ஆனியன் ரைஸ்

தேதி: December 4, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.1 (8 votes)

 

அரிசி - ஒரு ஆழாக்கு (சாதமாக வடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - 2 கொத்து
தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கரம்மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி


 

சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும். அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.
நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.
இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எளிதில் செய்து விடக்கூடிய சுவையான வெங்காயம் சாதம் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. சாமூண்டிஸ்வரி </b> அவர்கள்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பிள்ளைகளுக்கு ஸ்கூலிற்கு வெரைட்டியாக சாதம் செய்து கொடுத்து விட எப்பவும் ட்ரை பண்ணுவேன்,இனி இந்த ஆனியன் ரைஸையும் சேர்த்துக்க வேண்டியது தான்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ungal samayal superrrr!!!!!

I have prepared this onion rice for friday lunch. My husband told it was nice. Thanks for giving this receipe.

Leela Nandakumar

your onion rice super!!!!!!!!!!!!!

kalaimathi