கிட்ஸ் மஸ்ரூம் பக்கோடா

தேதி: December 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (5 votes)

 

பட்டன் காளான் துண்டுகள் - 10
பஜ்ஜி மாவு(ரெடிமேட்) – ஒரு கப்
சீரகத்தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி (தேவைப்பட்டால்)
இஞ்சிபூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - சிறிது (தேவைப்பட்டால்)
சீஸ் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க


 

முதலில் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயார்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவை போட்டு அதில் சீரகத்தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, சீஸ் ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.
காளான் துண்டுகளை குறுக்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காளான் துண்டுகளை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
எண்ணெயில் போட்டு பொரிந்ததும் எண்ணெயை வடித்து எடுத்து விடவும்.
சுவையான மஷ்ரூம் பக்கோடா ரெடி. இந்த சுவையான குறிப்பினை நமது அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் <b> திருமதி. இளவரசி </b> அவர்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் இளவரசி! உங்கள் பகோடா பார்க்க நன்றாக இருக்கின்றது. நான் கடலை மாவில் பகோடா செய்வேன். இது புது விதமாக இருக்கின்றது.நீங்கள் செய்ததும் கடலை மாதானே? காளானும் சேர்த்து செய்துளிர்கள், நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும். செய்து பார்த்து விட்டு சொல்கின்றேன்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,
அறிவாளிக்கு சொல்லே ஆயுதம்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு என் நன்றி..

யோகா உங்களின் உடனடியான பின்னூட்டத்திற்கு என் நன்றியும்,மகிழ்ச்சியும்...
கடலைமாவு உபயோக்கிகலாம்
ரெடிமேட் பஜ்ஜிமாவு என்பது கடலைமாவுடன் கலக்கும் மற்ற பொருட்களும் அதிலேயே கலந்திருக்கும்.
வேறு ஏதும் சேர்க்கவேண்டிய அவசியமில்லை.விருப்பப்பட்டால் மட்டும் உப்பு ,காரம் சிறிது சேர்க்கலாம்.செய்து பாருங்கள்...
சுகா நலமா இருக்காங்களா?அவர்களுக்கு என் அன்பை சொல்லவும்....
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

சிம்ப்ளி சூப்பர்.நிச்சயம் செய்து பார்ப்பேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நலமா இருக்கீங்களா?
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி...

செம்பருத்தியின் தளிர் இலைகளை நனைத்தெடுத்து இதுபோல் பொறித்தாலும் சுவையாக இருக்கும்.
செய்து பாருங்கள்.
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

இளவரசி அருமையான ஈசியான குறிப்பு. காளானில் எது செய்தாலும் சாப்பிடுவேன். மஷ்ரூம் எனக்கு அவ்வளவு பிடிக்கும் :-). இப்பவே சாப்பிட தோணுது. ஆனால் தற்போது மஷ்ரூம் கைவசம் இல்லை :-(. இந்த வாரம் வாங்கி சாப்பிட்டுட்டுதான் மறுவேலை.

செம்பருத்தி இலையிலும் செய்யலாமா? இங்கே பெரிய கீரைகளை அரிசிமாவில் தோய்த்து சிப்ஸ் போல் செய்து பாக்கெட்டில் விற்பார்கள். ரொம்ப நல்லா இருக்கும். இனி அதையும் வீட்டிலேயே செய்துட வேண்டியதுதான்.

அன்புடன்
கவிசிவா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹை illavaraci உஙலொட மஷ்ரும்பஜ்ஜி very tasty.i like it.

தங்களின் அன்பான ஆர்வமான பின்னூட்டத்திற்கு என் நன்றி...
உங்களுக்கும் மஷ்ரூம் பிடிக்குமா?எனக்கும்தான்..மார்கெட் போனவுடன் என் முதல் சாய்ஸ் இதுவாத்தான் இருக்கும்..:)

நேரம் கிடைக்கும்போது பேசலாம் (gtalk ல்)

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

தங்களின் பின்னூட்டத்திற்கு என் நன்றியும்,மகிழ்ச்சியும்

அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

ஹாய் இளவரசி மேடம் நலமா?பேசி ரொம்ப நாள் ஆச்சு.இந்த பகோடா செய்தேன் ரொம்ப நல்லாஇருந்துச்சு.நான் 2தான் சாப்பிட்டேன்,நிறைய சாப்பிட ஆசைதான்,ஆனால் குழந்தைக்கு பால் குடுப்பதால் மஷ்ரூம் சாப்பிடலாமானு தெரியல அதான் கொஞ்சமா சாப்பிட்டேன் ஆனா நல்லாருந்துது.

Kalai

சாரிம்மா இப்பதான் பார்க்கிறேன்...உன் பதிவை...
மஸ்ரூம் நல்ல சத்துள்ளது..குறிப்பா கால்சியம் நிறைய இருக்கு அதனால நல்லா
சாப்பிடு..நன்றிம்மா
அன்புடன்
இளவரசி

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.