வாழைப்பழ பிஸ்கட்டுகள்

தேதி: April 5, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமாவு - 150 கிராம்
பேகிங் பவுடர் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் பொடி - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 30 கிராம்
பொடித்த சர்க்கரை - 100 கிராம்
முட்டை - ஒன்று
வாழைப்பழம் - 4
கார்ன் பிளேக்ஸ் - 100 கிராம்
முந்திரி - சிறு துண்டுகள்
அக்ரூட் - 50 கிராம்


 

வாழைப்பழத்தினை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மைதா மாவு, உப்பு, பேகிங் பவுடர், ஜாதிக்காய் பவுடர் இவற்றை ஒன்றாகச் சேர்த்து சலிக்கவும்.
வெண்ணெயை நன்றாகக் குழைத்துக் கொண்டு, சிறிது சிறிதாக சர்க்கரைப் போட்டு குழைத்துக் கொள்ளவும்.
முட்டையை நன்றாக அடித்து அதையும் போட்டு நன்றாக குழைத்துக் கொள்ளவும்.
வாழைப்பழம், பொடித்த முந்திரி, அக்ரூட், கார்ன் பிளேகஸ் சேர்க்கவும்.
சலித்த மாவையும் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
நெய் தடவி, மாவு தூவிய பேகிங் தட்டில் ஒரு அங்குலம் இடைவெளி விட்டு ஒரு தேக்கரண்டி அளவிற்கு வைக்கவும்.
350 டிகிரி F சூட்டில் சுமார் 15 இருந்து 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.


மேலும் சில குறிப்புகள்