ஸ்டார் ஹோட்டல் தந்தூரி சிக்கன்

தேதி: December 19, 2009

பரிமாறும் அளவு: 4-6

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.2 (5 votes)

 

சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
தயிர் - 200 மில்லி
சில்லி பவுடர் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
முட்டை - ஒன்று
ராக் சால்ட் - அரைஸ்பூன்
கசூரி மேத்தி பவுடர் - 1-2 டேபிள்ஸ்பூன்
கரம்மசாலா பவுடர் (ஏலம்,பட்டை,கிராம்பு) - அரைஸ்பூன்
ரெட் கலர் பவுடர் - 2 பின்ச்
எலுமிச்சை - பாதி (பெரிய பழம்)
உப்பு - தேவைக்கு


 

சிக்கனை சுத்தம் செய்து விருப்பம் போல் துண்டு போட்டு தண்ணீர் விட்டு நன்கு கழுவி வடிகட்டிக் கொள்ளவும்.
நன்றாக தண்ணீர் வடிந்தபின்பு மேற்குறிப்பிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலந்து குறைந்தது 3 மணி நேரமாவது ஊறவைக்க வேண்டும். முதல் நாள் கூட தயார் செய்து வைத்துகொள்ளலாம்.
பின்பு ஊறிய சிக்கனை தந்தூரி அடுப்பிலோ அல்லது கிரில் செய்தோ அல்லது பொரித்தும் சாப்பிடலாம்.
எப்படி சாப்பிட்டாலும் தந்தூரி டேஸ்ட் இருக்கும். இதில் ராக் சால்ட் சேர்ப்பது மிகவும் முக்கியம். ராக் சால்ட் துண்டாக இருந்தால் பொடித்துக் கொள்ளவும்.
ஆனியன் கேரட், வெள்ளரி, கோஸ் ஆகியவற்றை நறுக்கி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாலட் தயார் செய்து அத்துடன் பரிமாறலாம்.
சுவையான ஸ்டார் ஹோட்டல் தந்தூரி சிக்கன் ரெடி.


இதனை ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், பிரியாணி வகை, ரொட்டி, நாண், குபூஸ், அமூஸ் போன்றவற்றுடன் பரிமாறலாம். சிக்கன் தயார் செய்த மசாலா எப்படியும் மிகுதியாக இருக்கும். அவற்றை நாம் மற்ற வகை செய்ய விருப்பம் போல உபயோகிக்கலாம். இதனை சிக்கன் டிக்கா செய்யவும் பயன்படுத்தலாம். போன்லெஸ் சிக்கனை இதே மசாலாவில் மிக்ஸ் செய்து மரக்குச்சியில் அடுக்கி சுட்டும் எடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இன்று எங்கள் வீட்டில் உங்கள் தந்தூரி சிக்கன் தான் . ரொம்ப அருமையாக வந்தது. கசூரி மேத்தி பவுடர் என்றால் என்ன ?? அது இல்லாமல் தான் செய்தேன் .

கசூரி மேத்தி பவுடர் என்றால் காய்ந்த வெந்தயக்கீரை பொடி பேக்கட்டுக்களில் கிடைக்கிறது.இன்று தான் உங்கள் கமெண்ட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது..

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.