கத்தரிகாய் சட்னி

வழங்கியவர் : radha rani
தேதி : ஞாயிறு, 29/11/2009 - 09:59
ஆயத்த நேரம் : 5 நிமிடம்
சமைக்கும் நேரம் : 5 நிமிடம்
பரிமாறும் அளவு : 4 நபர்களுக்கு
- கத்தரிகாய் - 4 சிறியது
- சின்னவெங்காயம் - 10
- வத்தல் மிளகாய் - 5
- தக்காளீ - 2
- கடலைபருப்பு - 1டேபிள்ஸ்பூன்
- பூண்டு - 2பல்
- மல்லி தழை - 50கிராம்
- புளி - 2கொட்டை அளவு
- கத்தரிகாயை சிறிதாக நறுக்கி கொள்ளவேண்டும்
- தக்காளி வெங்காயத்தை நறுக்கி கொள்ளவேண்டும்.
- கடாயில் எண்ணை ஊற்றி கடலைபருப்பை வறுத்துதனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
- அதேஎண்ணையில்நறுக்கிய கத்தரிகாய்,வத்தல்,புளி,தக்காளி, வெங்காயம், மல்லிதழை,ஆகியவற்றை வதக்கி கொள்ளவேண்டும்.வறுத்த கடலைபருப்புடன் வதக்கிய அனைத்துபொருட்களையும் சேர்த்து சிறிது உப்புடன் மிக்சியில் அரைக்கவேண்டும்.
- பின் அரைத்த விழுதுடன் தேவையானால் சிறிதுதண்ணீர்சேர்த்துஅதில்கடுகு,உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை, தாளிக்கவேண்டும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
wt abt d brinjal... u have stopped oly with cutting of brinjal.. wt to do next?
திருத்தம் செய்து விட்டேன்..நன்றி!
radharani