தேன் கேக்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 250 கிராம்
சர்க்கரை - 90 கிராம்
தேன் - 120 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
ஆரஞ்சு எசன்ஸ் - சில துளிகள்


 

வெண்ணெயையும் பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நன்கு குழைக்கவும்.
முட்டைகளை நன்றாக அடித்துக்கொண்டு சிறிது சிறிதாக வெண்ணெயும் சர்க்கரையும் சேர்ந்த கலவையில் சேர்க்கவும்.
தேனையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
மைதா மாவை பேக்கிங் பவுடருடன் சேர்த்து இருமுறை சலித்துக் கொள்ளவும்.
குழைத்த கலவையில் மாவை சேர்த்து விரல் நுனிகளால் இலேசாகக் கலக்கவும்.
பத்து அங்குல நீளம் இரண்டரை அங்குல அகலமுள்ள தட்டில் நெய் தடவி, மாவு தூவிக் கொள்ளவும்.
கலவையை அதில் பரப்பவும். 350 டிகிரி F சூட்டில் சுமார் 45 நிமிடங்கள் பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்