மாவு சட்னி

image

வழங்கியவர் : radha rani

தேதி : ஞாயிறு, 29/11/2009 - 11:32

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 10 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபருக்கு

3.666665
3 votes
Your rating: None
 

 

  • இட்லிமாவு [சிறிது புளித்தது] - ஒருகுழிகரண்டி
  • சின்னவெங்காயம்- 10
  • கடுகு, உளுந்தம்பருப்பு- 1ஸ்பூன்
  • மிளகாய்வத்தல் - 10
  • பெருங்காயம்- சிறிது
  • தேங்காய்- அரைமூடி
  • எண்ணை- ஒருகுழிகரண்டி

 

  • சின்னவெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவேண்டும்.
  • தேங்காய்,வத்தலை மிக்ஸியில் நன்கு விழுதாக அரைத்து கொள்ளவேண்டும்.
  • வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு,கருவேப்பிலை தாளித்து நறுக்கிய் வெங்காயத்தை போட்டு சற்று முறுகலாக வதக்கி அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.
  • அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர்சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
  • பின்பு இட்லிமாவில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நீர்க்க கரைத்து அதை கொதிக்கும் விழுதுடன் சேர்த்து உப்பை சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கொதிக்கவிட்டு ஒரு பாத்திரத்தில் எடுத்துவைக்கவேண்டும்.
  • வத்தல் அதிகம் சேர்த்தால்தான் இந்த சட்னி சுவையாக இருக்கும்.

Note:

வெங்காயத்தை வதக்கும் போது கவனமாக கருகி விடாமல் ஆனால் முறுகலாக வதக்க வேண்டும்.முறுகலாக இருந்தால் தான் மாவு சட்னி சுவையாக இருககும்.