கீரை பொறித்த கூட்டு

வழங்கியவர் : srividhyaiyer
தேதி : செவ்வாய், 15/12/2009 - 02:53
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- கீரை ஒரு கட்டு
- (அது எந்த கீரையாகவும் இருக்கலாம்)
- பயத்தம் பருப்பு அரை கப்
- உப்பு தேவையான அளவு
- வறுத்து அரைக்க:
- உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
- மிளகு அரை டீ ஸ்பூன்
- சீரகம் ஒரு டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 2
- பெருங்காயம் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
- முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- பருப்பை குக்கரில் வைத்து நன்கு வேக வைத்து கீரையுடன் சேர்க்கவும்.
- அடுத்து, வருக்கக் கொடுத்துள்ள பொருட்களை (மிளகாயைத் தவிர) எல்லாம் வெறும் வாணலியில் பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வாணலியின் சூட்டிலேயே மிளகாயை போட்டு வறுத்து பின் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு பருப்புடன் கூடிய கீரையில் இந்தப் பொடியைத் தூவி நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிடவும். விரும்பினால் தேங்காய் துருவலும் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கலாம்.
Note:
குறிப்பு: மேற்கண்ட பொடியை மொத்தமாக செய்து பத்திரப் படுத்திக் கொண்டு அவ்வப்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் எந்த காய்கறி யையும் வைத்து போரித்த் கூட்டு செய்யலாம்>
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு
2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு
3 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு
4 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு
5 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு
7 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு
8 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு