நெத்திலி மீன் அவியல்

தேதி: November 20, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

நெத்திலி மீன் மட்டுமல்லாமல் வாளை மற்றும் திருக்கை மீன் தவிர்த்த எல்லா மீன்களிலும் இதே போல் செய்யலாம். நெத்திலி மற்றும் மத்திமீன்(சாளை) தவிர்த்த மற்ற மீன்களுக்கு மல்லித்தூள் சேர்க்க தேவையில்லை.

 

நெத்திலி மீன் - 250 கிராம்
தேங்காய் துருவல் - அரை கப்
சின்ன வெங்காயம் - 10 முதல் 12
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்)
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மல்லி தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

நெத்திலி மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
இடிகல்லில் அல்லது அம்மியில் முதலில் சின்ன வெங்காயத்தை வைத்து ஒன்றிரண்டாக உடைத்து கொண்டு அதன் பிறகு தேங்காய், பச்சைமிளகாய், பொடி வகைகள், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து லேசாக இடித்து எடுக்கவும். (மிக்ஸியில் செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் சேர்த்து விப்பரில் ஒன்று அல்லது இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்)
மீன் செய்யும் பாத்திரத்தில்(மண் சட்டியாக இருந்தால் சுவை அதிகரிக்கும்) மீனைப் போட்டு அதனுடன் அரைத்த மசாலா, மீதமுள்ள கறிவேப்பிலை, உப்பு சேர்க்கவும்.
இவற்றுடன் புளியைக்கரைத்து ஊற்றி மேலும் அரை கப் தண்ணீர் ஊற்றி கலந்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் கொதிக்க விடவும். இடையிடையே சட்டியோடு எடுத்து சுழற்றி வைக்கவும்.(கரண்டி போட்டு கிளறினால் மீன் உடைந்து விடும்)
தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும். விரும்பினால் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை பரவலாக ஊற்றி லேசாக கிளறி இறக்கலாம்.
சுவையான நெத்திலி மீன் அவியல் தயார். சாதத்தில் பிசைந்தோ அல்லது சைட் டிஷ்ஷாகவோ வைத்து சாப்பிடலாம். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. கவிசிவா </b> அவர்கள். இந்த குறிப்பினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும்.

நெத்திலி தவிர்த்த மற்ற மீன்களில் செய்யும் போது கொஞ்சம் அதிகம் தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியான கிரேவி பதத்திலேயே இறக்கி விட வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கவி,கன்னியாக்குமரி மாவட்ட சமையல் குறிப்பாகக் கொடுத்து அசத்திறீங்க.
இந்த மண் சட்டி எங்கே கிடைக்கிறது?Save the Energy for the future generation

Save the Energy for the future generation

Instead of nethelli meen, can we use 'Nethelli karuvadu'?

ஹாய் இந்திரா அக்கா எப்படி இருக்கீங்க பேசி ரொம்ப நாள் ஆச்சு!
நம் குமரிமாவட்ட சுவையை எல்லோரும் ருசிக்கட்டுமேன்னுதான் நம் சமையலாக அனுப்புகிறேன் :-)

மண் சட்டி இந்தியாவில் இருந்து கொண்டு வந்தேன். மீனை அதில் சமைத்தால்தான் ருசிக்கிறது :-).

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹாய் maggi நெத்திலி கருவாட்டிலும் செய்யலாம். உப்பு மட்டும் பார்த்து சேர்க்க வேண்டும். புளியை குறைத்துக்கொண்டு மாங்காய் சேர்த்து செய்தாலும் நன்றாக இருக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Thank you Kavi.

கவி,நன்றாக இருக்கிறேன்.அவியலைப் பார்க்கும் போது உடனே செய்துச் சாப்பிடணும் போல் உள்ளது.ஆனால் 41 நாட்கள் விரதம்.அம்மா சமையல் ஞாபகம் வருது. Save the Energy for the future generation

Save the Energy for the future generation