நத்தார் வாழ்த்துமடல்

தேதி: December 9, 2009

4
Average: 3.8 (5 votes)

 

அட்டை
பாச்மன்ட் காகிதம்
ரப்பர் முத்திரை (Merry Christmas)
ஸ்டாம்ப் பேட் (stamp pad - gold colour)
பன்ச் (holly இலை)
கண்ணாடி மணிகள்
இடுக்கி
க்ளூ

 

வாழ்த்துமடல் செய்ய தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இலை துளையிடும் கருவியைக் கொண்டு பாச்மண்ட் காகிதத்தில் தேவையான அளவு இலைகள் நறுக்கிக் கொள்ளவும்.
ரப்பர் முத்திரையை கோல்டன் ஸ்டாம்ப் பேட் மையில் வைத்து எடுத்து அதை அட்டையின் முன்பக்கத்தில் வைத்து அழுத்தவும்.
முத்திரை மை காய்ந்ததும் நறுக்கி வைத்திருக்கும் இலைகளை அட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல் க்ளுவை வைத்து ஒட்டவும்.
மணிகள் கொண்டு அலங்கரிக்க வேண்டிய இடங்களில் ஒரு டூத் பிக் அல்லது பென்சில் முனையை பயன்படுத்தி க்ளுவை சிறிய புள்ளிகள் போல வைக்கவும்.
மணிகளை இடுக்கியால் எடுத்து புள்ளிகளின் மேல் வைத்து விரலால் மெதுவாக அழுத்தி விடவும்.
விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்த்துக்களை மற்றொரு காகிதத்தில் பிரிண்ட் செய்து இந்த அட்டையின் உள்ளே ஒட்டி விடவும்.
பனி படர்ந்த ஹோலி இலைகளுடனான அழகிய நத்தார் வாழ்த்துமடல் தயார். இந்த வாழ்த்துமடலை செய்து காட்டியவர், அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்து வருகிறார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அழகாய் இருக்கு ஆன்ட்டி! கலர்புல் & ப்யூட்டிபுல்!! :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

சுடச் சுட ஒரு பின்னூட்டம், அதுவும் என் அன்பு மருமகனிடம் இருந்து. :) சந்தோஷமா இருக்கு.
கலர்புல், ப்யூடிபுல் சொன்னதுக்கு தாங்க்புல், தாங்ஸ் ஜீனோ. :)

அன்புடன் ஆன்ட்டி

‍- இமா க்றிஸ்

எப்படி இருக்கிங்க? ரொம்ப நாளாச்சு உங்ககூட எல்லாம் பேசி. இன்னைக்கு இங்கு ஸ்னோ ஸ்டாம் ஸ்கூல் இல்லை அதனால் கொஞ்சம் டைம் இருக்கு. அருசுவையும் சீக்கிரமே ஒப்பன் ஆகிவிட்டது. என் கண்னில் பட்டது இந்த க்ராப்ட்ஸ். ரொம்ப நன்றாக இருக்கு ஸிம்பிளா எல்லாரும் செய்ய கூடியதாகவும் இருக்கு. நானும் என் பொன்னுக்கு சொல்லிகுடுக்கிறேன். எனக்கு ஒரு சந்தேகம் பார்சமேண்ட் பேப்பர் என்பது நாம் பேக்கிங்குக்கு உபயோகபடுத்தகூடியதா, டைம் கிடைக்கும் போது சொல்லுங்க. மேலும் உங்க க்ராப்ட்ஸ் எல்லாமே ரொம்ப எளிமையாகவும் எல்லோராலும் செய்யகூடியதாகவும் இருக்கு. நானும் செய்வேன் ஆனால் எனக்கு இனிமேல் இந்த ஸ்டெப்ஸ் பை ஸ்டெப்ஸ் போட்டு எடுத்து அனுப்புகிறேன். எனக்கு ரொம்ப க்ராப்ட்ஸில் ஆர்வம் அவசியம் செய்துவிட்டு சொல்கிறேன். மேலும் நிறய்ய க்ராப்ட்ஸ் சொல்லி குடுங்க. நன்றி. நிறய்ய எழுதிட்டேன்.

Ema akka the christmas card is very nice

HI MEMBERS I'M NEW 2 THIS SITE HOPE 2 MAKE FRIENDS

இமா, மிகவும் அழகான மடல். இதுவும் அஞ்சலிக்கு தானே!!!!
(ஜீனோ மருமகனா???? இதெல்லாம் ரொம்ப ஓவர்!!!!)
வாணி

அஹ்..ஹஹ்..ஹா!! வானதியக்கா, அப்போ உங்களுக்கு ஆன்ட்டி என்னவாக்கும் ஆகணும்?? :) :D :)

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

தாங்க்ஸ் விஜி. நான் நலம். நாடுவதும் அதுவே.
'ஸ்னோ ஸ்டார்ம்' வர்ர ஊர்ல இருக்கிறவங்க ப்ரோஃபைல்ல ஊர்ப்பேர் போட மாட்டாங்களோ!! :)))
இது அந்த பார்ச்மன்ட் பேப்பர் இல்லை. velum paper என்று கிராஃப்ட் செக்க்ஷன்ல பாருங்க, வேற வேற மாதிரி கிடைக்கும். இங்கு பயன் படுத்தி இருப்பது ப்ளெய்ன் பார்ச்மன்ட் கடதாசி. சில திருமண அழைப்பிதழ்களில் பயன்படுத்தி இருப்பார்கள். எம்போஸ் பண்ணக் கூடியது இது. வித்தியாசமான தடிப்புகளில் கிடைக்கும். 'பார்ச்மன்ட் கிராஃப்ட்' ஒரு தனிக் கலை.

க்ராஃப்ட் தானே, எதைப் பயன்படுத்தினால் என்ன, விளைவுதான் முக்கியம். பேக்கிங் ஷீட்லையே செய்யுங்க. ஆனால் க்ளூ ஸ்டிக்தான் அதற்குப் பொருந்தும். நீர்த்தன்மையான க்ளூ சரிவராது.உங்கள் கிராஃப்ட் செய்முறையை அறுசுவையில் விரைவில் எதிர்பார்க்கிறேன்.

புது வரவு rassai,
நலம்தானே? நல்வரவு. :) எப்படி உங்களை அழைப்பது என்று தெரியவில்லை. :) பாராட்டுக்கு மிக்க நன்றி. மலேஷியா எப்பிடி இருக்கு? :) முகப்பில் எழுத்துதவி இருக்கிறது. இயலுமானால் தமிழில் தட்டச்சு செய்து பாருங்கள்.

அன்பு வாணி,
நன்றி. அதற்கென்ன, எடுத்துக் கொடுங்க. (எங்க 'A' தெரியுது!!?)
ஓவர், அண்டர் எல்லாம் கிடையாது. பப்பி வானதிக்குச் சித்தப்பா, அஞ்சலிக்குட்டிக்குப் பாட்டா, எனக்கு மருமகன். இதுதான் அறுசுவை உறவு. :)))) சரிதானே ஜீனோ! :))

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

இமா - வாழ்த்து அட்டை மட்டும் அழகா பண்ணிட்டா போதுமா? பொறுப்பா மேல "டியர் சந்தனா - இனிய கிறிஸ்த்மஸ் நல் வாழ்த்துக்கள்" ன்னு போட்டு கீழ "அன்புடன் பாட்டி இமா" ன்னு உங்க கையெழுத்தை போட்டு, கூட ஒரு கிப்ட் ஓட எனக்கு பார்சல் பண்ண வேணாமா? இதக் கூடவா சொல்லணும் உங்களுக்கு? :)

என்னென்னமோ இன்ஸ்ட்ரூமன்ட்ஸ் எல்லாம் வச்சு ரொம்ப ப்ரோபஷனல்லா பண்ணறீங்க இமா! ஆ - மறந்துட்டேன் - நீங்க அதுல ப்ரொபஷனல் தான :) )

ஜீனோ - நலமா? எங்க ஆசிரியருக்கு குட் வர்க் சொல்ல வந்தேன் - படிக்காம என்ன பண்ணிட்டு இருக்கநெல்லாம் கேட்கப் படாது :)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் சந்தனா,
நலம்தானே?
ஒரே ஒரு ஃபார்செப்ஸ்.. இன்ஸ்ட்ரூமன்ட்ஸா!? தனி மரம் தோப்பாகுமா?
"டியர் சந்தனம் - இனிய கிறிஸ்த்மஸ் நல் வாழ்த்துக்கள்" என்று போட்டு உங்க க்றிஸ்மஸ் மரத்தின் கீழே கிஃப்ட் வச்சாச்சு. ஆனால் சரியான நேரத்தில்தான் திறக்க வேணும். :)
சரீ... இவ்வளவு தூரம் வந்து விட்டீர்கள்.. :) உங்களால் எனக்கு ஒரு உதவி ஆக வேணுமே! உங்கள் இடத்தில் 'ஸ்னோ ஸ்டாம்' அடித்ததா என்று கொஞ்சம் சொல்லிவிட்டுப் போங்களேன் ப்ளீஈ..ஸ். :))))) பப்பி வந்து, 'என்ன அரட்டை?' என்று கேட்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

சொன்னாப் போச்சு - ஆமாம் இமா எங்க ஊர்லயும் ஸ்னோ பெய்ஞ்சது. ஆனா அதை ஸ்டார்ம் ன்னு சொல்ல மனசு வரலை. பூமழையா பொழிந்தது. சந்தனாவோட ஊர் ல்ல - அதான்.

இமா - அல்வா கொடுப்பது கேள்விப் பட்டு இருக்கேன். நீங்க சந்தனமில்ல கொடுக்கறீங்க!! நன்றி இமா.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் இமா அக்கா,

ரொம்ப அழகா இருக்கு நீங்க செய்து காட்டியிருக்கிற வாழ்த்து அட்டை. கலர் செலக்சன் அருமை. எளிமையாகவும் இருக்கு.

மிக்க நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!

மிக்க நன்றி சுபா. நீங்கள் நலம்தானே? மானஸா எப்படி இருக்கிறாங்க?
அப்ப.. செய்து பார்க்கப் போறீங்க! படம் வரும் என்று நம்பலாம், அப்படித்தானே? :)

அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

உங்கள் நத்தார் வாழ்த்து மடல் ரொம்ப அருமையாக இருக்கு.தங்களுக்கும் அனைத்து தோழிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு ஆசியா, நலம்தானே? :)
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta