ஜர்தோஸி டிசைன்

தேதி: November 28, 2009

4
Average: 3.8 (9 votes)

நாகை மாவட்டத்தில் Fevicryl நிறுவனத்தாரால் பெண்களுக்காக நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பின்போது பங்குபெற்ற ஒருவரின் கைவண்ணம்தான் இந்த எளிமையான ஜர்தோஸி டிசைன்.

 

துணி
பிரேம்
கோல்டுநிற சம்கி
பென்சில்
ஃபேப்பரிக் க்ளு
கோல்டுநிற ஜர்தோஸி
கிலிடர்ஸ்
குந்தன் ஸ்டோன்

 

ஃப்ளைன் புடவை அல்லது சுடிதாரில் படத்தில் உள்ள டிசைனை பார்த்து பென்சிலால் வரைந்துக் கொள்ளவும்.
நடுவில் உள்ள வட்டத்தை சுற்றிலும் பேப்பரிக் க்ளுவை வைக்கவும்.
சிறிய வட்டத்தின் அளவுகேற்ப ஜர்தோஸியை துண்டாக நறுக்கி எடுத்துக் கொண்டு க்ளு தடவிய வட்டத்தின் மீது வைத்து ஒட்டவும்.
பெரிய வட்டத்திலும் இதுப்போல் ஜர்தோஸியை ஒட்டி நன்கு காயவிடவும்.
இப்பொழுது இரண்டு வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சின்ன சின்ன புள்ளிகள் வைத்திருக்கும் இடத்தில் க்ளு வைத்து வெள்ளைநிற குந்தன் ஸ்டோனை ஒட்டவும்.
வெளிவட்டத்தை சுற்றிலும் சிறிய இதழ்கள் வரைந்திருக்கும் இடத்தில் சுடிதார் அல்லது புடவையின் நிறத்திற்கேற்றவாறு கிலிடர்ஸை கொண்டு இதழ்கள் வரைந்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு இதழ்களின் மேல்முனையிலும் க்ளு வைத்து அதில் கோல்டுநிற சம்கியை ஒட்டி காயவிடவும்.
இந்த இதழ்களின் இடைவெளியில் கோல்டுநிற கிலிடர்ஸால் சிறிய கோடுகள் போல் வரைந்துக் கொள்ளவும். மிகவும் எளிமையான ஜர்தோஸி டிசைன் தயார். உங்களுக்கு விருப்பமான டிசைனை ஃப்ளைன் சுடிதார், புடவை மற்றும் குழந்தைகளின் ஆடை ஆகியவற்றில் வரைந்து இதுப்போல் ஜர்தோஸியை கொண்டு வடிவமைக்கலாம்.
ஜர்தோஸி மற்றும் சம்கியை கொண்டு செய்யப்பட்ட மற்றொரு டிசைன் இது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

டிசைன்கள் அழகாக இருக்கின்றன. முயன்று பார்க்கிறேன்.
இமா

‍- இமா க்றிஸ்

simple and super.keep racking

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta