ஓட்ஸ் மாம்பழ டயட் ரொட்டி

தேதி: November 23, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஓட்ஸ் 3 கப்
கோதுமை மாவு ஒரு கப்
தேவையான அளவு உப்பு
நன்கு பழுத்த மாம்பழம் (புளிப்பிலாதது) ஒன்று (பெரியது)
மாம்பழம் இல்லாவிட்டால் mango pulp ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்.
சர்க்கரை (தேவைப் பட்டால்)


 

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
மாம்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் அடித்து நன்கு கூழாக்கிக் கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில், ஓட்ஸ் மாவுடன் கொடுமை மாவு, மாம்பழக் கூழ், உப்பு சேர்த்து நன்கு பிடையவும். ஒருவேளை மாம்பழம் மிகவும் புளிப்பாக இருந்தால் மாவுடன் சிறிது சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
மேற்படி மாவில், தேவையான அளவு வெந்நீர் ஊற்றி நன்கு பிசையவும். நாம் சாதரணமாக சப்பாத்திக்கு பிசையும் பதத்தைவிட 4 டீ ஸ்பூன் நீர் அதிகமாக சேர்த்து பிசைய வேண்டும். பிசைந்த மாவை அரை மணி முதல் 2 மணி நேரம் வரை, ஊற வைக்க வேண்டும்.
பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு நான் ஸ்டிக் பானில் போட்டு சப்பாத்தி செய்து சூடாக பரிமாறவும்.
(சப்பாத்தி செய்தவுடன் சூடாக இருக்கும் போதே ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிட்டால் காய்ந்து போகாமல், மென்மையாகவே இருக்கும்.)
இதை எந்த சப்ஜியுடனும் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்