கேப்பை புட்டு

image

வழங்கியவர் : radha rani

தேதி : ஞாயிறு, 06/12/2009 - 19:33

ஆயத்த நேரம் : 5 நிமிடம்

சமைக்கும் நேரம் : 15 நிமிடம்

பரிமாறும் அளவு : 4 நபருக்கு

4.333335
3 votes
Your rating: None
 

 

  • தண்ணீர் - அரை கப்
  • கேப்பை மாவு - 2கப்
  • நாட்டுச்சர்க்கரை - 2கப்
  • தேங்காய் துருவல்- அரை கப்
  • நிலக்கடலைப்பருப்பு-அரை கப்
  • உப்பு -தேவையான அளவு

 

  • ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அரைகப் தண்ணீரில்கரைத்த உப்பை அதில்தெளித்து கட்டி இல்லாமல் பிசறி கொள்ளவேண்டும்.
  • பின்பு அந்த மாவை இட்லி தட்டில் எடுத்துவைத்து நீராவியில் வேகவைக்கவேண்டும்.
  • 10 நிமிடம் வேக வைத்து வெந்த உடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து ஆற விடவேண்டும்.
  • நிலக்கடலைப் பருப்பை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து கேப்பை மாவுடன் கலந்து விடவேண்டும்.
  • அதனுடன் தேங்காய் துருவலையும்வெல்லத்தையும்கலந்துமொத்தமாகபுரட்டி நன்கு கலந்தவுடன் பரிமாறவும்.