சிடி கடிகாரம்

தேதி: December 5, 2009

4
Average: 3.7 (6 votes)

 

சிடி - 1
ஃபேப்பரிக் பெயிண்ட் - மஞ்சள், சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறம்
சிறிய மற்றும் பெரிய ப்ரஷ்
கடிகாரத்தின் மிஷின் மற்றும் முள்
ஃபேட்டரி
பெவிக்கால்

 

சிறிய அலராம் கடிகாரத்தின் மிஷின் மற்றும் சின்ன முள், நிமிட முள், நொடி முள் ஆகியவற்றை தனித்தனியாக கழற்றி எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானப் பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சிடியின் பின்புறத்தை திருப்பி வைத்து வழவழப்பான பகுதி முழுவதும் மஞ்சள் நிற ஃபேப்பரிக் பெயிண்டை அடித்து காய விடவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் சிடியின் நான்கு பக்கங்களிலும் பச்சை நிற பெயிண்டால் படத்தில் உள்ளது போல் காம்பு பகுதியை வரையவும். வரைந்த காம்பின் கீழ் ஆப்பிள் பழம் போன்று வரைந்து சிவப்பு நிற பெயிண்டை அடிக்கவும்.
பிறகு காம்பின் ஒரு பக்கத்தில் மட்டும் இலைகளை வரைந்துக் கொள்ளவும். இதைப் போல் மற்ற மூன்று காம்பின் கீழும் ஆப்பிள் படங்களை வரைந்து பெயிண்ட் செய்து காயவிடவும்.
இப்பொழுது இரண்டு ஆப்பிள் படங்களுக்கும் உள்ள இடைவெளியில் ஒரு செ.மீ அளவில் தடிமனான கோடுகள் இரண்டு வரைந்துக் கொள்ளவும்.
சுற்றிலும் இதைப்போல் வரைந்துக் கொள்ளவும். பிறகு வரைந்து கோடுகள் ஒவ்வொன்றிக்கும் இடையில் அதே சிவப்பு நிற பெயிண்டால் அரை செ.மீ அளவில் சற்று மெல்லிய கோடுகள் நான்கு வரையவும். நெருக்கமாக வரையாமல் சற்று இடைவெளிவிட்டு வரைந்துக் கொள்ளவும்.
பெயிண்ட் செய்திருக்கும் ஆப்பிள் படங்கள் காய்ந்தவுடன், ஆப்பிள் பழத்தின் அடியில் கடிகார இலக்கங்கள் 3, 6, 9, 12 என்ற எண்களை வெள்ளைநிற பெயிண்டால் எழுதி காயவிடவும்.
சிடியில் பொருத்தவிருக்கும் கடிகார மிஷினின் முன்பக்கம் முழுவதும் பெவிக்கால் தடவி வைக்கவும். இப்போது பெயிண்ட் செய்த சிடியை பெவிக்கால் தடவிய மிஷினின் நடுவில் இருக்குமாறு பொருத்திக் கொள்ளவும்.
சிடி கடிகார மிஷினுடன் நன்றாக ஒட்டிக் கொண்டதும் அதில் கடிகார முள்களை ஒவ்வொன்றாக மாட்டி விடவும். கடிகார மிஷின் பின்பக்கத்தில் ஃபேட்டரியை பொருத்தி கடிகாரத்தை ஓடவிடவும்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய அழகிய சிடி கடிகாரம் தயார். கடிகார மிஷின் பின்பக்கத்தில் ஸ்பாஞ்ச் ஸ்டிக்கரை ஒட்டி விட்டு சுவற்றில் மாட்டி வைக்கலாம்.
இந்த சிடி கடிகாரம் செய்முறையை அறுசுவை நேயர்களுக்காக திருமதி. செண்பகா பாபு அவர்கள் வழங்கியுள்ளார். சமையல், கைவினைப் பொருட்கள், கார்விங் செய்தலில் ஆர்வம் அதிகமுள்ளவர். தான் கற்று அறிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நோக்கில், அறுசுவையில் அவ்வபோது இதுபோன்ற செய்முறைகளை வழங்கவுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சிடி கடிகாரம் மணிக்கூண்டு மாதிரி அவ்வளவு தெளிவாக அழகாக இருக்கு.கீழ் இருப்பது மொபைல் ஸ்டாண்டா?என்னிடம் இது போல் ஒன்று உள்ளது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பாப்பி,

கலக்கல். :) பார்க்க ஆசையாக இருக்கு.

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

very cute idea super
yendrum nalamudan

yendrum nalamudan

Sema cute. But kadikara mul enga kidaikum ?

As Always

விதம் விதமான டிசைன்களில் கிடைக்கும். இலக்கங்களோடு கூட வரும். 'க்ளாக் மெக்கானிசம்' என்று பாருங்க. அனேகம் எல்லா க்ராஃப்ட் ஷாப்ஸ்லயும் கிடைக்கும். எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைல பாருங்க. அப்புறம்... மைக்கேல்ஸ், ஹாபிலாபி, ஜோ-ஆன் & வால்மார்ட்லயும் பாருங்க. (ஒரு ஃப்ரெண்ட் கடைகள் பெயர் சொல்லி உதவினாங்க.)

கிடைக்காட்டி பாப்பி சொல்லி இருக்கிற மாதிரி ஒரு க்ளாக் வாங்கி பத்திரமா பிரிச்சு எடுங்க, சுலபம்தான்.

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta