பேப்பர் ரோஸ் (காகித ரோஜா)

தேதி: December 2, 2009

4
Average: 3.5 (18 votes)

 

கலர் பேப்பர் - மஞ்சள் மற்றும் பச்சைநிறம்
க்ளு
கத்திரிக்கோல்
வெள்ளை பேப்பர்(தேவைப்பட்டால்)

 

பேப்பர் ரோஸ் செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு வெள்ளை பேப்பரில் படத்தில் உள்ளது போல் இதழ்களுக்கான டிசைனை வரைந்துக் கொள்ளவும். முதலில் ஒரு சிறிய இதழ், இரண்டாவது இதழ் சிறிது பெரியதாக வரைய வேண்டும். மூன்றாவதாக வரையும் இதழ் இரண்டாவது இதழை விட சற்று பெரியதாக இருந்தால் போதுமானது. (இரண்டாவது மற்றும் மூன்றாவது இதழுக்கான வித்தியாசம் தெரியாதவாறு வரைந்திருக்க வேண்டும்.) வரைந்த படத்தை தனித்தனி துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
வெள்ளை பேப்பரில் நறுக்கின இதழை மஞ்சள்நிற பேப்பரின் மீது வைத்து அதன் அளவில் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் மொத்தம் 10 இதழ்களை தயார் செய்து வைத்துக் கொள்ளவும். முதல் இதழ் - 3 (சிறியது), இரண்டாவது இதழ் - 3 (மீடியம்), மூன்றாவது இதழ் - 4(பெரியது).
இதழின் அடியில் நடுவில் கோடு போட்டிருக்கும் இடத்தில் மட்டும் கத்தரிக்கோலால் ஒரு முறை நறுக்கிக் கொள்ளவும்.
இப்பொழுது இரண்டு சதுரங்கள் தெரியும். அதில் ஏதாவது ஒரு சதுரத்தின் மேல் க்ளு வைத்து அதன் மீது மற்றொரு சதுரத்தை வைக்கவும். இப்பொழுது பார்த்தால் ஒரு ரோஜா பூவின் இதழ் வடிவம் கிடைக்கும். இதே போன்று எல்லா இதழ்களையும் செய்து வைக்கவும்.
படத்தில் காட்டியுள்ளபடி சிறிய இதழில் ஒரு இதழை மட்டும் எடுத்து உள்புறமாக சுருட்ட வேண்டும்.
சிறிய இதழில் மற்றொரு இதழை எடுத்து லேசாக உட்புறமாக சுருட்டி படத்தில் இருப்பது போல் வைத்து ஒட்டிக் கொள்ளவும். ஒவ்வொரு இதழையும் ஒட்டுவதற்குதான் கீழே இருக்கும் சிறிய சதுரம், அதில் தான் க்ளு வைத்து ஒட்ட வேண்டும். இதுப்போல் மூன்று சிறிய இதழ்களை ஒட்டினால் ஒரு அழகிய ரோஜா மொட்டு கிடைக்கும்.
மற்ற ஏழு இதழ்களிலும் உள்ள இரு வளைவுகளை வெளிப்புறமாக சிறிது சுருட்டி விடவும்.
அடுத்து மீடியம் சைஸ் இதழ்களை ஒட்ட வேண்டும். ஒரு மீடியம் சைஸ் இதழின் சதுர பகுதியில் சிறிது க்ளு வைத்து மொட்டு பகுதியை வைக்கவும். அடுத்த இதழ் ஒட்டும் போது முதல் இதழில் பாதி பகுதியோடு சேர்த்து ஒட்டவும். பூவை தலைகீழாக பிடித்து கொண்டு ஒட்டினால் எளிதில் ஒட்டலாம்.
இதுப்போல் எல்லா இதழ்களையும் ஒட்டிக் கொள்ளவும்.
ஒரு பச்சைநிற பேப்பரில் சிறிய வட்டம் வரைந்து, அதில் ஐந்து இதழ் வருமாறு வரைந்து தனியே நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன் ஒவ்வொரு இலையின் முனையையும் பாதிவரைக்கும் சுருட்டி விடவும்.
பூவை தலைகீழாக வைத்து இலையில் சுருட்டியப்பகுதி மேலே தெரிவதுபோல் வைத்து ஒட்டிக்கொள்ளவும்.
காம்பு பகுதிக்கு சிறிய அளவில் பச்சை வண்ண பேப்பரை எடுத்துக் கொள்ளவும். நறுக்கின பேப்பரின் இடது பக்கத்தின் மேலிருந்து இறுக்கமாக சுற்றி நுனி பகுதியை ஒட்டவும். மேல் பகுதியில் சிறிது நறுக்கி விட்டு பூவின் அடியில் க்ளு வைத்து ஒட்டி விடவும்.
எளிமையாக செய்யக்கூடிய அழகிய பேப்பர் ரோஸ் தயார்.
நீங்கள் விரும்பும் நிறங்களில் ரோஜாக்கள் செய்து பூச்சாடியில் வைத்து அலங்கரிக்கவும்.
கூட்டாஞ்சோறு பகுதியின் மூலம் குறிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கும் திருமதி. ரேணுகா அவர்கள், இந்த பேப்பர் ரோஸ் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அன்பு ரேணுகா,

வெகு நேர்த்தியாக செய்து காட்டி இருக்கிறீர்கள். படங்களும் தெளிவாகப் பளீரென்று இருக்கின்றன. பாராட்டுக்கள் ரேணுகா. :) தொடர்ந்தும் உங்கள் குறிப்புகளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கிங்க ரேன்ணு.வாங்க இப்ப தான் உங்க கைவண்னம் வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் போட்டோ ப்ரைம்க்கு பின் இப்ப தான் கரெக்டா. எனக்கு க்ராப்ட்ஸ் ரொம்ப பிடிக்கும் அதிலும் இந்த பேப்பரில் செய்யகூடியது எதுவானலும் நானும் முடிந்த அளவுக்கு செய்து பார்ப்பேன். கண்டிப்பாக ட்ரை செய்துவிட்டு சொல்கிறேன்.

பேப்பர் ரோஸ் சூப்பர்.இப்படி க்ளாத்திலும் செய்யலாமா?அதற்கு வேறு மெத்தட் இருக்கா?
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் ரேணு,
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு ரேணு உங்க ரோஸ்!. அதிலும் மஞ்சள் கலரில் நீங்க செய்து வைத்திருக்கும் அந்த ஒற்றை ரோஸ் படம் சூப்பர்!!! வாழ்த்துக்கள் ரேணு. என் மகளுக்கு இந்த மாதிரி கைவேலை செய்துப்பார்க்க ரொம்ப பிடிக்கும். இது நல்லா ஈஸியா, வீட்டில இருக்கும் பொருட்களை வைத்தே செய்ய ஏதுவா இருக்கு. கூடிய சீக்கிரமே செய்து பார்க்கிறோம். நன்றி!.
பி.கு. உங்க‌ளுக்கு ப‌தில் பதிவு போட்டேனே (ச.அ.ப.23-ல்), பார்த்திங்க‌ளா, தெரிய‌லை. கூடிய‌ விரைவில் ஈமெயிலும் அனுப்புகிறேன் ரேணு.

அன்புடன்
சுஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ரேணு,

உங்கள் குட்டி க்யூட்டாக இருக்கிறார். :) அவருக்கு ஒரு முத்தம். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹாய் ரேணுகா உங்கள் ரோஜாக்கள் மிகவும் அழகா இருக்கு,எளிதாகவும் இருக்கு நன்றி!
உங்கள் செல்லம் ரொம்ப கியூட்:-).

அன்புடன்,
ஜாஸ்மின்.

ரேணு அக்கா நீங்க செய்து காட்டியிருக்கும் ரோஸ் அருமை. அனைத்து பூக்களும் அழகு. ஒவ்வொரு படமும் தெளிவாக இருக்கிறது, அதை பார்க்கும் செயற்கை பேப்பர் பூ போன்றே தோணவில்லை.

ரோஜாக்களின் படத்திற்கு கீழே இன்னொரு அழகான வெள்ளை ரோஜா. குழந்தை அழகா இருக்காங்க. குழந்தையின் பெயர் என்ன அக்கா?

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

ரேணு நீங்கள் செய்த இரண்டு ரோஜாக்களுமே அழகு. கோகுல்தான் கூடுதல் அழகு. குழந்தைக்கு சுற்றிப்போடுங்கள்.
அழகா செய்திருக்கீங்க. விரைவில் செய்து பார்க்கிறேன்.
அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உங்கள் ரோஜாக்கள் எல்லாமே அருமை..அதுவும் எளிய பொருட்களை வைத்து சூப்பரா பண்ணிருக்கீங்க...பேசாம செய்து அசத்தலாம்னு ஒரு இழை தொடங்கிடுங்க.....குழந்தையும் கொள்ளை அழகுதான்
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இப்ப தான் கோகுல் படம் இணைக்கப்பட்டதா?சூப்பர்.நான் தான் நேரிலேயே பார்த்து இருக்கேனே!
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இமா நலமா? இப்பொழுது யாருடனும் பேசவே முடிவதில்லை,:(மிக்க நன்றி இமா, தொடர்ந்து குறிப்புகள் அனுப்ப முயற்சி செய்கிறேன் இமா

விஜி நலமா? கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்க, போட்டோ பிரேம் அப்பறம் இது தான் பேப்பரில் செய்வது என்றால் எனக்கும் ரெம்ப இஷ்டம்,எங்கும் போய் எதையும் வாங்கவேண்டாமே , செலவே இல்லாத வேலை முடிந்திடும்:)செய்து பார்த்து
முடிந்தால் போட்டோ போடுங்க விஜி,பிள்ளைகள் அனைவரும் நலமா?

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஆசியா அக்கா எப்படி இருக்கீங்க?க்ளாத்தில் நான் செய்ததில்லை,க்ளாத்தில் இதழ்களை சுருட்ட முடியாதே,துணியில் பூக்கள் செய்ய அறுசுவையில் வேற குறிப்பு இருக்குன்னு நினைக்கிறேன் ஆசியா அக்கா நான் இப்ப தான் அறுசுவை வந்தேன்,ரோஸ் அனுப்பின அன்றே கோகுல் போட்டோவும் அனுப்பிட்டேன்.

ஜாஸ்மின் ரெம்ப நன்றிப்பா,முடிந்தால் முயற்சி செய்து பாருங்க

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ஸ்ரீ எப்படி இருக்கீங்க?பொன்னும் பையனும் நலமா? உங்ககிட்ட பேசி நாளாச்சு,அம்மா அப்பா ஊருக்கு போயாச்சா?மகளுடன் சேர்ந்து நீங்களும் செய்ங்க ஸ்ரீ::)பதில் பார்த்தேன்.நேரம் கிடைக்கும் போது அனுப்புங்க ஸ்ரீ...

சுபா எப்படி இருக்கீங்க,ரேணு அக்கா என்று தலைப்பு வந்தாலே நீங்கள் என்று தெரிந்துவிடுகிறது பார்க்க நிஜ ரோஸ் போலவே இருக்கும்,எல்லா ரோஸையும் ஒன்னா வைத்து பார்த்தால் மனதுக்கும் சந்தோஷ்மாக இருக்கும், சுபா பையனின் பெயர் கோகுல்.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கவி சிவா எப்படி இருக்கீங்க?மிக்க நன்றிப்பா,செய்தால் போட்டோ அனுப்புங்க சரியா,

இளவரசி நலமா?இழை தொடங்கும் அளவுக்கு எனக்கு தெரியாது,ரெம்ப நன்றி இளவரசி.

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

ரேணுகா ரோஸ் ரொம்ப அழகா இருக்கு...படங்களும் தெளிவா இருக்கு..நானும் இதே போல கிராப்ட் சீட்டில் செய்தேன்...நீங்க எந்த பேப்பரில் செய்தீர்கள்?

கோகுல் ரொம்ப அழகு :-)

ரேணுகா நீங்கள் செய்துள்ள காகித ரோஜாக்கள் மிக அழகு. உங்கள் குட்டி மகனும் அழகாக இருக்கிறார்.
அன்புடன்,
செபா.

ஹாஷினி நீங்க சமைத்து அசத்தலாமில் கலந்து கொண்ட ஹாசினியா?செய்தேன் என்று சொன்னீங்க எப்படி வந்தது என்று சொல்லவில்லையே???

நான் ஏ4 சைஸ் கலர் பேப்பர் வைத்துள்ளேன் அதில் தான் செய்தேன்,

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

செபா அம்மா நலமா?உங்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி,ரெம்ப நன்றி அம்மா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

nice

எப்படி இருக்கீங்க ரேணு?நான் இப்போதுதான் காகித ரோஜாவை செய்து பார்த்தேன்.REALLY IT IS VERY BEAUTIFUL. எலோருக்கும் புரிகிற மாதிரி இருந்தது.THANK YOU SO MUCH RENU

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta

we did it was very nice