குருவிக்கூடு போண்டா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேமியா - 100 கிராம்
எண்ணெய் - கால் லிட்டர்
தோல் நீக்கிய உருளைக்கிழங்கு - 200 கிராம்
பட்டாணி - 50 கிராம்
மைதா - 2 தேக்கரண்டி
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 7
கொத்தமல்லித் தழை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கு, பட்டாணி இரண்டையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
அத்துடன் வெட்டிய பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லித் தழை முதலியவற்றை போட்டு நன்றாக பிசைந்து பின் சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். (உருண்டை குருவிக்கூடு வடிவத்தில் நடுவில் பள்ளமிட்டு உருட்டவும்.)
மைதாவை கொஞ்சம் தண்ணீர் விட்டு லேசாக பசைபோல் செய்து கொள்ளவும்.
பின் குருவிக்கூடு உருண்டையை மைதா பசையில் உருட்டி பின் சேமியா மேல் புரட்டவும்.
பின் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குருவிக்கூடு உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்