
வழங்கியவர் : srividhyaiyer
தேதி : திங்கள், 30/11/2009 - 02:04
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு : 2 பேருக்கு
- கத்தரிக்காய் , சுரை காய், பீன்ஸ்,கத்தரிக்காய் , புடலங்காய், அவரைக் காய், கொத்தவரங்காய், பூசணிக்காய்
- வேக வைத்த துவரம் பருப்பு நுறு கிராம்
- மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
- தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன்
- தாளிக்க: ஒரு ஸ்பூன் எண்ணெய் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை சிறிதளவு
- கால் கிலோ காயை நடுத்தர அளவில் நறுக்கி உப்பு மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும்.
- காய் நன்கு வெந்த உடன் வேக வைத்த பருப்பை அத்துடன் சேர்க்கவும். பிறகு http://www.arusuvai.com/tamil/node/14110 என்ற பக்கத்தில் நான் கொடுத்துள்ள பொடியைக் கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு துருவிய தேங்காயை அத்துடன் கலந்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி தாளித்து சூடாக பரிமாறவும்.
Note:
மேலே கண்டவற்றில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காயோ இருந்தால் நல்லது. (புடலங்காய், என்றால் மற்ற எந்த காயுடனும் சேராது. எனவே புடலன்காயாக இருந்தால் வெறும் தக்காளியுன் சமைக்கவும்) கூட்டு பொடி செய்யும் முறை தேவையான பொருட்கள் 1 ) கடலை பருப்பு 2 கப் (2 ) தனியா (கொத்தமல்லி விதை) ஒரு கப் (3 ) காய்ந்த மிளகாய் 5 (4 )எண்ணெய் ஒரு ஸ்பூன் (5 )பெருங்காயம் சிறிதளவு செய்முறை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்துக் கொண்டு கடலை பருப்பை பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு தனியாவை வறுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மீண்டும் எண்ணெய் சேர்க்க வேண்டியதில்லை. அடுத்து அடுப்பை அணைத்துவிட்டு அந்த வாணலியின் சூட்டிலேயே மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு ஒன்றும் இரண்டுமாக பொடித்து வைத்துக் கொண்டால் மிக எளிய முறையில் கூட்டு அரைத்துவிட்ட சாம்பார் என செய்து அசத்தலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு
7 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு