வெண் பொங்கல்

image

வழங்கியவர் : srividhyaiyer

தேதி : செவ்வாய், 15/12/2009 - 19:58

ஆயத்த நேரம் :

சமைக்கும் நேரம் :

பரிமாறும் அளவு :

1.6
5 votes
Your rating: None
 

 

  • ஒரு கப் பச்சரிசி
  • அரை கப் பயத்தம் பருப்பு (பாசி பருப்பு)
  • கால் டீ ஸ்பூன் மிளகு
  • அரை டீ ஸ்பூன் சீரகம்
  • இஞ்சி 3 " துண்டு
  • பச்சை மிளகாய் இரண்டு
  • கறிவேப்பிலை 5 இலைகள்
  • பெருங்காயம் சிறிதளவு
  • முந்திரி 10 பருப்புகள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் 3 ஸ்பூன்
  • நெய் 4 ஸ்பூன்
  • பால் ஒரு டம்பளர்

 

  • முதலில் அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு வேக விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பொடிப் படியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தைப் போட்டு கரண்டியால் நன்கு கலக்கவும்.
  • பிறகு பாலை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்த உடன் வேக வைத்த அரிசி பருப்பை அதில் கொட்டி உப்பு போட்டு அடி பிடிக்காமல் நன்கு கிளறவும். பொங்கல் சரியான பதத்திற்கு வந்த உடன் 4 ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.






ஸ்ரீ வித்யா... பால் சேர்த்தது வித்தியாசம். சுவை சூப்பர். மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பால் சேர்த்து நானும் இதர்க்கு முன் செய்தது இல்லை..சேர்த்து செய்தேன் நன்றாக இருந்தது..நன்றி ஸ்ரீவித்யா..

வாழு, வாழவிடு..

இன்று பொங்கல் செய்தேன்,நானும் பால் சேர்த்தில்லை இது தான் முத்ல் தடவை,நன்றாக இருந்தது.