சீஸ் பிஸ்கட்டுகள்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெண்ணெய் - 90 கிராம்
துருவிய சீஸ் - 60 கிராம்
மைதாமாவு - 120 கிராம்
மிளகாய்ப் பொடி - அரைத் தேக்கரண்டி
உப்பு - அரைத் தேக்கரண்டி


 

வெண்ணெயையும், சீஸையும் நன்றாகக் குழைக்கவும்.
சலித்த மாவு, உப்பு, மிளகாய் பொடியையும் குழைத்த கலவையுடன் சேர்த்து மூன்றையும் கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும்.
கால் அங்குல பருமனுக்கு பெரிய அப்பளமாக இடவும்.
பிறகு பிஸ்கட் வெட்டும் அச்சினால் வெட்டவும்.
நடுவில் முள் கரண்டியினால் மெதுவாகக் குத்தவும்.
நெய் தடவி மாவு தூவிய தட்டில் வைத்து 15 இருந்து 20 நிமிடம் வரை 380 டிகிரி F சூட்டில் பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்