பொரி உருண்டை

தேதி: December 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

பொரி - 4 கப்
வெல்லம் - 200 கிராம்


 

பொரியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறு சிறு துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உடைத்த வெல்லத்தை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வெல்லத்தை கரைய விடவும்.
வெல்லம் கரைந்ததும் அதை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் 3 கப் அளவு வடிகட்டிய வெல்ல தண்ணீரை ஊற்றி கம்பி பதம் வரும் வரை கிளறவும்.
பாகு நன்கு நுரைத்து பொங்கி வரும் போது பொரியை கொட்டி பாகுடன் பொரி சேரும்படி நன்கு கிளறி விட்டு இறக்கி வைத்து விடவும்.
ஒரு மரப்பலகை அல்லது தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த பொரி கலவையை கொட்டி ஒரு பெரிய எலுமிச்சைப்பழ அளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பொரி உருண்டை உருட்டும்பொழுது கையில் ஒட்டாமல் இருப்பதற்கு சிறிது எண்ணெயை கையில் தடவிக் கொள்ளவும்.
சுவையான மொறு மொறுப்பான பொரி உருண்டை தயார். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் நமுத்து போகாமல் மொறுமொறுப்பாகவே இருக்கும். இந்த பொரி உருண்டை குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b>திருமதி. சசிகலா அய்யாசாமி </b>அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் சசிகலா, பொரி உருண்டை பார்க்க நன்றாக இருக்கின்றது. நான் கடையில் வாங்கித்தான் சாப்பிட்டிருக்கின்றேன். செய்வதற்கு முறை தெரியாமல் இருந்தேன். இப்போது தெரிந்து கொண்டேன்.செய்து பார்த்துவிட்டு, பின்னுட்டம் தருகின்றேன் நன்றி
அன்புடன் ராணி
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.