வழங்கியவர் : kavisiva
தேதி : புதன், 16/12/2009 - 15:35
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- குட்டி கத்திரிக்காய் - 6
- சின்ன வெங்காயம் - 10
- புளி - சுண்டைக்காய் அளவு
- அரைக்க:
- வேர்க்கடலை(நிலக்கடலை) - 1 1/2 மேசைக்கரண்டி
- தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி(காரத்திற்கேற்ப)
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- சீரகம் - அரை தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தாளிக்க:
- நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி( குறைவாகவும் எடுத்துக் கொள்ளலாம்)
- கடுகு - அரை தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
![]() |
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையானவற்றை அனைத்தையும் எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும். |
![]() |
கத்திரிக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு, படத்தில் உள்ளது போல் நான்காக கீறி உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும். |
![]() |
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் அரை மேசைக்கரண்டி வேர்க்கடலை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். |
![]() |
அரைத்து வைத்திருக்கும் மசாலாவை படத்தில் உள்ளது போல் கத்திரிக்காயினுள் நிரப்பவும். மீதமுள்ள மசாலாவை தனியே வைக்கவும். |
![]() |
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும். |
![]() |
அதனுடன் ஸ்டஃப் செய்த கத்திரிக்காய் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி தீயைக்குறைத்து மூடி போட்டு 3 நிமிடம் வேக விடவும். இடையிடையே அடிப்பிடிக்காமல் கிளறி விடவும். |
![]() |
மீதமுள்ள மசாலாவை சேர்த்து, கால் கப் தண்ணீரில் புளியைக்கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும். கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக விடவும். |
![]() |
தண்ணீர் வற்றி காய் குழைய வேகும் வரை(ஆனால் கத்திரிக்காய் உடைந்து விடக்கூடாது) குறைந்த தீயில் கிளறி இறக்கவும். |
![]() |
சுவையான எண்ணெய் கத்திரிக்காய் தயார். இந்த குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. கவிசிவா அவர்கள். நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்தினை பகிர்ந்துக் கொள்ளவும். |
உப்பை மசாலா அரைக்கும் போதே சேர்த்து விட வேண்டும். நல்லெண்ணெய்க்கு பதிலாக சாதாரண சமையல் எண்ணெயிலும் செய்யலாம். இங்கு செய்திருப்பது போல் சற்று கெட்டியாக செய்தால் பருப்பு சாதம், ரசம் சாதத்தோடு சாப்பிட சுவையாக இருக்கும். மசாலா அரைக்கும் போது சற்று அதிகமாக அரைத்து சேர்த்து கிரேவியாக இறக்கினால் சப்பாத்தியோடு மிக அருமையாக இருக்கும். கர்நாடகாவில் கிடைக்கும் ஜோவார் மாவில் சப்பாத்தி போல் செய்து அதற்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்









அட்மின் அண்ணா குறிப்பை விரைவில் வெளியிட்டதற்கு மிகவும் நன்றி. அறுசுவை குழுவினருக்கும் என் நன்றிகள்
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி எப்படி இருக்கீங்க?நான் அடுத்த குறிப்பாக இந்த ரெஸிப்பியை அனுப்ப இருந்தேன்.பரவாயில்லை தாங்கள் முந்தி விட்டீர்கள்.
இது ரொம்ப டேஸ்ட்டாக இருக்கும்.பத்து வருடங்கள் முன்பு ஒருவர் சொல்ல கேட்டு இதை செய்து பார்த்தேன்.எங்கள் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது.
ஆனால் இது கர்நாடகா ஸ்பெஷல் என்று தெரியாது.சுவை நன்றாகவே இருக்கும்.மதியம் சாதத்திற்க்கு சாப்பிட்டு விட்டு,இரவு சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடுவோம்.நல்ல காம்பினேஷனாக இருக்கும்.இது நல்ல சுவையான குறிப்புதான்.
வாழ்த்துக்கள் கவி...
அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
எண்ணெய் கத்திரிக்காய் குறிப்பு அருமை.தொடர்ந்து குறிப்பு கொடுத்து வருவது மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.
வீட்டில் கத்தரிக்காய் கொஞ்சம் அதிகமாயிருக்கு,என்னவெல்லாம் செய்யலாம் கொஞ்சம் புதுமையா இருக்க மாதிரின்னு யோசிச்சுட்டு இருந்தேன்...எனக்கே எனக்கு குறிப்பு கொடுத்த மாதிரியிருக்கு...விரைவில் செய்து விட்டு பின்னூட்டம் கொடுக்கிறேன்.
கவிசிவா, ஒரு சந்தேகம் அதற்கு முன் சொல்லுங்களேன்... வேர்க்கடலையை வறுக்காமல் பச்சையாகவே சேர்த்து அரைக்கலாமா? பதில் சொன்னீங்கன்னா விரைவில் செய்து பார்க்க எனக்கு உதவியாய் இருக்கும்.
மீண்டும் சந்திப்போம்,
நன்றி.
ஹாய் அப்சரா நீங்களும் இதே போல் செய்வீங்களா? இங்கு கர்நாடகாவை சேர்ந்த தோழியிடம் கற்றுக்கொண்டேன். இதை இன்னும் பலவிதமாக செய்வார்களாம். எனக்கு இதுதான் ரொம்பவும் பிடித்தது.
ஆசியா தங்கள் உற்சாகமளிக்கும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.
உமா கத்திரிக்காய் நிறைய இருக்குதா? இதை செய்து சாப்பிடுங்க. கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும். வேர்க்கடலை வறுக்காமல் பச்சையாகவே சேர்க்கணும். வேர்க்கடலையை தோலுரித்து சேர்க்க வேண்டும். எனக்கு இங்கே தோலுரித்தே கிடைப்பதால் சுலபம்.
குட்டி குட்டி கத்திரிகாய்களில் ஸ்டஃப்ட் பஜ்ஜியும் செய்யலாம். அதன் லின்க்
http://www.arusuvai.com/tamil/node/9586
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ya its very nice asia uma
ya its very nice asia omar
ya its very nice asia omar
எண்ணை கத்திரிக்காய் ரொம்ப நல்ல இருக்கு, கவிசிவா, ஸடஃப் செய்து செய்வதால் ருசி அதிகமாக இருக்க்கும். இல்லையா?
Jaleela
நன்றி கவிமலர்! ஆ... இன்னொரு கவியா :-)
தேன்க்ஸ் ஜலீலக்கா. ஆமாக்கா ஸ்டஃப் செய்வதால் கத்திரிக்காயின் உள்ளேயும் மசாலா பிடித்து சுவையாக இருக்கும்.
அன்புடன்
கவிசிவா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி எண்ணைய் கத்திரிக்காய் ரொம்ப நன்றாக இருந்து மை பாஸ்க்கு ரொம்பபுடிச்சது நன்றி கவி
அன்பு கவிசிவா,
இன்னிக்கு இந்தக் குறிப்பைப் பார்த்து, எண்ணெய் கத்தரிக்காய் செய்தேன். ரொம்ப நல்லா இருந்தது. எல்லோரும் விரும்பி சாப்பிட்டாங்க.
என் கணவர்,நண்பர் ஒருவரின் வீட்டில்(கர்னாடகாவை சேர்ந்தவர்கள்)ஸ்டஃப்ட் கத்தரிக்காய் சாப்பிட்டதாக சொன்னாங்க. உடனே, இங்கே அறுசுவையில் கர்நாடகா பகுதியை க்ளிக் செய்து, உங்க குறிப்பை கண்டு பிடித்து, செய்தாகி விட்டது. ரொம்ப தாங்க்ஸ், கவிசிவா.
ஜோவார் மாவுன்னா என்ன? சப்பாத்தி தவிர வேறு எதுவும் செய்யலாமா அந்த மாவில்?
அன்புடன்
சீதாலஷ்மி