மர பூந்தொட்டி

தேதி: December 14, 2009

Average: 5 (1 vote)

 

டெக்கிங் பலகை (decking) - குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அளவு துண்டுகள் கிடைக்குமாறு
பீடிங் பலகை (beading) - 35 செ.மீ துண்டுகள் - 2, 55 செ.மீ துண்டுகள் - 2 கிடைக்குமாறு
ஆணிகள் - 5 செ.மீ, 2.5 செ.மீ
வாள்கள்
சுத்தியல்
மூலைமட்டம்
இறுக்கிகள்
ட்ரில்லிங்க் மெஷின் & பிட்ஸ்
பென்சில் / மார்க்கர்
பெயிண்ட் செய்து கொள்ள விரும்பினால் டெக்கிங் பெயிண்ட் & பிரஷ்
ஏதாவது 25 செ.மீ நீளப்பலகைத் துண்டுகள் - 4, 45 செ.மீ நீளப்பலகைத் துண்டுகள் - 2 (இவை பின்னால் அகற்றப்பட்டு விடும் எனவே நல்லதாக இருக்க வேண்டியது இல்லை.)

 

இந்த பூந்தொட்டி செய்வதற்கு புதியதாக பலகை வாங்க வேண்டும் என்றில்லை. தேவையில்லையென்று கழற்றி வைத்துள்ள டெக்கிங் பலகைத் துண்டுகளைக் கூட மீள் சுழற்சி செய்து கொள்ளலாம். தொட்டிகள் வெளியே வைக்கப்படுப்பவை என்பதால் வெட்டப்படும் ஓரங்களைச் சீராக்க வேண்டி இராது.
எப்பொழுதும் பலகையைக் குறுக்காக அறுப்பதற்கு முன் தேவைப்படும் இடத்தில் அடையாளமிட்டு மூலைமட்டத்தின் உதவியோடு பென்சில் அல்லது மார்க்கரை கொண்டு கோடு வரைந்து கொள்ளவும்.
வரைந்த கோடுகளை வாள்கள்(அரம்) கொண்டு வெட்டும்போது நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
டெக்கிங் பலகையில் பின்வரும் அளவுகளில் துண்டுகள் வெட்டி எடுத்துக் கொள்ளவும். 26 செ.மீ x 10 செ.மீ அளவான 4 துண்டுகள் 23 செ.மீ x 10 செ.மீ அளவான 12 துண்டுகள் 50 செ.மீ x 10 செ.மீ அளவான 2 துண்டுகள் 50 செ.மீ x 6 செ.மீ அளவான ஒரு துண்டு
முதலில் 26 செ.மீ x 10 செ.மீ அளவான பலகையில் 2 துண்டுகளையும், 23 செ.மீ x 10 செ.மீ அளவான பலகையில் ஒரு துண்டையும் எடுத்துக் கொள்ளவும். இதில் நீளம் குறைவான பலகைத் துண்டை மட்டும் எடுத்து நடுவில் இருக்குமாறு வைத்து மூன்று துண்டுகளையும் ஒன்றாக இணைத்துக் கொள்ளவும். அதன் மேல் முனையில் 25 செ.மீ நீளப்பலகை துண்டை வைத்து ஒவ்வொரு பலகைக்கும் ஒவ்வொரு ஆணி வைத்து சுத்தியால் அடித்துக் கொள்ளவும். (இதில் இணைக்கப் பயன்படுத்தப்படும் நீளப்பலகை பின்பு நீக்கப்பட்டு விடும்). படத்தில் உள்ளது போல் மூன்று பலகைகளையும் ஒரே நேராக வருமாறு வைத்தால் மறுபக்கம் கால்கள் போன்ற அமைப்பு வந்திருக்கும். இதே முறைப்படி பூந்தொட்டியின் மற்றொரு கால் பகுதியை செய்துக் கொள்ளவும்.
இப்போது 23 செ.மீ x 10 செ.மீ அளவிலான 5 பலகை துண்டுகளை ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்ளவும். அதன் மேல் பகுதியில் 45 செ.மீ அளவிலான நீளப்பலகை துண்டை வைத்து ஒவ்வொரு பலகை துண்டுக்கும் ஒவ்வொரு ஆணியை வைத்து அடித்துக் கொள்ளவும். (இதற்கு பயன்படுத்தி உள்ள குறுக்குத் துண்டும் பின்பு நீக்கப்பட்டு விடும்.) இதே அளவிலுள்ள மற்ற ஐந்து பலகைத் துண்டுகளை இதுப்போல் இணைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து 50 செ.மீ அளவிலான மூன்று நீளத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு, அதில் மெல்லிய பலகைத் துண்டினை நடுவில் வைக்கவும். மீதமுள்ள 25 செ.மீ அளவிலான நீளப்பலகை துண்டை எடுத்துக் கொண்டு அதனை நடுவில் வைத்து அடித்து பலகையை இணைத்துக் கொள்ளவும். இப்போது பூந்தொட்டியின் அடிப்பாகம் தயார்.
இப்போது படத்தில் உள்ளது போல் பூந்தொட்டியை இணைப்பதற்கு, நீளப்பலகை துண்டை கொண்டு அடித்து வைத்த ஐந்து துண்டுகள் தயாராகி இருக்கும்.
தொட்டியின் கால்களாக வரவிருக்கும் இரண்டு பலகையிலும் படத்தில் காட்டியுள்ள இடத்தில் அடையாளங்கள் செய்து கொண்டு, ட்ரில்லரினால் துளைகள் செய்து கொள்ளவும். (பொருத்தப்பட இருக்கும் பலகையின் பருமனைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ப துளைகள் வரும் இடத்தைத் தீர்மானிக்க வேண்டும்.)
பிறகு நீளவாக்கில் இணைத்து வைத்திருக்கும் இரண்டு பலகை துண்டுகளின், ஏதாவது ஒரு நீளப்பக்கத்தின் அடிப்பகுதியில் மட்டும் ஒவ்வொரு பலகைக்கும் இரு துளைகள் வீதம் துளையிட்டுக் கொள்ளவும். (இங்கும் பொருத்தும் பலகையின் பருமன் அளவினை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.) இதன் தொடர்ச்சி பாகம் 2 ல் உள்ளது.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

அய்...ஜீனோவின் பாத் டாப்...on the way!! தேங்க்ஸ் அங்கிள் அண்ட் ஆன்ட்டி!

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

~~~~ )))) ஜீனோ (((( ~~~~

குளிச்சா சாயம் போயிருமே! பரவாயில்லையா பப்பி? :)
ஆன்ட்டி

‍- இமா க்றிஸ்

இது சூப்பர் இது யாருடையது... யார் போடாது... பெயரை கானும்...

இது கிருஸ் அங்கில் செய்தாதா... இமா அம்மா பதில் சொல்லுங்க?

ரொம்ப நல்லா இருக்கு... ஆனா முழுசா முடியலை போல...

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"
"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

பிரபா,
இது முதலாம் பாகம் மட்டுமே. முழுசா முடியலைதான். அதுக்குள்ள நல்லா இருக்கு என்று சொன்னால் எப்படி!! :)
ரெண்டாவது பாகம் இங்க இருக்கு ;) http://www.arusuvai.com/tamil/node/14167
இமா

‍- இமா க்றிஸ்

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta