இஞ்சி துவையல்

வழங்கியவர் : srividhyaiyer
தேதி : வெள்ளி, 18/12/2009 - 03:42
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
- 6 " இஞ்சி துண்டு
- உளுத்தம் பருப்பு ஒரு கப் (சிறியது)
- புளி - ஒரு கொட்டை பாக்கு அளவு
- காய்ந்த மிளகாய் 2
- உப்பு தேவையான அளவு
- பெருங்காயம் சிறிதளவு
- எண்ணெய் -வதக்குவதற்கு
- வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பை லேசாக சிவக்கும் படி வறுக்கவும்.
- பிறகு காய்ந்த மிளகாயையும் பெருங்காயத்தையும் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக், அதையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- சூடு ஆறிய பிறகு வறுத்த பொருட்களுடன் உப்பு புளி சேர்த்து மிக்ஸியில் நற நற வென்று அரைக்கவும்.
Note:
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடவோ அல்லது மோர் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ளவோ மிகவும் நன்றாக இருக்கும். அதிக காரம் சாப்பிடாதவர்கள் சிறிது தேங்காயும் வறுத்து சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
- கருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.
- அச்சிடுவதற்கு ஏற்ற பக்கம்
வித்யா இஞ்சி துவையல் நல்லா இருக்குபா நன்றி
என்னுடைய குறிப்பைப் பார்த்து சமைத்து பின்னூட்டமும் எழுதியமைக்கு மிக்க நன்றி ஹமீத் பாத்திமா