மாங்காய் பருப்பு

தேதி: November 27, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

புளிப்பு மாங்காய் - ஒன்று
துவரம் பருப்பு - 4 மேசைக்கரண்டி
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 5
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - அரை மேசைக்கரண்டி
சீரகம் - கால் மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

மாங்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாகவோ அல்லது சீவியோ வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை லேசாக கீறி வைக்கவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
பருப்பு வகைகளை கழுவி, அதனுடன் மாங்காய், கீறிய பச்சை மிளகாய், நறுக்கின சின்ன வெங்காயத்தில் பாதியளவு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் நன்றாக குழையும் வரை நான்கு விசில் வைத்து வேக விட்டு எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும் சீரகம், உளுத்தம் பருப்பு, துண்டுகளாக்கின காய்ந்த மிளகாய், நறுக்கின மீதி வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
அதில் வேக வைத்த பருப்பு, மாங்காய் கலவையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும்.
மிகவும் சுலபமாக எளிதில் செய்யக்கூடிய சுவையான மாங்காய் பருப்பு தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாகவும் பொருத்தமாகவும் இருக்கும். அறுசுவையில் உடல் ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் மற்றும் அழகு குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பாப்ஸ் என்கிற <b> திருமதி. உமா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள மாங்காய் பருப்பு. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும்.

புளிப்பில்லாத மாங்காயாக இருந்தால் தக்காளி பழம் சேர்த்து வேக வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். பூண்டு சேர்க்க விரும்புவோர் பொடியாக அறிந்து தாளிக்கும் பொழுது சேர்த்துக் கொள்ளவும். இங்கே இவை இரண்டும் சேர்க்கப்படவில்லை.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மாங்காய் பருப்பு குறிப்பை வெளியிட்ட அட்மின் மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.

வாழ்த்துக்கள்....அழகோடு இப்ப சமையல் ஆலோசனையுமா!!!!

அது சரி...என்ன ஒரே மாங்காய வாசனையா இருக்கு
....!!!!!...????...என்ன விசயம்.../விசேசம்...ன்னு சீக்கிரம் சொன்னா நாங்களும் சந்தோசப்படுவோமில்ல...
ஆனால்...
உண்மையில் நல்ல குறிப்பு உமா...பாராட்டுக்கள்.....

என்றும் அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

two times...

இளவரசி மேடம், எப்படியிருக்கீங்க? உங்களோட பேசியே ரொம்ப நாளாச்சு...நானும் நலம். எனக்கு இப்போவெல்லாம் நேரமே கிடைப்பதில்லை வேலை செம பிசி.
உங்க குறிப்பெல்லாம் ரொம்ப அருமையா இருக்கு நானும் பல செய்திருக்கிறேன்.அதை விடவா...நான் பெரிசா கொடுத்துடபோறேன்...ஏதோ எனக்கு தெரிஞ்சதை செய்தேன்.உங்க பாராட்டுக்கு நன்றி.

இப்போ கூட உங்க கோதுமை பிரியாணி குறிப்பு பார்த்தேன். மிகவும் அருமையா இருக்கு,சத்தான குறிப்பெல்லாம் இது போல் நிறைய கொடுங்க. எனக்கு கோதுமை ரவை வைத்து எதுவுமே செய்யத்தெரியாது, ஆனால் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பேன். அதனால் செய்து பார்த்து விட்டு அங்கே பின்னூட்டம் கொடுக்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்,
நன்றி.