் படைத்தவர். வகை வகையான உணவுகளை வித்தியாசமாக மட்டுமல்லாது, சுவைப்பட தயாரிக்கக்கூடியவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் ஷாந்தி,நலமா?பேரீச்சம்பழ பாயாசம் இப்போ செய்யணும்,சிறிய ஹெல்ப்,கோதுமை மா அவித்ததா அவிக்காததா?சூடான பால் என்பது அதிகமான சூட்டிலா பேரீச்சம்பழத்தை ஊறவைக்கணும்?

நீ என்னை மறந்தாலும்,நான் உன்னை மறவேன்